தற்போது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான படிப்புகளில் ஒன்றாகவும், மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் படிப்புகளில் ஒன்றாகவும் மெடிக்கல் சயின்ஸஸ் படிப்புகள் உள்ளன.
தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் பயோ-மெடிக்கல் அறிவியல் படிப்புகளைப் படிக்க அதிக அளவில் தேர்வு செய்கின்றனர்.
இது அவர்களுக்கு அதிநவீன வசதிகள் மற்றும் அனுபவத்தைப் பெறவும், புகழ் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் ஒத்துழைப்புடன் இணைந்து பயிலும் வாய்ப்பையும் வழங்குவதால் அவர்கள் அதிக அளவில் வெளிநாடுகளைத் தேர்வு செய்கின்றனர். வெளிநாட்டில் படிப்பது இரு நாடுகளின் கலாச்சார கற்றல் அனுபவங்களையும் வழங்குகிறது மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்துகிறது என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

பயோமெடிக்கல் சயின்ஸ் படிப்பு என்பது திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய நுண்ணறிவு மற்றும் சுகாதாரத் துறையில் புதிய முன்னேற்றங்களின் உற்சாகத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
பயோமெடிக்கல் சயின்ஸ் படிப்பு என்பது உயிரியல் மற்றும் மருத்துவத்தின் கலவையாகும், இது உயிர்வேதியியல், உடலியல், செல் மற்றும் மூலக்கூறு உயிரியல், உடற்கூறியல் மற்றும் ஹிஸ்டாலஜி, தொற்றுநோயியல், மருந்தியல், நோயெதிர்ப்பு மற்றும் நச்சுயியல் ஆகியவற்றின் முழுமையான ஆய்வை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இந்த குறிப்பிட்ட படிப்பைப் படிப்பது, மருந்து கண்டுபிடிப்புத் துறையில் பணியாற்ற உங்களுக்கு உதவும். அதே நேரத்தில் சரியான தீர்வுகளைத் தாக்க நோய்களின் உயிர்வேதியியல் தன்மையைப் படிக்க உங்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை வழங்கும்.
எம்பிபிஎஸ் மற்றும் பயோமெடிக்கல் சயின்ஸ் படிப்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன....
எம்பிபிஎஸ் படிப்பு நோய்கள், சிகிச்சைகள், குணப்படுத்தும் நுட்பங்கள் மற்றும் தடுப்பு ஆகியவற்றைச் சுற்றி அமைந்துள்ளது, அதே நேரத்தில் உயிரியல் மருத்துவ அறிவியல் (பயோ மெடிக்கல் சயின்ஸ்) செல் உயிரியல் மற்றும் மூலக்கூறு உயிரியலை வெவ்வேறு பாதைகள் மற்றும் மூலக்கூறுகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
2 பாடப்பிரிவுகளும் ஆரம்பத்தில் ஒரே மாதிரியான பாடங்களைக் கொண்டிருந்தாலும், அணுகுமுறைகள் வேறுபட்டவை. எம்பிபிஎஸ் படிப்பு, நோயாளியை மையமாகக் கொண்டது, அதே சமயம் பயோமெடிக்கல் சயின்ஸ் பாடத் திட்டங்கள் கோட்பாடு, சிகிச்சை முறை மற்றும் ஆய்வக வேலைகளில் அதிக கவனம் செலுத்துகிறது.
பயோமெடிக்கல் சயின்ஸ் நோய்கள் மற்றும் மருந்துகளின் உயிர்வேதியியல் தன்மையை இன்னும் ஆழமாகப் பார்க்கிறது, அதே நேரத்தில் எம்பிபிஎஸ் படிப்பு ஒரு தனிநபரின் அல்லது சமூகத்தின் ஆரோக்கியத்துக்குப் பொறுப்பான மருத்துவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சொல்லலாம்.
தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் பயோமெடிக்கல் அறிவியலைப் படிக்க அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இது அவர்களுக்கு அதிநவீன வசதிகள், பாடத்திட்டங்கள் மற்றும் அனுபவத்தைப் பெறவும், புகழ் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் பழகி, பயிலும் வாய்ப்பையும் வழங்குகிறது.
வெளிநாட்டில் படிப்பது இரு நாட்டு கலாச்சார கற்றல் அனுபவங்களையும் வழங்குகிறது மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. இந்த நன்மைகள் காரணமாக வெளிநாட்டில் பயோமெடிக்கல் அறிவியலில் உயர்கல்வியைத் தொடர்வது இந்திய மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கிறது.

பயோ மெடிக்கல் சயின்ஸ் படிப்பு படிக்க மாணவர்களை ஈர்க்கும் நாடுகள்
கனடா: கனடாவில் உள்ள டொரண்டோ, மெக்கில் போன்ற பல்கலைக்கழகங்களை மாணவர்களை அதிக அளவில் இந்த படிப்புக்காக இழுக்கின்றன.
ஜெர்மனி: ஜெர்மனியில் உள்ள மியூனிச் டெக்னிக்கல் பல்கலைக்கழகம், ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றை இந்திய மாணவர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.
பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டில் உள்ள சோர்போன், எக்கோல் நார்மல் சுப்பீரியர் போன்ற பல்கலைக்கழகங்கள் பயோ மெடிக்கல் சயின்ஸ் படிப்புகளை வழங்குகின்றன. இந்த பல்கலைக்கழகங்களுக்கும் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
ஜப்பான்: ஜப்பானில் உள்ள டோக்கியோ, கியோட்டோ பல்கலைக்கழகங்களில் பயோ மெடிக்கல் சயின்ஸ் படிப்புகள் அதிக அளவில் வழங்கப்படுகின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களில் பயோ மெடிக்கல் சயின்ஸ் பட்டப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகள் படிக்க அதிக அளவில் இந்திய மாணவர்கள் விண்ணப்பம் செய்கின்றனர்.
சீனா: பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான் போன்றே சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் பயோ மெடிக்கல் சயின்ஸ் படிப்புகள் அதிகம் வழங்கப்படுகின்றன. இங்குள்ள சிங்குவா பல்கலைக்கழகம், பெகிங் பல்கலைக்கழகம் போன்றவற்றில் அதிக அளவில் வெளிநாட்டு மாணவர்கள் பயோ மெடிக்கல் சயின்ஸ் படிப்புகளைப் பயில்கின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூரில் உள்ள நன்யாங் டெக்னிக்கல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழகம், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் இடிஎச், ஸ்விஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, லாசன் ஆகியவற்றிலும் அதிக அளவில் இந்திய மாணவர்கள் பயோ மெடிக்கல் சயின்ஸ் படிப்புகளை பயில்வதற்கு ஆர்வமாக உள்ளனர்.
இந்தப் படிப்புகளைப் பயில டாடா டிரஸ்ட், இன்லாக்ஸ் சிவ்தசானி பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்குகின்றன.
அட்மிஷன் பெறுவது எப்படி...
இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள், பரிந்துரைக் கடிதங்கள், ஆங்கில மொழித் தேர்ச்சி தேர்வு மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் கூடுதலாக, சேர்க்கை தேவைக்கான விண்ணப்பம் ஆகியவை தேவைப்படும்.
மேலும் படிப்பில் சேர உதவும் வங்கி நிதியுதவிக்கான சான்றிதழ், வங்கி அறிக்கை, பாஸ்போர்ட் நகல், சேர்க்கைக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான சான்றிதழ் ஆகியவையும் தேவைப்படும்.
இதில் சில பல்கலைக்கழகங்கள், மாணவர் விசா, சுகாதாரக் காப்பீடு அட்டை போன்ற விவரங்களையும் கேட்கக்கூடும். இந்தப் படிப்புகளை படித்து முடிக்கும்போது வெளிநாடு, உள்நாடுகளில் நல்ல வேலைவாய்ப்பையும், ஆராய்ச்சிக்கான முன்னுரிமையும் மாணவர்கள் பெற முடியும்.


Click it and Unblock the Notifications












