எதிர்காலத்தில் வாய்ப்புகளை அள்ளித் தரப்போகும் போகும் டிப்ளமோ படிப்புகள்

இன்றைய காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகளை அதிக அளவில் அள்ளித் தரும் படிப்புகளில் கம்ப்யூட்டர் சம்பந்தமான படிப்புகள், மல்ட்டிமீடியா படிப்புகள், மருத்துவப் படிப்புகள், துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன.

அதைப் போலவே எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்குவதில் சில டிப்ளமோ படிப்புகள் முதலிடத்தில் உள்ளன.

டிப்ளமோ படிப்பானது பலருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. டிப்ளமோ திட்ட முறை உங்கள் வேலை மற்றும் கற்றல் தேவைகளுடன் இணைந்து அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதை மாணவர்கள் வரவேற்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுபவர்களாகவோ அல்லது பயிற்சி பெற்றவர்களாகவோ பணிபுரிகின்றனர், அவர்கள் டிப்ளமோ படிப்பில் அதிகம் சேர விரும்புகின்றனர். மேலும், தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் அவர் விரும்பி டிப்ளமோ படிப்பைத் தேர்வு செய்கின்றனர்.

வாய்ப்புகளை அள்ளித் தரப்போகும் போகும் டிப்ளமோ படிப்புகள்

படிப்புக் காலம்

பெரும்பாலும் பட்டப்படிப்புகள் 3 ஆண்டு முதல் 5 ஆண்டு காலத்தைக் கொண்டவையாக உள்ளன. ஆனால் டிப்ளமோ படிப்புகள், துறை சார்ந்து 6 மாத காலம் முதல் 2 ஆண்டு காலத்தைக் கொண்டவையாக உள்ளன. இன்ஸ்டிடியூட், கல்லூரி, பல்கலைக்கழகத்தால் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. எனவே, மாணவ, மாணவிகள் குறுகிய கால டிப்ளமோ படிப்புகளைத் தேர்வு செய்து அதில் எளிதில் வெற்றி காண்கின்றனர். அடுத்ததாக அவர்களுக்கு வேலைவாய்ப்பும் எளிதில் கிடைக்கிறது.

படிப்புக்கான காலம் குறைவாக இருப்பது சாதகமான விஷயம் என்றால், கல்விக் கட்டணமும் குறைவாக இருப்பது 2-வது சாதகமான விஷயமாக இன்றைய மாணவர்களால் பார்க்கப்படுகிறது.

டிப்ளமோ படிப்பானது, ஒரு குறிப்பிட்ட துறையில் செழிக்க தேவையான தொழில்முறை திறன்களில் ஒரு மாணவருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு டிப்ளமோ பாடத்திட்டம், பொதுவாக, கோட்பாட்டு அறிவுக்கு இலகுவானதாக இருக்கும். அதே நேரத்தில் அதன் விரிவான நடைமுறை அறிவுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இருக்கும். தொழில்முறை தேவைகளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட படிப்பாக அது இருக்கும்.

வாய்ப்புகளை அள்ளித் தரப்போகும் போகும் டிப்ளமோ படிப்புகள்

டிப்ளமோ படிப்பைத் தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

உங்களுக்கு விருப்பமான, சரியான படிப்பைத் தேர்வு செய்ய வேண்டிய உங்கள் தொழில் வாழ்க்கையின் அடிப்படையான விஷயமாக இருக்கும். நீங்கள் டிப்ளமோ படிப்பை படிக்க முடிவு செய்தால் சரியான படிப்பை எப்படி தேர்வு செய்வது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

அதற்கான அளவுகோல்கள், விஷயங்கள் என்ன?

படிப்புக்குரிய சந்தை தேவை மற்றும் அளவிடுதல்: ஒரு படிப்பைத் தேர்வு செய்யும்போது அந்தப் படிப்புக்கு மார்க்கெட்டில் உள்ள நிலைமை என்ன என்பதை ஆய்வு செய்யவேண்டும். எதிர்காலத்தில் அந்த படிப்புக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்குமா என்பதை கண்டறிவது நல்ல விஷயமாக இருக்கும்.

படிப்புக்கான கால அளவு மற்றும் செலவு: அடுத்ததாக படிப்புக்கான கால அளவை கணக்கிடவேண்டும். 6 மாதம், ஒரு வருடம், 2 வருடம் உள்ள டிப்ளமோ படிப்புகளை அலசி ஆராய்ந்து உங்களுக்குத் தகுந்ததை தேர்வு செய்தல் நலம். மேலும் படிப்புக்கான கட்டணச் செலவையும் கணக்கில் கொள்ளவேண்டும். படிப்பைப் படிக்க போதுமான நிதி உங்களிடம் உள்ளதா என்பதை முன்கூட்டியே திட்டமிடுதல் மிகச் சிறந்ததாக இருக்கும்.

கற்றல் முறை: சரியான டிப்ளமோ படிப்பை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தவேண்டும். கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருப்பவரால்தான் டிப்ளமோ படிப்பில் நன்கு பரிமளிக்க முடியும். வேலைக்கான பயிற்சி மற்றும் கல்வி இணைந்து இருப்பதால் இதைப் பயில்வது சிறப்பானதாக இருக்கும்.

உங்கள் டிப்ளோமாவுக்குப் பிறகு நீங்கள் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது அவை மதிப்புமிக்க அனுபவமாக கருதப்படும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

டிப்ளமோ படிப்பை வழங்கும் நிறுவனங்கள்: உங்களுக்கு விருப்பமான படிப்புகளை எந்தெந்த நிறுவனங்கள் வழங்குகின்றன என்பதை முதலில் கவனிக்கவேண்டும்.
நீங்கள் அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனத்தில் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிப்பதை உறுதி செய்யும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

தனிப்பட்ட ஆர்வம்: குறிப்பிட்ட படிப்பின் மீது ஆர்வம் உள்ளதை உறுதி செய்யவேண்டும். உங்கள் தனிப்பட்ட நலன்கள், ஆர்வம் மற்றும் உங்களின் எதிர்காலத்திற்கான கனவுகளுடன் இணைந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது எப்போதும் சிறந்ததாகவும், அவசியமானதாகவும் இருக்கும். உங்கள் ஆர்வங்களும் ஈடுபாடும்தான் கற்றலை எளிமையாக்குகிறது. அதுவே உங்களை சிறந்து விளங்க வைக்கும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இந்த அளவுகோல்களை மனதில் கொண்டு, நீங்கள் உங்கள் ஆராய்ந்து உங்களுக்கு மிகவும் பொருத்தமான டிப்ளமோ படிப்புகளைத் தேர்வு செய்யலாம். அல்லது, நீங்கள் உயர்கல்வித் துறையில் உள்ள நிபுணர்களின் உதவியைப் பெறலாம்.

துறைகள்: நிர்வாகப் படிப்புகள், குறைந்த காலத்தில் படிக்கும் இன்ஜினியரிங் படிப்புகள், ஃபேஷன் டிசைனிங், கிராபிக் டிசைனிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், அனிமேஷன் மற்றும் மல்ட்டிமீடியா துறை சார்ந்த படிப்புகள், ஈவென்ட் மேனேஜ்மெண்ட், தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்புகளுக்கு தற்போது அதிக மவுசு உள்ளது. எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை இவை அள்ளித் தரப் போகின்றன என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இந்த படிப்புகளைத் தேர்வு செய்து பயிலும்போது அந்தத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். எந்தவொரு படிப்பையும் ஆழ்ந்து படித்தும், அதில் சிறப்பு பெறும்போது அந்தத் துறையில் இறங்கும் மாணவர்களின் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும்.

வாய்ப்புகளை அள்ளித் தரப்போகும் போகும் டிப்ளமோ படிப்புகள்

சிறந்த டிப்ளமோ படிப்புகளில் சிலவற்றை இங்கு தருகிறோம்

பி.ஜி. டிப்ளமோ இன் மேனேஜ்மெண்ட், டிப்ளமோ இன் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் கிராபிக் டிசைன், டிப்ளமோ இன் ஹோட்டல் மேனேஜ்மெண்ட், டிப்ளமோ இன் ஃபேஷன் டிசைனிங், டிப்ளமோ இன் அனிமேஷன் அன்ட் மல்ட்டிமீடியா, டிப்ளமோ இன் நர்ஸிங், டிப்ளமோ இன் ஈவென்ட் மேனேஜ்மெண்ட், டிப்ளமோ இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டிப்ளமோ இன் டிஜிட்டல் மார்க்கெட்டிங்.

இதுபோன்ற படிப்புகளில்தான் தற்போதைய மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

படிப்புக்கு செலவு

இதுபோன்ற டிப்ளமோ படிப்புகளை நாம் உள்நாட்டில் பயிலும்போது செலவு குறைவாக இருக்கும். இதே படிப்புகளை பிரசித்தி பெற்ற இன்ஸ்டிடியூட்டுகள், பல்கலைக்கழகங்களில் பயிலும்போது அதற்கான செலவு சில லட்சங்களில் இருக்கலாம். இதே படிப்புகளை வெளிநாடுகளில் சென்று பயிலும் அதற்கான செலவுகள் சற்று அதிகமாகக் கூடும். அதேநேரத்தில் வெளிநாடுகளில் பிரபலமான உயர்கல்வி இன்ஸ்டிடியூட்களில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் எளிதில் கிடைக்கும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

நிர்வாகவியல், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், இன்ஜினியரிங், ஊடகத்துறை, மல்ட்டிமீடியா என பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகளை எதிர்காலத்தில் இத்தகைய டிப்ளமோ படிப்புகளை அள்ளித் தரும் என்பதில் சந்தேகமில்லை.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Read all about the computer related courses, multimedia courses, medical courses, para-medical courses which are among the courses which are opening huge opportunities in today's time.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+