சென்னை பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் வரும் டிசம்பர் 22ம் தேதியன்று துவங்கி வார இறுதி நாட்களில் மட்டும் நடத்தப்படும் என பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளதாவது:-
தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுகலை மற்றும் தொழில் படிப்புகளுக்கான 2018-ஆம் ஆண்டு தேர்வு வரும்22ம் தேதியன்று துவங்கி நடைபெறவுள்ளது.
வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இத்தேர்வு நடைபெறும். மாணவர்கள் www.ideunom.ac.in என்னும் தொலைநிலைக் கல்வி நிறுவன இணையத்தில் இருந்து தேர்வு அறை நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தேர்வுக் கால அட்டவணை, தேர்வு மைய விபரங்களும் இந்த இணைய முகவரியிலேயே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
chennai university university exam education chennai சென்னை பல்கலைக் கழகம் பல்கலைக் கழகம் தேர்வு கல்வி
English summary
Chennai University Distance Education Exam Starts From Dec 22
Story first published: Thursday, December 13, 2018, 11:17 [IST]


Click it and Unblock the Notifications












