டி.ஆர்.பி வருடாந்திர தேர்வுகால அட்டவணை வெளியீடு!

டி.ஆர்.பி வருடாந்திர தேர்வுகால அட்டவணை முதன் முறையாக வெளியிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

சென்னை : முதல் முறையாக டி.ஆர்.பி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார்.
மேலும் டெட் தேர்வு போக ஆறு போட்டி தேர்வுகள் நடக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 பணியிடங்கள் நிரப்பப்படும். எந்தெந்த பணிகளுக்கு எப்போது தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணையை முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

டி.ஆர்.பி வருடாந்திர தேர்வுகால அட்டவணை  வெளியீடு!

வருடந்தாந்திர தேர்வுக்கால அட்டவணை முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த விபரங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் வாரிய தேர்வுக் கால அட்டவணை

பதவின் பெயர் - முதுகலை பட்டதாரி ஆசிரியர்
காலியிடம் - 2,119
அறிவிப்பு நாள் - மே 2வது வாரம்
தேர்வு நாள் - ஜூலை 2
தேர்வு முடிவு -

பதவின் பெயர் - அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்
காலியிடம் - 1,137
அறிவிப்பு நாள் - ஜூன் 2வது வாரம்
தேர்வு நாள் - ஆகஸ்ட் 13
தேர்வு முடிவு - அக்டோபர்

பதவின் பெயர் - சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவியம்)
காலியிடம் - 1,188
அறிவிப்பு நாள் - ஜூலை 3வது வாரம்
தேர்வு நாள் - ஆகஸ்ட் 19
தேர்வு முடிவு - நவம்பர்

பதவின் பெயர் - பள்ளி விவசாய ஆசிரியர்
காலியிடம் - 25
அறிவிப்பு நாள் - ஜூலை 3வது வாரம்
தேர்வு நாள் - ஆகஸ்ட் 20
தேர்வு முடிவு - நவம்பர்

பதவின் பெயர் - அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்
காலியிடம் - 1,883
அறிவிப்பு நாள் - ஜூலை 4வது வாரம்
தேர்வு நாள் - செப்டம்பர்
தேர்வு முடிவு - அக்டோபர்

பதவின் பெயர் - உதவி தொடக்கக் கல்வி அதிகாரி
காலியிடம் - 38
அறிவிப்பு நாள் - ஆகஸ்ட் 2வது வாரம்
தேர்வு நாள் - செப்டம்பர் 30
தேர்வு முடிவு - டிசம்பர்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
School Education Minister Sengottaiyan has told that Teacher Recruitment Board - Annual Planner 2017 released first time in history. 6 Competitive examinations are held apart from the choice of the TET Exam.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X