சாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்?

By Kani

தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் அரசுத்தேர்வுக்கான போட்டிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் சிறிது நேரம் ரீலக்ஸ் செய்யலாம் என்ற நினைப்பில் பொழுதுபோக்கில் இறங்குவது படிப்பை கெடுத்துவிடும்.

சாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்?

 

தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கூர்ந்து படிப்பதோடு டி.வியில் செய்திகள் பார்ப்பது, செய்தித்தாள் படிப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவது அவசியம். அந்த வகையில் போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்காக சில கேள்வி பதில்கள்...

கேள்வி 1. தாஜ்மஹால் எந்த வகை சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது?

கேள்வி 1. தாஜ்மஹால் எந்த வகை சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது?

விடை : மக்ரானா.

விளக்கம் : கண்ணைப் பறிக்கும் தாஜ்மகாலின் வெள்ளைச் சலவைக்கற்கள் முழுக்க ராஜஸ்தானிலுள்ள உலகப்புகழ் பெற்ற மக்ரானா என்ற இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டன. கட்டிடத்தில் பதிப்பதற்காக பச்சை மற்றும் பளிங்கு கற்கள் சீனாவிலிருந்தும், வைடூரியங்கள் ஆப்கானிஸ்தானிலிருந்தும், பச்சையும் நீலமும் கலந்த ரத்தின கற்கள் திபெத்திலிருந்தும் கொண்டுவரப்பட்டன. நீலக்கற்கள் இலங்கை மற்றும் அரேபிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டன.

கேள்வி 2. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?

கேள்வி 2. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?

விடை: வவ்வால். (வௌவால்)

விளக்கம்: வௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு இவ்வௌவால்தான். இதில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இருளில் முன்னிருக்கும் பொருட்களைக் கவனிக்க வௌவால்களுக்கு மீயொலி அலைகள் உதவுகின்றன.

கேள்வி 3. தும்பா ராக்கெட் ஏவுதளம் எந்த மாநிலத்தில் உள்ளது?
 

கேள்வி 3. தும்பா ராக்கெட் ஏவுதளம் எந்த மாநிலத்தில் உள்ளது?

விடை: கேரளா

விளக்கம்: தும்பா (Thumba) கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் ஒரு புறநகர்ப் பகுதி. 1962-ஆம் ஆண்டு இப்பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டது. 1963 நவம்பர் 21-இல் முதன் முதலில் சவுண்டிங் ராக்கெட்டான நைக்-அப்பாச்சி இதிலிருந்து ஏவப்பட்டது.

கேள்வி 4. சீனாவின் தலைநகரம் எது?

கேள்வி 4. சீனாவின் தலைநகரம் எது?

விடை: பீஜிங்

விளக்கம்: ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின் படி மூன்றாவது பெரிய நாடு. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் சாங்காய் விளங்குகிறது.

கேள்வி 5. பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது?

கேள்வி 5. பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது?

விடை: பாங்கரா.

விளக்கம்: இது பஞ்சாப் பகுதியில் உள்ள மாஜ்ஹா எனும் ஊரில் தோன்றிய பாரம்பரிய நடனம். பாங்கரா நடனம் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பஞ்சாப் பகுதி பெண்கள் ஆடுகின்ற ஒரு பிரபலமான நாட்டுப்புற நடனம்.

கேள்வி 6. மீன்கள் இல்லாத ஆறு எது ?

கேள்வி 6. மீன்கள் இல்லாத ஆறு எது ?

விடை: ஜோர்டான் ஆறு

விளக்கம்: சாக்கடலின் மேற்கே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனமும் கிழக்கே ஜோர்டானும் அமைந்துள்ளன. 'சாக்கடல்' என்று அழைக்கப்பட்டாலும் அது உண்மையில் கடல் அல்ல. அது ஒரு உப்பு நீர் ஏரி ஆகும். உலகின் மிகத் தாழ்வான சாலையான 'ஹைவே 90' இங்கு தான் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 1289 அடி (393.மீ) கீழே அமைந்துள்ள இச்சாலை மேற்குக் கரை, இஸ்ரேலியக் கரைகளின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ளது.

கேள்வி 7. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?

கேள்வி 7. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?

விடை: டி பி ராய்.

விளக்கம்: வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வின் நினைவாகவும், கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கிலும் அப்போதைய முதலமைச்சர் காமராஜர் ஒரு சிலையை எழுப்ப உத்தரவிட்டார். இதன் பேரில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி, நான்கு தொழிலாளர்கள் கடின உழைப்பில் ஈடுப்பட்டிருக்கும் வடிவில் கல்லில் சிலையைச் செதுக்கினார். கல்லூரிக் காவலாளி ஸ்ரீனிவாசன் மற்றும் மாணவர் ராமு மாதிரியாக இருந்தனர். இதை 1959 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி ஆளுநர் விஷ்ணுராம் மேதி திறந்து வைத்தார்.

கேள்வி 8. சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?

கேள்வி 8. சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?

விடை: 5 மைல்

விளக்கம்: கார்பன் ஓர் அலோகமாகும். இயற்கையில் காணப்படும் கார்பனில் படிக உருவமற்ற (amorphous) கரி, கிராபைட், வைரம் என மூன்று வேற்றுருக்கள் உள்ளன. வெள்ளைக் கார்பன்(White Carbon) என்று நான்காவது வேற்றுரு இருக்கலாம் என்று அறிந்துள்ளனர்.

கேள்வி 9. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது?

கேள்வி 9. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது?

விடை: அலகாபாத்

விளக்கம்: இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி இது. பிரயாக் என்றும் அறியப்படுகிறது. அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மத புனித ஆறுகள் யமுனை, கங்கை இங்கு திரிவேனி சங்கம் என்ற இடத்தில் கூடுகின்றன. இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு , இந்திரா காந்தி, வி. பி. சிங்) இந்நகரில் பிறந்தவர்கள் ஆவர்.

கேள்வி 10. கரூர் எந்த ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது?

கேள்வி 10. கரூர் எந்த ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது?

விடை: 1995

விளக்கம்: கரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் ஒன்று. கரூர், குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம் அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது. அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் தமிழகத்தின் வர்த்தக மாவட்டம் ஆகும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tnpsc model question paper with answers in tamil
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X