2020 ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள ஜேஇஇ மெயின் தேர்விற்கான அனுமதிச் சீட்டு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி, என்ஐடி உள்ளிட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காகப் பிரதான நுழைவுத் தேர்வு ஜேஇஇ (JEE) நடத்தப்படுகிறது. 2020-ஆம் கல்வியாண்டிற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. ஜனவரி 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் JEE Main 2020 தேர்வு நடைபெற உள்ளது.
தற்போது ஜேஇஇ மெயின் தேர்விற்கான தேர்வு நுழைவுச்சீட்டு டிசம்பர் 6 (இன்று) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச் சீட்டினை jeemain.nta.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
English summary
NTA JEE Main 2020 Exam: Admit Card Expected Today at nta.ac.in
Story first published: Friday, December 6, 2019, 16:19 [IST]


Click it and Unblock the Notifications












