படிக்கலாம்... பறக்கலாம்... ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்!

என்ஜினீயரிங் பிரிவுகளில் குறிப்பிடும் அளவிற்கு புகழ்பெற்ற ஒரு துறை ஏரோநாட்டிகல் என்ஜினியரிங்.

By Kani

என்ஜினீயரிங் பிரிவுகளில் குறிப்பிடும் அளவிற்கு புகழ்பெற்ற ஒரு துறை ஏரோநாட்டிகல் என்ஜினியரிங். ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ் படிக்க ஆசைப்படுபவர்கள் மிகவும் கவனமாக கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.

பல்வேறு கல்லூரிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள், தகுதிவாய்ந்த பேராசிரியர்கள், வேலைவாய்புக்கான உதவி போன்ற அம்சங்கள் வழங்கப்படுவதில்லை. எனவே மேற்கூறிய அம்சங்கள் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் உதரணத்திற்கு விடுதி வசதி போன்ற அடிப்படையான விஷயங்கள் வழங்கப்படுகின்றனவா என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டு விண்ணப்பிப்பது சிறப்பு.

 படிக்கலாம்... பறக்கலாம்... ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்!

படிப்புகள்:

இத்துறையில் பி.இ., பி.டெக்., டிப்ளமோ உள்ளிட்ட முறைகளில் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.
ஐஐடி.,யில் இந்தப்பிரிவில் பட்டபடிப்பு, பட்டமேற்படிப்பு பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு வகையான தனியார் நிறுவனங்களும் துறை சார்ந்த படிப்புகளை வழங்குகின்றன.

தகுதி என்ன?

இந்த துறையை தேர்ந்தேடுத்து படிக்க 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவை கொண்ட பாடப்பிரிவை எடுத்து இதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு:

இதில் சேர ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐஐடி., ஜேஇஇ., நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இதன் மூலமாக ஐஐடி.,களில் உள்ள ஏரோநாட்டிக்கல் பட்டப்படிப்புகளில் சேர முடியும்.

மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களும், கல்லூரிகளும் இந்த படிப்பை பயிற்று விக்கின்றன. இதில் சேர அந்தந்த நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று, ஏரோநாடிகல் என்ஜினீயரிங் துறையில் படிக்கலாம்.

இந்தியாவில் பெங்களூரு, சென்னை, கோவை,டோராடூன், குர்கான், இந்தூர், கான்பூர், மும்பை, நாக்பூர், டில்லி, பாட்னா, புனே போன்ற பகுதிகளிலும் ஏரோநாடிகல் இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள் உள்ளன.

வேலைவாய்ப்பு:

இந்தத் துறையை தேர்ந்தேடுத்து படிப்பவர்களுக்கு மிகப் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது. விமானங்களின் வேகத்தைக் கூட்டுவது, உதாரணமாக, சென்னையிலிருந்து பெங்களூரு செல்ல 2 மணி நேரம் என்றால் அதை 1 மணி நேரமாக குறைப்பது எப்படி போன்ற பல்வேறு விதமான ஆராய்சிகளை மேற்கொள்ள முடியும்.

இந்தியாவில் ஏரோநாடிகல் என்ஜினீயரிங் முடித்தவர்கள் விமானதுறை சார்ந்த அரசு அலுவலகங்களில் பணிபுரிய முடியும். இது தவிர

  • பாதுகாப்பு அமைச்சகம்.
  • இஸ்ரோ.
  • சிவில் ஏவியேஷன்.
  • நேஷனல் ஏரோநாடிகல் லேபாரட்டரி.
  • அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள்.
  • விமான வடிவமைப்பு நிறுவனங்கள்.
  • விண்வெளி ஆய்வுத் துறை.

படிப்பை வழங்கும் பல்கலைக்கழகங்கள்:

பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம், சென்னை.
பாரத் பல்கலைக்கழகம்,சென்னை.
ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், புதுதில்லி
வேல் டெக் பல்கலைக்கழகம்,சென்னை.
விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம். கர்நாடகா.

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
What Are The Courses And Careers In Aeronautics
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+