முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள மையங்கள் அமைந்துள்ள நகரங்களின் விவரங்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவச் செல்வங்கள் https://pgcuet.samarth.ac.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து விவரங்களை அறியலாம்.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு எனப்படும் க்யூட் தேர்வி தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2024-25) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு வரும் மார்ச் 11 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இந்த கியூட் தேர்வுக்களுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அவற்றை /pgcuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












