அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கே பொருளாதார ஆலோசனை வழங்கும் சென்னை பெண்மணி!

By Staff

இந்திரா நூயி, உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் ஆவார். அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதார ஆலோசகராகவும் இருக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில், நூயி ஒரு தாய், மனைவி மற்றும் மகள், சில சமயங்களில் தன் மகள்களுக்காக வீட்டுக்கு வரமுடியாத நேரங்களை நினைவுகூறும் போது "இதயம் வலிக்கிறது" என்று கூறுகிறார்.

அவரது குழந்தைப் பருவத்தில், நூயியின் தாய் , அவர்கள் மகள்களை , ஜனாதிபதி, பிரதம மந்திரி அல்லது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்பதை விளக்கி ஒரு உரையை வழங்க சொல்வார் . அவர்களில் சிறப்பாக உரையை விளக்கும் ஒருவருக்கு அவர் ஒரு பரிசை வழங்குவார் . இந்த நடைமுறை நூயிக்கு மற்றும் அவருடைய சகோதரிக்கு அவர்கள் விரும்பிய விஷயத்தில் ஒரு நம்பிக்கையை வளர்த்தது.

சென்னை!
 

சென்னை!

நூயி சென்னையில் ஹோலி ஏஞ்செல் உயர்நிலை பள்ளியில் படித்தார். சென்னை கிருஸ்துவ கல்லூரியில் இளநிலை பட்ட படிப்பை முடித்தார். பிறகு ஐஐஎம் கல்கத்தாவில் பட்ட படிப்பை முடித்தார். அதன்பின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக இருந்தார். பின்பு மேட்டூர் பீர்ட்செல் என்ற ஜவுளி நிறுவனத்தில் பணி புரிந்தார்.

சௌகரியமான உடை!

சௌகரியமான உடை!

நூயி, அமெரிக்காவில் உள்ள வணிக பள்ளியில் படிக்க விண்ணப்பித்தார். அவருக்கு அதில் இடம் கிடைக்காது என்று எண்ணி அவரின் பெற்றோர் இதற்கு சம்மதித்தனர். யேல் மேலாண்மை பள்ளியில் இருந்து ஸ்காலர்ஷிப்புடன் வெளிவந்தார். அவருடைய முதல் நேர்காணலுக்கு செல்வதற்கு ஒரு சூட் வாங்க நள்ளிரவு வரவேற்பாளராக பணி புரிந்தார். ஆனால் அந்த நேர்காணலில் அவர் தோல்வியுற்றார். அதன் பிறகு யேல் பேராசிரியர் அவருக்கு சௌகரியமான உடையை அணிய சொல்லி அறிவுறுத்தினார்.

நாமாக இருக்க வேண்டும்...

நாமாக இருக்க வேண்டும்...

அதன் பிறகு, மற்றொரு நேர்காணலுக்கு அவருக்கு சௌகரியமான உடையான புடவையில் சென்று அந்த வேலையை கைப்பற்றினார். இதில் இருந்து அவர் தெரிந்து கொண்ட பாடம், "நாம் நாமாக இருக்க வேண்டும்" என்பது. பிறகு 6 வருடங்கள் போஸ்டன் குழுமத்தில் பணி புரிந்தார். அங்கு பெண்ணாகவும், அமெரிக்கன் அல்லாதவருமான இவர் எல்லா வேலைகளையும் செய்து அவரின் மதிப்பை நிரூபித்தார். அதன் பின்,மொடோரோலாவின் துணை தலைவராகவும், கார்ப்பரேட் வியூகம் & திட்டமிடல் இயக்குநராகவும் பணி புரிந்தார்.

பிறகு, அமெரிக்காவில் உள்ள ஜுரிச் தொழிற்சாலை நிறுவனத்தில் 4 வருடங்கள் மேலாண்மை துறையில் உயர் அதிகாரியாக இருந்தார். 1994ம ஆண்டு திருமதி.நூயி, பெப்சிகோவில் இணைந்தார்.

பெப்சி தலைமை நிர்வாகி!
 

பெப்சி தலைமை நிர்வாகி!

பல உயர் நிலை ஒப்பந்தங்களின் பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தினார், குறிப்பாக பில்லியன் டாலர் ஒருங்கிணைப்புகளான ட்ராபிக்கானா , க்வேகர் ஓட்ஸ் போன்றவையும் அடங்கும். 2001ம ஆண்டு, அவர் சிஎப்ஒ ஆனார். பினார் 2006ம் ஆண்டு பெப்சிகோவின் தலைமை நிர்வாகி மற்றும் தலைவர் ஆனார். பெப்ஸிஸ்கோவின் விரிவாக்கம் மற்றும் அதன் அடையாளத்தை பல்வகைபடுத்துதல் ஆகியவற்றில் இந்திரா நூயி முக்கிய பங்கு வகித்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸிடம் கற்ற பாடம்!

ஸ்டீவ் ஜாப்ஸிடம் கற்ற பாடம்!

தொடக்கத்தில் பெப்சிகோ மென்பானங்களில் மட்டுமே அதன் பார்வையை செலுத்தி வந்தது. நூயி தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது ஸ்டீவ் ஜாப்ஸ் ஐ சந்தித்தார். ஒரு விஷயத்தை முன்னுரிமை படுத்த விரும்பினால் அந்த விஷயத்தில் இவரின் நேரடி தலையிடுதல் இருக்க வேண்டும் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவுறுத்தினார். மற்றும் தனது குழுவிடம் இருந்து விடாப்பிடியாக வேலையை எப்படி எடுக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து நூயி கற்று கொண்டார்.

ஊக்கம்!

ஊக்கம்!

இது தவிர, பெப்சிகோ தொழிலாளர்களை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டார். இளைய தலைமுறையினரை எழுந்து நின்று உயரம் தொட ஊக்கப்படுத்தினார். அவரிடம் நேரடியாக பணி புரிபவரின் பெற்றோருக்கு இன்றும் அவர் கடிதம் எழுதுகிறார். இதன்மூலம் மொத்த குடும்பத்தையும் பெப்சிகோ இணைக்கிறது. சிறு வயது முதல் தொடர்பு திறனில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஆழமாக பதிவு செய்கிறார். ஒரு சிறு குழுவை எப்படி உத்வேகப்படுத்த வேண்டும் , மற்றும் ஒரு விஷயத்தை எப்படி சரியாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும் போன்ற விஷயங்களை இளம் வயதிலேயே கற்று கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

வெற்றி!

வெற்றி!

ஒரு தலைமை நிர்வாகிக்கு, வெற்றிகரமான நிறுவனத்தை முற்றிலும் கவனிப்பது மிகவும் கடினமாக இருக்கும், ஏனென்றால் மக்கள் எப்போதும் அவசரத்தையோ அல்லது தேவைகளையோ உணர்வதில்லை. நூயி தடைகளை உடைத்து தொடர்ந்து வெற்றிகளை பெற முடிந்ததற்கு காரணம், அவருடைய ஆர்வம், ஆற்றல் மற்றும் வாழ்நாள் முழுதும் அவரை மாணவராக எண்ணும் தன்மை போன்றவை தான்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Success Story of Indra Nooyi, CEO of Pespsi and Co.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X