80 கோடி பேருக்கு வேலை போகப்போது, ஆனா இவங்க மட்டும் எப்பவும் ராஜாதான்!!

ரோபோட் தொழில்நுட்பம் உலக அளவுல பெரிய அளவுல வளர்ந்து வருது.. அது மக்களோட அன்றாட வேலைகள செய்ய ஆரம்பிச்சி இப்ப மனிதர்களவிட துல்லியமா செய்யுது. பல வேலைகளுக்கு மனிதர்கள நம்ப வேண்டியதில்ல, தானாவே அந்த வேலைகள் நடக்குது.

 

80 கோடி பேருக்கு வேலை போகப்போது, ஆனா இவங்க மட்டும் எப்பவும் ராஜாதான்!!

உதாரணமா உக்காந்த இடத்துலயே பேன், டிவி, லைட், டோர் சாத்துறதுனு எல்லாம் தானியியங்கியா மாறிடிச்சி. அதுமாதிரி வேலைகளால அடுத்த 12 வருசத்துல 800 மில்லியன் மக்கள் வேலை இழப்பாங்க. ஆனா குறிப்பிட்ட வேலைகள் செய்யறவங்க எப்பவும் அவங்க வேலையில ராஜாவா இருக்கப்போறாங்க.. ஆமா எதுலாம் அந்த வேலைகள் ?

உருவாக்குபவர்கள் (கிரியேட்டிவ் ஒர்க்கர்ஸ்)

உருவாக்குபவர்கள் (கிரியேட்டிவ் ஒர்க்கர்ஸ்)


ஓவியர், எழுத்தாளர், பாடலாசிரியர், கவிஞர், இசையமைப்பாளர் போன்ற கலை உருவாக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நிகராக ரோபோக்களால் பணி செய்ய முடியாது. அவை ஏற்கனவே புகுத்தப்பட்ட கட்டளையின் அடிப்படையிலேயே வேலை செய்பவை. எனவே, சினிமா போன்ற கலைத் தொழில்களுக்கு ரோபோக்களால் இப்போதைக்கு ஆபத்து இல்லை.

பராமரிப்பு பணியாளர்கள்

பராமரிப்பு பணியாளர்கள்

அலுவலகத்தில் மென்பொருள், வன்பொருள் பராமரிப்பு பணிகளில் இருப்பவர்களுக்கு பாதிப்பில்லை. அந்த ரோபோக்களுக்கே இவர்களின் உதவி தேவைப்படும்.

எல்லா இயந்திரங்களும் இந்த வேலையை செய்யும் என்றாலும் அவற்றை பராமரிப்பது மனித கைகளிலேயே இருக்கும். சிட்டி ரோபோட் போன்ற தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் இயந்திர மனிதர்களுக்கும் இது பொருந்தும். உணர்ச்சிகள் வராதவரை மட்டும்!

 

சிகை அலங்காரம்
 

சிகை அலங்காரம்


விதவிதமான சிகை அலங்காரங்களை அறிமுகப்படுத்தி அதற்கு கைகளால் வித்தியாசமான முறைகளில் அலங்காரம் செய்பவர்களுக்கும் வேலை போகும் ஆபத்து இல்லை.

மருத்துவ உதவியாளர்கள்

மருத்துவ உதவியாளர்கள்


மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருந்து சோதனை செய்பவர்கள், மருத்துவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை

ரோபோக்கல் மூலம் சில மருத்துவ சிகிச்சைகளை வழங்கினாலும் முழுமையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வேலையை செய்ய முடியாது. சிகிச்சை பெருபவரின் தேவையை அவர்களது மனதை புரிந்து கொண்ட சக மனிதர்களான மருத்துவர்களே செய்ய முடியும்.

 

சமுதாய பணி செய்பவர்கள்

சமுதாய பணி செய்பவர்கள்


மக்கள் உணர்ச்சிகளையும், தேவைகளையும் புரிந்து செய்யக் கூடிய சமுதாயப் பணிகளை ஒருபோதும் ரோபோக்கலால் செய்ய முடியாது. மாறாக அவசர கால உதவிகளை வேண்டுமானால் ரோக்கல் மூலம் செய்யலாம். மக்களின் அப்போதைய தேவையறிந்து, உதவி செய்வது உண்மையான மனித தொடர்பு மூலம் மட்டுமே சாத்தியம்.

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்

 

ஆசிரியர்கள் பெரும்பாலும் நமது சமுதாயத்தின் தனித்துவமான ஹீரோக்கள். இளைஞர்களின் வளர்ச்சியை வளர்த்துக் கொள்வதில் அவர்கள் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாகும். ஆசிரியர்களுக்கான நற்செய்தி அவர்களுடைய வேலைகள் எங்கும் செல்லப் போவதில்லை.

 

குழந்தை பராமரிப்பு பணி செய்பவர்கள்

குழந்தை பராமரிப்பு பணி செய்பவர்கள்


இவங்க எல்லாருடைய வேலையையும் ரோபோக்கள் பாக்கும் என்றாலும் இது கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டிய பணிகள் என்பதால், இவர்களின் வேலைக்கு அடுத்து 10 வருடங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கப்போவதில்லை. ஒருவேளை தொழில்நுட்பம் வளர்ந்து இவர்களின் வேலைக்கும் ஆபத்து வந்தால்... வேறு என்ன மனித குலம் அழியத் தொடங்கும் அவ்வளவுதான்...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
These are the few jobs that robots won’t take from us
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X