உங்க "ரெஸ்யூம் இப்படி இருந்தா உடனே வேலை!

உங்க "ரெஸ்யூம் இப்படி இருந்தா உடனே வேலை!

By Gowtham Dhavamani

நம்ம ரெஸ்யூம பட்டி டிங்கரிங்க பாக்கற நேரம் எல்லாருக்கும் வரும். வேலை தேட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, இல்ல வருஷத்துக்கு ஒரு தரம் உங்க ரெஸ்யூம சரிபாத்தா போதும்.

உங்க

எவளோ நேரம் உங்களுக்கு இருக்குன்னு தெரிஞ்சுட்டு, உங்க ரெஸ்யூம டக்கரா மாத்த தயார் ஆகுங்க.

1 பார்மேட் கவனிக்கணும் :

1 பார்மேட் கவனிக்கணும் :

எந்த ஃபார்மேட்ல அனுப்ப சொல்லி இருக்காங்களோ அதுல அனுப்பறது தான் சரி. முடிஞ்சா பீ.டீ.எப்ல அனுப்புங்க. தகவல் மாறாம இருக்கும். ஒருவேளை கிரியேட்டிவ் ஃபீல்ட் சேர்ந்தவரா இருந்தா.. ஃபோட்டோஷாப்ல அட்டகாசமா ஒரு ரெஸ்யூம் டிசைன் பண்ணிக் கூட அனுப்பலாம். இதுவே உங்கள கொஞ்சம் உயர்த்தித் தனித்துவமா காட்ட உதவும்.

2. நல்ல பேரா வைங்க :

2. நல்ல பேரா வைங்க :

உங்களுக்கு தெரிஞ்ச நல்ல பேரு, உங்க பேரு தான? அப்போ அதையே ரெஸ்யூமுக்கும் வைங்க. உங்க பேர போட்டு பின்னாடி ரெஸ்யூம்னு எழுதுங்க. அப்போதான் கூட்டத்துல தொலைஞ்சு போகாம இருக்கும்.

3. மொழி அவசியம் :
 

3. மொழி அவசியம் :

சாதாரணமா 2ஆம் வகுப்பு குழந்தைக்கு புரியற மாதிரி மொழி இருக்கும். அத முடிஞ்ச அளவுக்கு கொஞ்சம் கெத்தா மாத்துங்க. நம்ம சசி தரூர் மாதிரி சில வார்த்தைகள் அங்க அங்க இருக்கறது நல்லது.

4. பதவிஉயர்வு சரியாய் குறிப்பிடுங்க :

4. பதவிஉயர்வு சரியாய் குறிப்பிடுங்க :

ஒரே நிறுவனத்துல பல நிலைகள்ல வேலைசெய்திருந்தா, எல்லா பதவி உயர்வையும் சரியா குறிப்பிடுங்க.

5. வரலாறு இங்க முக்கியம் இல்ல :

5. வரலாறு இங்க முக்கியம் இல்ல :

அதிகமான அனுபவம் இருந்தா எல்லாத்தையும் நீங்க ரெஸ்யூம்ல குறிப்பிடனும்னு அவசியம் இல்ல. கடைசியா 10 இல்ல 15 வருஷத்தோட தகவல் இருந்தா நல்லது. அந்த மாதிரி வரலாறு எழுதி இருந்தா அந்த எடத்துல வேற ஏதாவது எழுதுங்க.

6. விடுபட்ட வார்த்தைகள்

6. விடுபட்ட வார்த்தைகள்

பார்மேட்டிங் சமயத்துல சில வார்த்தைகள் இல்ல எழுத்துக்கள் தனியா விடுபட்டு போய்டும். அத எப்பிடி முன்னாடி இருக்கற வரில சேக்கறதுன்னு பாருங்க. அப்பிடி செய்யும் போது அதிகமான இடமும் உங்களுக்கு கிடைக்கும்.

7. வாய்விட்டு படித்து பார்க்கவும் :

7. வாய்விட்டு படித்து பார்க்கவும் :

சத்தம் போட்டு படிச்சு பாத்தா தவறான வார்த்தைகள், சரியா அமையாத வரிகள், தகவல்கள் எல்லாமே சட்டுனு கவனத்துக்கு வரும். அதனால ஒரு தரம் சத்தம் போட்டு படிச்சுருங்க.

8. அபிப்ராயம் :

8. அபிப்ராயம் :

உங்க ரெஸ்யூம சொடுக்குறதுக்கு (கிளிக்) முன்னாடி என்ன மாதிரி இருக்க போகுதுன்னு தெரிஞ்சுக்குங்க. முக்கியமா உங்க ரெஸ்யூமோட மேல் பகுதி. பாக்கறதுக்கு அழகா அம்சமா இருந்தா முதல் அபிப்ராயம் நல்லதா இருக்கும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Things to Check and Change in Your Resume To Get a Job for Sure!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X