பனிரெண்டாம் வகுப்பு முடித்தாகிவிட்டதா மெடிக்கல் கனவா வாங்க தெரிஞ்சுக்குவோம்

மருத்துவம் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களே நீங்கள் படிக்க பத்துக்கு மேற்ப்பட்ட மருத்துவ துறைகள் இருக்கின்றது .

By Sobana

பிளஸ் டூ முடிச்ச மாணவர்களே ,, 12 ஆம் வகுப்பு முடிச்சாச்சு கனவு நோக்கி போகனும் என்ன படிக்கலாம் ,,என்ற சிந்தனை உங்களை சிறகு முளைக்க வைக்கிறதா இதோ உங்களுக்கான பறக்கும் வழிகாட்டுகிறது ஒன் இந்தியா. பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களே நீங்கள் மெடிக்கல் துறையை தேர்ந்தெடுக்க விருப்பமா , வாங்க உங்க கனவு உலகத்துல இருக்கற வாய்ப்பு தெரிஞ்சுகோங்க வாங்க மருத்துவர்களே !
மருத்துவம் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களே நீங்கள் படிக்க பத்துக்கு மேற்ப்பட்ட மருத்துவ துறைகள் இருக்கின்றது .

எம்பிபிஎஸ் :(பேச்சுளர் ஆஃப் மெடிசன்ஸ பேச்சுளர் ஆப் சர்ஜரி)


எம்பிபிஎஸ் படிக்க ஆசையா மாணவர்களே , எம்பிபிஎஸ் படிக்க இயற்பியல் , வேதியியல் , உயிரியல் படித்திருக்க வேண்டும் . ஐந்து வருடம் ஆறுமாதம் படிக்க வேண்டும் . படித்து முடித்து புதிதாக வேலை தேடுவோர்க்கு ரூபாய் நான்கு லட்சம் முதல் எட்டு லட்சம் வரை வருட சம்பளத்துடன் வேலை கிடைக்கும் . மருத்துவ படிப்பு என்பது மகத்துவம் வாய்ந்த படிப்பாகும் . உயிர் காக்கும் தொழிலை கல்வியாக படிக்கும் அனைவரும் பெருமிதத்துடன் கற்க வேண்டும் . வாருங்கள் டாக்டரே கத்துக்குவோம் .

மெடிக்கல் படிக்கனுமா

பிடிஎஸ் :(பேச்சுலர் ஆஃப் டெண்டல் சர்ஜரி )


மருத்துவ துறையின் மதிப்புமிக்க துறையில் இதுவும் ஒன்றாகும் . நன்கு கற்றுகொள்ள வாய்ப்பாக அமையும் .கற்றுகொள்ள தயாராகுங்கள் மருத்துவ துறையில் இதுவும் ஒன்றாகும் . பல்மருத்துவம் , பல் அறுவை சிகிச்சை ஆகியவற்றில் இதுவும் ஒன்றாகும் , வேறு பணியிடமாக இருந்தாலும் ஒரே தகுதியாகத்தான் கருதப்படும் . துறை , பணியிடம் வேறு ஆனால் ஒரே மதிப்பு ஆகும். இத்துறை கற்க ஐந்து வருடம் பயில வேண்டும். வருடத்தில் ரூபாய் நான்கு முதல் ஏழு லட்சம் வரை சம்பளம் பெற முடியும். பிடிஎஸ் பயில இருப்பவர்கள் பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல் , கெமிஸ்ட்ரி படித்திருக்க வேண்டும். மேலும் உங்களுக்கான வாய்ப்பு பார்மசி துறையிலும் பெறலாம் .

"நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் . என்ற பொன்மொழி மருத்துவர்க்கு பொருந்தும் அவர்களே அனைத்து உயிர்களையும் காக்கும் பொறுப்புடையவர்கள் ஆவர் ".

மெடிக்கல் படிக்கனுமா

பிஏஎம்எஸ் :(பேச்சுலர் ஆஃப் ஆயுர்வேதிக் மெடிசன் அண்டு சர்ஜரி ):


அறிவியல் ஆயுர்வேதாவில் விருப்பமுள்ள மாணவரா நீங்கள் , வாருங்கள் உங்களுக்கான தேவை இந்த மாறி வரும் உலகில் அதிகரித்தவண்ணமே உள்ளது. ஆம் ஆயுர்வேத மருத்துவம் விரும்பும் மக்களின் தேவை அதிகரித்து வருகின்றது. எந்திர உலகில் வாழும் நமக்கு பாரம்பரியம் மற்றும் அதிலுள்ள எளிமை தன்மை நம்மை திசை திருப்புவது இயல்பே ஆகவே உங்கள் துறைக்கான வரவேற்புக்கு என்றும் பஞ்சம் இருக்காது . ஆகவே நீங்கள் பயணிக்கும் பயணம் இராஜ பயணம் என்ற எண்ணத்துடன் பயணியுங்கள் அன்பு மாணவர்களே .


ஆயுர்வேத மருத்துவராகும் கனவு இருத்தல் நலம் .பிளஸ் டூ முடித்த மாணவரா நீங்கள் உயிரியல் பாடம் மற்றும் வேதியியல் , இயற்பியல் 12 ஆம் வகுப்பில் முடித்திருக்க வேண்டும் . ஐந்து வருடம் ஆறு மாதம் படிப்புகாலம் மற்றும் படித்து முடித்த உங்களுக்கு நான்கு லட்சம் முதல் ஆறு லட்சம் ஆரம்ப சம்பளமாக கிடைக்கும் . உங்களுக்கான வருங்கால தேவை என்றும் அதிகரித்து காணப்படுகிறது . ஆதலால் சிறப்பாக படியுங்கள் மாணவர்களே ,,

" செய்து முடிக்கும் வரை
செய்யாதது போலத்தான் இருக்கும்
மேலும் அது
செய்ய முடியாதது போல்தான் இருக்கும் "...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about medical studies to the 12th standard students.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X