எங்கு படிக்கலாம்? செராமிக் டெக்னாலஜி!

எதையும் ஆராய்ந்து நோக்குவதோடு, விஞ்ஞான மனப்பான்மை, அலாதியான கற்பனை வளம், புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கான துறைதான் செராமிக் டெக்னாலஜி.

By Kani

எதையும் ஆராய்ந்து நோக்குவதோடு, விஞ்ஞான மனப்பான்மை, அலாதியான கற்பனை வளம், புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கான துறைதான் செராமிக் டெக்னாலஜி.

இதன் மூலம் பீங்கான், களிமண், தொழில்நுட்பம் மட்டுமின்றி செயற்கை எலும்புகள் பற்றிய தொழில்நுட்ப விஷயங்களோடு, செராமிக்கின் குணாதிசயங்கள், உற்பத்தி, பயன்பாடு, வடிவமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களை கற்றுக்கொள்ள முடியும்.

எங்கு படிக்கலாம்? செராமிக் டெக்னாலஜி!

இது ஒரு சவாலான படிப்பாக இருந்தாலும், இதைப்படிப்பதின் மூலம் எதிர்கால வாழ்வை எண்ணங்களுக்கு ஏற்றவாறு செழுமையாக அமைத்துக்கொள்ள முடியும்.

பொதுவாக செராமிக் என்பது களிமண், சிர்கோனியா போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டது. அடிப்படையில் வீட்டிற்கு அழகு சேர்க்கும் டையில்ஸ் கற்களில் இருந்து கார்களில் பயன்படுத்தும் என்ஜின் வரை செராமிக் ஆதிக்கம் செலுத்துகிறது என்றால் மிகையாகது.

செராமிக் டெக்னாலஜி நமது உடலில் இருக்கும் எலும்பு, பற்களை மாற்றி அமைப்பதில் தொடங்கி, கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத வண்ணமயமான கலைப் பொருட்களை தயார் செய்வது வரை பயன்படுத்தப்படுகிறது.

படிப்புகள்:

இந்த வகையான படிப்புகள் டிப்ளமோ, பிஎஸ்சி, பிடெக், பிஇ என பல்வேறு பிரிவுகளில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், மும்பை.

காலேஜ் ஆப் செராமிக் டெக்னாலஜி, கொல்கத்தா.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் செராமிக்ஸ், கொல்கத்தா.

யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, கொல்கத்தா

பி.டி.ஏ., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், குல்பர்கா.

என்ஐடி, ரூர்கேலா.

ஐஐடி பிஹச்யு, வாரணாசி.

கொல்கத்தா பல்கலைக்கழகம். கொல்கத்தா.

ஆந்திர பல்கலைக்கழகம், ஆந்திரா.

பணி என்ன?

இந்த வகையான படிப்பை முடிக்கும் பட்சத்தில் கீழ்கண்ட பொறுப்புகளில் பணியாற்ற முடியும்.

  • செராமிக் டெக்னாலஜிஸ்ட்.
  • செராமிக் டிசைனர்.

வேலை வாய்ப்பு:

செராமிக் டெக்னாலஜி படித்தவர்களுக்கு தனியார் துறை மட்டுமின்றி அரசு நிறுவனங்களிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

  • கிளாஸ் ஆப்டிக்கல் பைபர் தொழிற்சாலைகள்.
  • கண்ணாடி தொழிற்சாலை.
  • உற்பத்திக் கூடங்கள்.
  • ஆய்வுகூடங்கள்.
  • பல்கலைக்கழகங்கள்.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு.
  • மெட்டாலர்ஜிக்கல் ஆராய்ச்சி மையம்.
  • பாபா அணு ஆராய்ச்சி மையம்.
  • பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம்.
  • சிமென்ட் தொழிற்சாலை.

நியூக்ளியர் ஆலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் வாய்ப்புகள் உள்ளன.

சம்பளம்: படித்து முடித்தவுடன் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.

இந்த வகையான படிப்புகளுக்கு வடநாடுகளில் அதிகமான வரவேற்பு வழங்கப்படுகிறது. ஒரு படி மேல் ஏறினால் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் சிறப்பான பணி, தொழில் வாய்ப்புகள் கொண்ட படிப்பு.

எங்கு படிக்கலாம்? அறுவதிலும் இருவது 'லுக்' டெர்மடாலஜி!எங்கு படிக்கலாம்? அறுவதிலும் இருவது 'லுக்' டெர்மடாலஜி!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
What is Ceramic Engineering? Scope and Career Opportunities
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X