பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 2-ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின.
தேர்வு முடிவு பியூசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளைக் காண அதிகாரப்பூர்வ இணையதளமான http://karresults.nic.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லலாம்.

இணையதளத்துக்குச் சென்ற பின்னர் 'PUC Results announced on 25th May 2016 at 11:00 AM' என்ற லிங்க்கில் கிளிக் செய்யவேண்டும்.
பின்னர் உங்களது பதிவு எண் போன்ற விவரங்களைக் கொடுத்து மதிப்பெண் விவரங்களைப் பெறலாம்.
மேலும் அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு அடுத்த படிப்புகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் (மே 26) கல்லூரிகளில் கிடைக்கும்.
இந்த ஆண்டு பியூசி-யில் 57.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போலவே மாணவர்களை விட, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்ருள்ளனர்.
தேர்வு முடிவுகளை கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் வெளியிட்டார்.


Click it and Unblock the Notifications

