"அறம் செய விரும்பு" ஆத்தி சூடி எத்தனை வரிகள் தெரியுமா?

By Kani

போட்டித் தேர்விற்கு படிக்கும் போது பொதுவாக கருத்துக்களை உள்வாங்கி படிக்க வேண்டும். அப்போதுதான் எப்படி கேள்வி கேட்டாலும் உங்களால் பதில் அளிக்க முடியும்.

போட்டித் தேர்வில் வெற்றி பெற புத்தகத்தை கையில் வைத்து கொண்டே இருந்தால் மட்டும் வெற்றி சாத்தியமாகாது.

 

அன்றாடவேலைகளுக்கிடையே தினமும் 3 அல்லது 4 மணி நேரம் ஒதுக்குவது அவசியம்.

கிடைக்கும் வாய்ப்பினை கற்பூரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

போட்டித்தேர்வுக்கான தயாரிப்பில் உள்ள மாணவர்களுக்கான சில வினா,விடைகள்...

1. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

விடை: 1972

விளக்கம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) தமிழக அரசின் கீழ் பொதுமக்களின் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும்.

இத்துறை 1972-ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்குகிறது.

2. இந்தியாவின் முதல் நினைவு நாணயம் எப்போது வெளியானது?

விடை: 1964

விளக்கம்: விடுதலை இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் இறப்புக்குப் பின் நேருவின் படத்துடன் ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா நாணயங்கள் 1964ஆவது ஆண்டில் வெளியாயின.

ஒரு ரூபாய் நாணயத்தில் நேருவின் படத்துடன் "ஜவகர்லால் நேரு" என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளியானது. ஐம்பது பைசா நாணயத்தில் நேருவின் படத்துடன், பாதி நாணயங்களில் "ஜவகர்லால் நேரு" என ஆங்கிலத்திலும் மீதி நாணயங்களில் இந்தியிலும் எழுதப்பட்டு வெளியானது.

இதுவே இந்தியா விடுதலை பெற்ற பின்னர் வெளியான முதலாவது நினைவு நாணயமாகும்.

3. கோவை சிறையில் வஉசி இழுத்த கருங்கல் செக்கின் எடை எவ்வளவு?

விடை: 250 கி.கி

விளக்கம்: கோவை சிறையில் வ.உ.சி. இழுத்த செக்கு இரு கருங்கற்களால் ஆனது. புதையுண்ட நிலையில் இருந்த அந்த செக்கு, 64 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இரு கற்களில் ஒன்று கோவை மத்திய சிறையிலும், மற்றொன்று சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்திலும் இப்போது வைக்கப்பட்டுள்ளது.

4. ஒலியே எழுப்பாத விலங்கு எது?

விடை: ஒட்டகச்சிவிங்கி

விளக்கம்: உலகின் மிக உயரமான பாலூட்டி உயிரினமான ஒட்டகச்சிவிங்கியின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் அதிரடியாக வீழ்ச்சி கண்டுள்ளது.

20 அடிகள் வரை வளர்ந்திருக்கும் இவற்றால் 2 அடி உயரத்தைக் கூட தாண்ட முடியாது. நீச்சலும் தெரியாது என்பதால் தண்ணீரிலும் இறங்காது.

எதிரிகளைத் தாக்க கால்களை மட்டுமே ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. சிங்கத்தைக்கூட உதைத்தே கொன்றுவிடும் ஆற்றல் இதன் கால்களுக்கு உண்டு. பிறந்து சில மணி நேரத்திலேயே எழுந்து ஓடும். இவை சுமார் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை.

5. புத்தருக்கு எந்த வயதில் திருமணம் நடைபெற்றது?

விடை: 16-ஆம் வயதில்

விளக்கம்: யசோதரா கவுதம புத்தரின் மனைவி. இவர் சுப்பபுத்தருக்கும் பமிதாவுக்கும் மகளாகப் பிறந்தார்.

பமிதா சுத்தோதனரின் உடன் பிறந்தவள். சித்தார்த்தருக்கு(புத்தர்) சமவயதுடைய யசோதரைக்கு 16-ஆம் வயதில் திருமணம் நடந்தது. இவர்களது ஒரே மகன் ராகுலன்.

6. சீனாவின் தேசிய விலங்கு எது?

விடை: பாண்டா கரடி(giant panda)

விளக்கம்: பாண்டா கரடிகள் மத்திய சீனாவின் சிச்சுஆன் மலைப்பகுதிகளிலும் அதனைச்சுற்றியுள்ள கான்சு மற்றும் சான்க்சி மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றன.

காடுகளின் அழிவு மற்றும் முன்னேற்றங்களால் அவை தாழ்வான இடங்களில் இருந்து உயரமான பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டடியதாயிற்று.

சீனாவின் தேசியச்சின்னமாக டிராகன் விளங்குவதைப்போலவே பாண்டாவின் உருவமும் சீனாவின் சர்வதேச அடையாளங்களில் ஒன்றாகத்திகழ்கிறது. உதாரணமாக பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பாண்டா உருவம் இடம் பெற்றிருந்ததைக் கூறலாம்.

7. பழனியின் மறுபெயர் என்ன?

விடை: சித்தன் வாழ்வு

விளக்கம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி.

இங்குள்ள மலையில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால் ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு சிலை செய்த புகழ் பெற்ற முருகன் மலைக்கோவில் இருக்கிறது.

இவ்வூரில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருஆவினன்குடி கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் ஆண்டிப்பட்டி மலை, பழனி (பொதினி) யில் கண்டுபிடிக்கப்பட்டன.

8. ஆத்திசூடி எத்தனை வரிகளை கொண்டது?

விடை: 109 வரி

விளக்கம்: ஆத்திச்சூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல்.

தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற வகையில் ஔவையின் ஆத்திச் சூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

9. கணித மேதை ராமானுஜத்தின் சொந்த ஊர் எது?

விடை: கும்பகோணம் (குடந்தை)

விளக்கம்: கும்பகோணம் (குடந்தை) சாரங்கபாணி தெருவில் வாழ்ந்த சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர் ராமானுஜம்.

வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான 3000-க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

ராமானுஜன் ஆய்வுகளில் "தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்", "தியரி ஆஃப் நம்பர்ஸ்", "டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்", "தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்", "எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்" எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் இன்றும் கருதப்படுகின்றன.

10. உலகிலேயே பத்திரிகைகளுக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்?

விடை: வி.பி.சிங்.

விளக்கம்: வி.பி.சிங். இவர் பதவியேற்ற இரண்டாவது சந்திப்பில் 800 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு டெல்லி ஸ்ரீபோர்ட் ஆடிட்டோரியத்தில் 2 மணி நேரம் வரை பதில் அளித்து உலக சாதனை புரிந்தார்.

11. மலேசியாவின் கரன்சி எது ?

விடை: ரிங்கிட்

விளக்கம்: மலேசிய ரிங்கிட் முன்பு மலேசிய டாலர் என்றழைக்கபட்டது. இது தமிழில் வெள்ளி (மலேசிய வெள்ளி) என்று அழைக்கப்படுகின்றது. இந்த நாணயத்தை மலேசியாவின் நடுவண் வங்கியான மலேசியா நெகரா வங்கி வெளியிடுகிறது.

ஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா? குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tnpsc model question paper in tamil
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X