வேலை வேண்டுமா..? எச்ஆர் முன் வைக்கும் 20 கேள்விகள் இதுதான்!

வழக்கமாக எல்லா நேர்முகத்தேர்விலும் இந்த 20 கேள்விகள் இல்லாமல் இருக்காது இதை சரியான முறையில் எதிர்கொள்ள நீங்கள் தயார் என்றால் வேலை உங்கள் பக்கம்தான்.

By Kani

வழக்கமாக எல்லா நேர்முகத்தேர்விலும் இந்த 20 கேள்விகள் இல்லாமல் இருக்காது இதை சரியான முறையில் எதிர்கொள்வதற்கான பயிற்சி உங்களிடம் இருந்தால் வேலை உங்கள் பக்கம்தான்.

வேலை வேண்டுமா..? எச்ஆர் முன் வைக்கும் 20 கேள்விகள் இதுதான்!

1. உங்களோட மிகப்பெரிய பலம் என்ன?

இந்தக் கேள்வியை கேட்டதும் செம குஷியாகி ஒத்தை கையில் 25 தண்டால் எடுப்பேனு மட்டும் கூறிவிடாதீர்கள்.

அலுவலக ரீதியான கேள்வி இது. அதாவது ஒரு தவிர்க்க முடியாத நேரத்தில் கூடுதல் பணிச்சுமையை லாவகமாக கையாளுவது எப்படி, அவசரகதியில் ஒரு வேலையை எவ்வாறு சிறப்பாக முடிப்பது போன்ற உங்களின் தனிப்பட்ட திறமைகளை சோதிப்பதற்கான கேள்வி என்பதை புரிந்து கொண்டு சாதுர்யமாக பதில் அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

2. இப்போது நீங்கள் புதிய வேலை தேடுவதற்கான அவசியம் என்ன?

உண்மையான காரணம் என்னவே அதை கூற முற்படுங்கள் பெரிதாக காரணம் இல்லாவிட்டால் புதிதாக கற்றுக்கொள்ள ஆர்வம் என்று கூறி முடித்துவிடலாம்.

இல்லையென்றால் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்னதாக முழுவதும் அறிந்து இதன் மீது ஆர்வம் கொண்டுதான் இந்தப்பணிக்கு விண்ணப்பித்தேன் என்று படீர் என்று கூறிவிடுங்கள்.

3. உங்களின் மிகப்பெரிய பலவீனம் என்ன?

தயவு செய்து சாப்பிட்டதும் சிறிது நேரம் தூங்குவேன், சோம்பேறி போன்ற எதையாவது சொல்லி மாட்டிக்கொள்ளாதீர்கள்.

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்று கேள்விபட்டிருப்பீர்கள் அதே போல், எதையாவது ஒரு கதையை எடுத்து விடுங்கள்.

வேலை என்று வந்துட்டால் நன் நேரம் காலம் எல்லாம் பார்ப்பதில்லை. ஒரு வேலையில் ஒன்றிவிட்டால் குடும்பத்தை பற்றி கூட சிந்தனை வராது. இது என்னுடைய பலவீனமாக கருதுகிறேன் என்று கூறலாம்.

4. ஒரு பரபரப்பான சூழ்நிலையை லாவகமாக கையாண்ட அனுபவம் உண்டா?

இல்லை என்றால் இது போன்ற அனுபவம் இல்லை என்று கூறலாம். உண்டு என்றால் நீங்கள் சாகசம் புரிந்த கதையை கூறலாம். ஆனால் அது நிர்வாகத்திற்கு பயன்படும்படியான கதையாக இருக்க வேண்டும்.

5. உங்களுக்கு எங்கள் நிறுவனம் பற்றி என்ன தெரியும்?

தற்போது கூகுளில் இல்லாத நிறுவனமே இல்லை என்று கூறலாம். அனைத்து தகவல்களும் கூகுளில் எளிதாக பெறலாம். எனவே நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு வேலை தேடிச்செல்லும் போகும் போது அதைப்பற்றி அலசி ஆராய்ந்து விரல் நுனியில் தகவல்களோடு செல்வது நலம்..

6. எங்கள் நிறுவனத்தை விரும்ப காரணம்?

அப்படி எங்ககிட்ட என்ன பிடித்திருக்கிறது என்று கோட்டால் 3 வேலையும் சாப்பாடு போடுவீர்கள். இலவசமாக பேருந்து கொடுக்கிறீர்கள் என எல்லா உண்மையும் அப்படியே கூறிவிட வேண்டாம்.

புதிய டெக்னாலஜி பயன்படுத்துகிறீர்கள். ஊழியர்களின் நலன் காக்கும் பண்பு என எதையாவது சிந்திக்கதக்க வகையில் கூற மறக்க வேண்டாம்.

7. சம்பளம் எவ்வளவு எதிர்பார்கிறீர்கள்?

முன்னதாகவே இது குறித்து அலசி ஆராய்ந்து கொள்ளுங்கள் அப்போது நீங்கள் கேட்கும் தொகை அதிகமாக இருந்தால் கூட அதற்குரிய காரணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.

முந்தைய நிறுவனத்தில் இவ்வளவுதான் வாங்கியுள்ளீர்கள் என்று கேட்டால் பணியின் ஊடே இந்த புதிய தொழில்நுட்பத்தில் சான்றிதழ் பெற்றுள்ளேன். என்று உங்கள் சான்றிதழ், மெபைல் ஆப் என எது வேண்டுமானலும் இருக்கலாம் அதை காட்டும் போது உங்களின் சம்பள தொகைக்கான காரணத்தை புரிந்து கொள்வார்கள்.

8. நாங்கள் ஏன் உங்களை தேர்வு சேய்ய வேண்டும்?

இப்போது தான் உங்களுடைய முழு பலத்தையும் காட்டவேண்டும். உங்கள் நிறுவனத்தின் சேர் மதிப்பு கடந்த மாதம் இவ்வளவு. இதற்கு காரணம் இது. இதே போல் செயல்பட்டால் அடுத்த 2 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம் இந்த அளவு இருக்கும். என புட்டு புட்டு வையுங்கள்.

இந்த வளர்சியை எட்டுவதற்கு புதிய தொழில்நுட்ப அறிவு கொண்ட நபர்கள் தேவை. எனவே நீங்கள் என்னை எடுத்தே ஆகவேண்டும் என கூறினால் யாரும் உங்களை வேண்டாம் என்றே கூறமாட்டார்கள். இதற்கு முன் அந்த நிறுவனத்தின் முழு ஜாதகத்தையும் முன்னதாக அலசினால் ஒழிய இது சாத்தியமாகாது.

9. முன்பாக வேலை செய்த நிறுவனத்தை விட்டு விலக காரணம் என்ன?

பதற்றமே இல்லாமல் உண்மையை சொல்லூங்கள் சொல்லமுடியாத உண்மைஎன்றால், பக்குவமாக புட் பாய்சன், குடிநீர் ஒத்துகொள்ளவில்லை. சீதோஷனநிலை சரியில்லை என சப்பைகட்டு கட்டி முடித்து விடலாம்.

10. அடுத்த பத்தாண்டுகளில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள்?

அடுத்த பத்தாண்டுகளில் இது போன்ற ஒரு நிறுவனத்திற்கு தலைவனாக இருப்பேன் என்று சுருக்கமாக கூறிவிட்டு போய்ட்டே இருக்கலாம். இதுக்கு மேலே இதன் தொடர் கேள்வி வராது.

11. உங்கள் கடைசி பணிஅனுபவத்தில் பிடித்தது?

ஏதாவது ரசிக்கும் படியாக இருந்தால் நலம். இல்லை என்றால் பொத்தம் பொதுவாக டீம் ஓர்க், நேரமேலாண்மை என எதையாவது கூறி அதற்கு ஒரு எடுத்துகாட்டும் கூறி விடுங்கள்.

12. உங்களது கடைசி பணியில் பிடிக்காததது?

நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம் உங்களால் சமாளிக்க முடியும் என்றால், உதாரணமாக டெட்லைன் ஒரே நாளில் பணியை முடிக்க கூறுவதால் என் பணியில் அதிக தரத்தை கொடுக்க முடியவில்லை. நோட் பண்ணிக்கோங்க (அதிக தரம்). சமாளிப்பிகேஷன் இருந்த போதும் எளிதாக எதையும் சமாளித்து விடலாம்.

13. அலுவலகத்தில் கிண்டல் செய்வதை எவ்வாறு சமாளிப்பீர்கள்?

எல்லா நிறுவனத்திலும் இருப்பதுதான் என ஆரம்பித்து நான் எல்லா பணியாளர்களுடனும் ஒத்து போக கூடியவன் என சமாளித்து பாருங்கள். முடியாத பட்சத்தில் உங்கள் தனித்திறமை என்ன என்பதை கூறிவிடுங்கள். இதை இவ்வாறு சாமளிப்பேன், அவ்வாறு சமாளிப்பேன் என்று.

உடனே கோபப்படுவேன், அடித்துவிடுவேன் போன்ற அதிரடி நடவடிக்கைகளை கூறுவதை தவிர்ப்பது நலம்.

14. பழைய நிறுவனத்திற்கு உங்களால் கிடைத்த லாபம் என்ன?

உங்கள் நிறுவனத்தின் வரவு செலவு தெரிந்தால் கூறுங்கள் இல்லையென்றால் உங்கள் பணியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறுங்கள்.

15. முன்னதாக பணிபுரிந்த நிறுவனத்தில் எப்போதாவது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்களா?

வேலைக்கு போனதான என்று கேள்வி எழுகிறாதா? ஆம், என்றால் உண்மையை கூறிவிடுங்கள். இல்லைஎன்றால் பின்பு விசாரிக்கையில் மாட்டிக்கொள்வீர்கள். இல்லை என்றால் அப்படி ஏதும் இல்லை என்று கூறிவிடுங்கள்.

16. முன்னாள் நிறுவனத்தில் உங்களுடைய பணி என்ன?

உங்களுடைய பணியை கொஞ்சம் உப்பு, மிளகாய் கலந்து தூக்கலாக கூற முயற்சி செய்யுங்கள். தெரியவில்லை என்றால் நமது பணி என்னவே அதை மட்டும் கூறிவிடுங்கள்.

17. உங்களின் பொழுது போக்கு என்ன?

உங்களுடை உண்மையான பொழுது போக்கு அம்சங்களை கூறுங்கள். அப்படி ஏதும் இல்லை என்றால் பணி சார்ந்த பொழுது போக்குகள் என்ன என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு செல்வது நலம் பயக்கும்.

18. உங்களுக்கு டீம் லீடராக பணியாற்ற விருப்பமா? டீம் மெம்பராக பணியாற்ற விருப்பமா?

பொதுவாக இந்த கேள்விக்கு ஐ லைக் போத் ஆப் அஸ் என்று கூறுவது நலம். ஏனெனில் ஒரு நல்ல தொண்டன்தான் தலைவனாக முடியும். உங்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ அதைக்கொண்டு இந்த கேள்விக்கான பதிலை முன்னெடுங்கள்.

19. இந்த வேலையை உங்களுக்கு கொடுக்கும் பட்சத்தில் எங்களுக்கு லாபம் என்ன?

பங்கு சந்தையில் உங்கள் பங்குகள் படீரொன கூடும் என்பது போன்ற வாதம் வேலைக்காகாது. சோ என்னோட இந்த புதிய திறமைகளை பயன்படுத்த ஒரு சிறந்த களமாக இருக்கும் என நம்புகிறேன் என சாதுர்யமாக பதில் அளிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

20. உங்களைப் பற்றி கூறுங்கள்?

சும்மா பிறந்ததில் தொடங்கி ஒரு 2 மணி நேரம் கதை சொல்ல முற்பட வேண்டாம். ரத்தின சுருக்கமாக இது என் இலக்கு அதற்கான பாதை இந்த வேலை என இதை தேர்ந்தேடுத்துள்ளேன் என பிறப்பில் ஆரம்பித்து வேலையில் கொண்டுவந்து சுருக்கமாக முடித்து விடுங்கள்.

சென்னை சட்டக் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!சென்னை சட்டக் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Top 20 interview questions
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X