12-ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு, நீட் தேர்வு, 2019 மே 5ம் தேதியில் நடைபெறவுள்ளது.

தேசிய தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு, நவம்பர் 1ம் தேதியன்று விண்ணப்ப பதிவு துவங்கியது. ஆன்லைன் வழியிலான, விண்ணப்ப பதிவு நவம்பர் 30-ம் தேதியன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொது பிரிவினரில், 25 வயதுக்கு அதிகமானவர்களும், நீட் தேர்வில் பங்கேற்கலாம் என சமீபத்தில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு செய்ய ஒரு வார காலம் அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இந்தக் கூடுதல் அவகாசமானது இன்றுடன் (டிசம்பர் 7) முடிவடைகிறது.
English summary
NEET Application Form 2019, Registration - Last Date December 7
Story first published: Friday, December 7, 2018, 12:35 [IST]


Click it and Unblock the Notifications












