இந்த 10 சாப்ட் ஸ்கில் இருந்தா உங்க வேலைய யாராலையும் அசைக்க முடியாது...

வாழ்க்கையில் தெளிவான திட்டமிட்ட குறிக்கோளுடன், முயற்சியும், பயிற்சியும் முறையாக இருந்தால், சாதாரண மாணவர்களும் சரித்திரம் படைக்க முடியும்.

By Gowtham Dhavamani

வாழ்க்கையில் தெளிவான திட்டமிட்ட குறிக்கோளுடன், முயற்சியும், பயிற்சியும் முறையாக இருந்தால், சாதாரண மாணவர்களும் சரித்திரம் படைக்க முடியும். பட்டமும், சான்றுகளும் அவசியம்தான் என்றாலும் அத்துடன் மென்திறமை எனப்படும் (soft skills) சேர்ந்திருக்கும் போதுதான் ஒரு சக்தி வாய்ந்த பணித்திறன் உருவாகிறது.

இந்த மென்திறமை உங்களிடம் இருந்தால், அந்த திறமைக்கு அதிக கிராக்கி உள்ளது. நீங்கள் வேலை வேண்டி விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பத்தில் நீங்கள் கல்லூரியில் பெற்ற பட்டம் மற்றும் சான்றுகளுடன் உங்களிடமுள்ள மென்திறன் பற்றியும் குறிப்பிட்டிருந்தால் கடுமையான போட்டிகளுக்கிடையிலும் நீங்கள் வேலை வாய்ப்பைப் பெற முடியும்.

இந்த 10 சாப்ட் ஸ்கில் இருந்தா உங்க வேலைய யாராலையும் அசைக்க முடியாது...

மென்திறமை என்றால் என்ன?

மென்திறமை என்பது ஒரு மனிதனிடம் உள்ள தனிப்பட்ட பழக்க வழக்க அடிப்படையிலான திறமையாகும். சுயமாக வளர்த்துக்கொள்ளும் ஓன்று. இதை ஒரு வேலையிலிருந்தோ, பள்ளியிலிருந்தோ கற்றுக்கொள்ள முடியாது.

நல்ல கருத்துக்களை வழங்குதல், பெறுதல், பிறருக்கு ஒத்துழைப்பு தருதல், நேரத்தை நிர்வாகிப்பதற்கான திறன் போன்றவை மென் திறமைகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். இந்த திறமையுள்ளவர்கள் அனைத்து பணிகளுக்கும் உதவுபவர்களாக இருப்பார்கள்.

கடந்த 2016 ம் ஆண்டு லின்கிடு-இன் நிறுவனம் (LinkedIn ) 'மென் திறமை' (soft skills) பற்றிய ஓராண்டு கால ஆய்விற்குப் பின் சிறந்த பணியாளர்களிடம் காணப்படும் 10 மென் திறமைகள் குறித்து தனது முடிவுகளை வெளியிட்டது.

வேலையளிக்கும் நிறுவனங்கள் பணியாளர்களை நியமிக்கும்போது தற்போது அந்த 100 அம்சங்களை கடை பிடிக்கின்றன. வேலை வாய்ப்பைப் பெறுவதில் முக்கிய அம்சங்களாகக் கருதப்படும் அந்த 10 அம்சங்களும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்பவர்கள் இந்த அம்சங்களை கடைபிடித்தால் வெற்றி நமதே.

1. தகவல் தொடர்பு திறமை:

தெளிவாக பேசுதல், கூர்ந்து கவனித்தல், கவனத்துடன் செயல்படுதல், சிறப்பான பணியளிப்பு, எழுத்துத் திறன் ஆகிய தகவல் தொடர்பு சார்ந்த திறன்கள் உடையவர்கள். அடுத்து தொழில் நுட்ப கல்வி அறிவு இல்லாத நிலையிலும், புதிய தொழில் நுட்பம் குறித்த கருத்துக்களை கூட்டாளிகளுடனுடனும், வாடிக்கையாளர்களுடனும், சக பணியாளர்களுடனும் பகிர்ந்து கொள்பவர்கள் ஆகியோர் மென் திறமையுடையவர்கள் என அறியப்படுகின்றனர்.

2. அமைப்பாற்றல்:

திட்டமிடுதல், திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல், எடுத்துக்கொண்ட வேலைகளை பொதுவாக நேரத்தில் முடித்துக் கொடுக்கும் திறன் ஆகியவை சிறந்த மென் திறமைகளாக கருதப்படுகின்றன.

3. குழுப்பணி திறன்:

ஒரு பெரிய நிறுவனத்தில் அதிக பணியாளர்கள் கொண்ட குழுக்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவில் நீங்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது குழுவின் இலக்குகளை எவ்வாறு அடைகிறீர்கள்? மற்ற குழுவிலுள்ள பணியாளர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவுகிறீர்கள்? ஒவ்வொரு குழுவிற்க்கும் தவிர்க்க முடியாத ஒரு பணியாளராக ( ஒரு சொத்து போல ) எப்படி நீங்கள் இருக்கின்றீர்கள் ஆகியவை உங்கள் மென் திறமைகளை பரிசோதிக்கும் காரணிகளாகும்.

4. காலம் தவறாமை:

பல கோடி மூலதனத்தில் இயங்கும் ஒரு தொழிலில் காலம் தவறாமையை முக்கியமாக பார்ப்பார்கள். கால தாமதத்தை விரும்ப மாட்டார்கள். பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு வராமல் இருத்தல், நேர்முக தேர்வுக்கு தாமதமாக வருவது இவற்றை எந்த காரணத்தைக் கொண்டும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு 5 நிமிடத்துக்கு முன்பாகவே வந்துவிட வேண்டும். எனவே கால தாமதமில்லாமல் சரியான நேரத்துக்கு முன்பாக வந்து, குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக முடித்துக் கொடுப்பதும் மென் திறமைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

5. சிக்கலான நேரங்களில் முடிவெடுக்கும் திறன்:

கற்பனை, நான் செய்தது சரியானதுதான் என வாதம் செய்தல், கடந்த கால அனுபவம், ஆராய்ச்சி மனப்பான்மை, கிடைக்கக்கூடிய வளங்களையும், வாய்ப்புகளையும் அடிப்படையில் புரிந்து கொள்ளுதல் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவை நிர்வாகத்தினரை கவரும் அம்சங்களாகும். நேர்முகத் தேர்வின்போது இந்த திறன்களை வெளிப்படுத்துபவர்கள் சிறந்த மென் திறமையாளர்களாக கருதப்படுகிறார்கள்.

6. எளிமையான ஆளுமை திறன்:

நீங்கள் நிர்வாக தலைமை பொறுப்பில் இருக்கும் போது, தினமும் உங்களை பலர் சந்திக்கக் கூடும். நீங்கள், பலரை சந்திக்கும் சூழ்நிலையில் நீங்கள் வகிக்கும் பதவிக்கான கெளரவம், தகுதிகளை பொருட்படுத்தாமல், சாதாரண சமூக மனப்பான்மையுடன் ( எளிமையான நடத்தை) அவர்களிடம் நடந்து கொள்ளும் போது நிச்சயம் நீங்கள் வெற்றிகரமானவர் என்பதை நிரூபிப்பீர்கள். இவ்வாறு பலவிதமான நபர்களுடன் சமாளிப்பதும் ஒரு மென் திறமை என கருதப்படுகிறது.

7. படைப்பாற்றல்:

இது பொதுவாக மிகவும் குறைவான மதிப்பு கொண்ட மென் திறமைக்கான அளவு கோளாகும். இந்த திறமை பிறரை பாராட்ட பயன்படும் ஒரு திறமையாகவே கருதப்படுவதால் இது அவ்வளவாக எடுத்துக் கொள்ளப்படுவதில்ல. நிர்வாகத் துறையில் பெரும்பாலான திறமையாளர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருந்ததில்லை. நிர்வாகம் இதை அதிகம் எதிர்பார்ப்பதுமில்லை.

8. உள் நிர்வாகத் தொடர்பு:

குழுவினருடன் திறமையாக பணியாற்றுதல், சக பணியாளர்களுடன் சீரான உறவு, பணியாளர்களிடையே ஏற்படும் பிரச்னைகள், தகராறுகளை சமாளித்தல் ஆகியவை சிறந்த பொக்கிஷ குணங்களாக (as property) பார்க்கப்படுகிறது.

மேலும் உள் நிர்வாகத்தில் நல்ல தகவல் தொடர்பு மற்றும் சக பணியாளர்களுடன் பழகும் விதமும் ஒரு பணியாளரை தலைமை பதவிக்கு உயர்த்துகிறது.

9. காலத்துக்கேற்ப மாறும் தன்மை:

மாற்றங்களை ஏற்படுத்தும் திறனைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். மாறி வரும் தொழில்நுட்பம் மற்றும் விரைவாக வளர்ந்து வரும் வணிக சூழலில், புதிய தொழில்நுட்பங்களைத் தேர்ந்தெடுப்பதும், வியாபார சூழலை மாற்றி சரிசெய்வதும் தொழில் இணக்கத் தன்மைகளாக கருதப்படுகிறது. இது போன்ற இணக்கத்தன்மையும் ஒரு மென் திறமையாகக் கருதப்படுகிறது.

10. நட்புணர்வுடன் கூடிய ஆளுமைத திறன்:

வேலை பார்க்கும் இடத்தில், பணியாளர்கள் தாங்கள் விரும்பும் நபரிடம் பணியாற்ற விரும்புவார்கள், மென்மையாக தங்களை வேலை வாங்க வேண்டும் என விரும்புவார்கள், நம்பிக்கையுடனும் அதே சமயம் அசாதாரணமான சூழ் நிலைகளில் வேடிக்கையாகவும் இருப்பார்கள்.

ஆனால் உங்களை விட்டு வேறு இடத்துக்கு வேலைக்குப் போகவும் விரும்ப மாட்டார்கள். காரணம் சக தொழிலாளர்களை நீங்கள் நட்பு ரீதியாக நடத்தி வேலை வாங்கிய விதம்தான். இதுதான் நட்பணர்வுடன் கூடிய ஆளுமைத திறன்.

இதுவும் நிறுவத்தினர் எதிர்பார்க்கும் மென் திறமைகளில் ஒன்றாகும். இந்த திறமைகள் உங்களிடம் இருந்தால் ஓ.கே. நிச்சயம் உங்கள் எதிர்காலம் ஒரு பொற்காலம்தான்.

மேற்கண்ட 10 அம்சங்களுடன் மென் திறமைக்கான கூடுதல் அம்சங்கள்:

பணியாளர் நெறி:

வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களால் வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்கள் முயற்சியுடையவர்களாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும், ஆரம்பத்திலேயே நன்கு வேலை பார்ப்பவர்களாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.

உணர்வுசார் நுண்ணறிவு:

ஒரு நல்ல நிர்வாகி தனது உணர்வுகளை மட்டுமல்லாமல் மற்ற சக தொழிலாளிகளின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்படுவார். எந்த ஒரு வேலையிலும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசாமல், பிறரின் திறன்களை அறிந்து பணியாற்றும் நுண்ணறிவு பெற்றவராக இருப்பார்.

கணினி மற்றும் தொழில்நுட்ப எழுத்தறிவு:

வேலைவாய்ப்பு பெறுவதில் அதிக போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் கம்யூட்டரை இயக்கத் தெரிந்துவிட்டால் போதும், அதுபற்றி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுவிட்டால் மட்டும் போதும் என நினைக்கின்றனர். கம்யூட்டர் குறித்த தொழில்நுட்ப எழுத்தறிவும், அது குறித்த அடிப்படை நுட்பங்களும் தற்போது கேட்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆராய்ச்சி திறன்:

உங்கள் விரல்களின் முனையில் தற்போது கூகுள் (Google) இணையதள வசதி உள்ளது. இதன் மூலம், பொதுவான சிக்கல்களுக்கு பதில்களை தேடுவது எளிது. இருப்பினும், மேலாளர்களை பணியமர்த்தல், திறமை வாய்ந்த பணியாளர்களைப் பெற சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் முடிவெடுத்தல், மிக அவசியமான தகவல்களைத் தேடிப் பெறுவதில் ஆழமான ஆராய்ச்சி திறன் அவசியமாகிறது.

செயல்முறை மேம்பாடு நிபுணத்துவம்:

ஒரு திறமையான நிர்வாகியின் செயல் முறை என்பது ஒரே கல்லில் 2 மாங்காய் அடிப்பது போல இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நிறுவனத்தின் நேரமும், பணமும் மிச்சப்படுத்தப்படுகிறது. நாம் எடுத்துக் கொண்ட வேலைகளை எதை முதலில் செய்வது, எதை பிறகு செய்வது என்பதை கருத்தில் கொண்டு செலவுகளை குறைத்து, இலக்குகளை அடையும் முறையாகும்.

விண்ணப்பத்தில் சேர்க்கும் முக்கிய அம்சம்:

உங்களிடம் உள்ள மென் திறமைகளை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டும் விதத்தில் உங்கள் விண்ணப்பம் அமைந்திருக்க வேண்டும். நீங்கள் க்ளிக் செய்தால் போதும் எங்கள் விண்ணப்ப வடிவமைப்பாளர் உடனே சிறந்த விண்ணப்பத்தை உங்களுக்காக உங்கள் திறமைக்கேற்ற வடிவத்தில் செய்து கொடுப்பார்.

அடுத்து, உங்கள் விண்ணப்பத்துடன் ஒரு கவர் கடிதம் வைக்கலாம். அதில் உங்களிடமுள்ள மென் திறமைகளை பற்றிக் எடுத்துக் கூறுவதன் மூலம் கடுமையான போட்டியை தவிர்க்கலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Top 10 Soft Skills in demand of today's corporate world
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+