நீட் தேர்வு எழுதும் மாணவர்களே...ஹால்டிக்கெட் ரெடி...டவுன்லோட் பண்ணுங்க...!

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர உதவும் நீட் நுழைவுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்களை தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. எனவே, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யலாம். ஹால் டிக்கெட்களை டவுன்லோடு செய்ய neet.nta.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
நீட் தேர்வு (NEET -தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) முன்பு AIPMT (அனைத்திந்திய மருத்துவத்துக்கு முந்தைய தேர்வு) என்று குறிப்பிடப்பட்டது.

து இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகும். மருத்துவத் துறையில் ஒரு தொழிலை உருவாக்க விரும்பும் மாணவர்களின் திறனைத் தீர்மானிக்க இந்த தேசிய அளவிலான தேர்வு தேசியத் தேர்வு முகமையால் (NTA -National Testing Agency) ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிறந்த மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை பெறலாம்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களே...ஹால்டிக்கெட் ரெடி...டவுன்லோட் பண்ணுங்க...!

2024 - 25-ம் கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ, பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்கும் நீட் தேர்வு வரும் மே மாதம் 5-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த தேர்வுக்கான முடிவுகள் 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வானது 3 மணி நேர கால அளவைக்கொண்டதாகும்.

இதுதொடர்பாக என்டிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்படஇளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி, 2024-25-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் வரும் 5-ம் தேதி நேரடி முறையில் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 9-ல் தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கு நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் வரை விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்களை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம். நீட் தேர்வு, மையங்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 / 6922 7700 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். இதுதவிர, [email protected] மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The National Testing Agency or NTA has released admit cards for NEET UG 2024 . Candidates can download it from the official websites exams.nta.ac.in and neet.ntaonline.in. NEET 2024 admit card direct link It may be mentioned here that the NEET UG 2024 entrance test is scheduled to be held on May 5, 2024, in a single shift from 2 PM. to 5:20 PM. The examination will be held in 571 cities across India and 14 cities outside the country in pen and paper mode.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+