ஃபுட்வேர் டெக்னாலஜி முடித்தால் வேலைக்கு பஞ்சமில்லை!

ஒரு மனிதனுக்கு உடை எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அந்த அளவிற்கு காலணிகளும் அத்தியாவசியமானது என்றால் மிகையாகாது.

By Kani

ஒரு மனிதனுக்கு உடை எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அந்த அளவிற்கு காலணிகளும் அத்தியாவசியமானது என்றால் மிகையாகாது. "பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்" என்பது போல் சரியான உடையுடன் இணையும் காலாணிகளும் தோற்றப் பொலிவை கொஞ்சம் கூடுதலாக எடுத்துகாட்டுகிறது.

இன்றைய நவநாகரிக வளர்ச்சிக்கு ஏற்றபடி காலணி தொழிட் நுட்பங்களிலும் பல்வேறு வகையான மாற்றங்கள் வந்துகொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு காலணி நிறுவனம் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் இன்று வீட்டுக்கு ஒரு இன்ஜீனியர் இருப்பது போல் தெருவுக்கு ஒரு காலணி நிறுவனம் என்றாகிவிட்டது.

ஃபுட்வேர் டெக்னாலஜி முடித்தால் வேலைக்கு பஞ்சமில்லை!

இதற்கென பிரத்யோக இயந்திரங்களையும், பயிற்சி பெற்ற நபர்களையும் கொண்ட மிக நவீனமான ஒரு துறையாக காலணி தொழில்நுட்பம் மாற்றமடைந்து வருகிறது.

புதிய வடிவம் மட்டுமல்லாது வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து புதிய மாடல்களில் காலணிகளை தயாரித்து வழங்குவது உற்பத்தியாளர்களின் கடமையும், வியாபார யுக்தியுமாக மாறிவருகிறது.

ஆரம்ப கட்டத்தில் சிந்தனைத்திறன் மட்டுமே மூலதனமாக இருந்த இத்தொழிலில் தற்போது தொழில்நுட்பம் சார்ந்த படிப்பை முடித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

புற்றிசல் போல் புதிய நிறுவனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான வடிவமைப்பாளர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

என்னென்ன வாய்ப்புகள்:

வடிவமைப்பாளர், மேலாளர், சூப்பர்வைசர் என பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
வடிவமைப்பாளர்களுக்கு கற்பனை திறனும், படைப்பு திறனும் தேவை.

காலணி தொழிட் நுட்பத்தில் டிப்ளமோ முடித்த அறிவியல் பட்டதாரிகளுக்கு எக்சிகியூட்டிவ் அளவிலான பணிகளும் உள்ளன.

நுழைவுத் தேர்வு:

மத்திய தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஃபுட்வேர் டிசைனிங் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் ஆனது பிளஸ் 2 முடித்தவர்களை நுழைவுத் தேர்வு வாயிலாகக் காலணி மற்றும் தோல் துறை சார்ந்த பல்வேறு பிரத்தியேகப் படிப்புகளில் அனுமதியளிக்கிறது.

எங்கு படிக்கலாம்?

நொய்டா, சென்னையில் உள்ள புட்வேர் டிசைன் அண்டு டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட், சென்னை புட்வேர் பயிற்சி மையம் அல்லது சென்னை தோல் ஆராய்ச்சி மையம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் புட்வேர் டெக்னாலஜி இளநிலை படிப்பாக உள்ளது.

முதுநிலை அளவில் புட்வேர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங்கை தேர்வு செய்து படிக்க முடியும். காலணி தொழில்நுட்பத்தில், மனித வள மேம்பாட்டு பிரிவை தேர்வு செய்தும் படிக்கலாம்.

படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (FDDI) நொய்டா.

மத்திய காலணி பயிற்சி நிறுவனம் (CFTI) சென்னை.

மத்திய காலணி பயிற்சி நிறுவனம் (CFTI) ஆக்ரா.

ஹரியானாவின் தொழிற் பயிற்சி மற்றும் தொழில் கல்வி துறை, ஹரியானா.

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.

அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி, சென்னை.

பாரத் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, சென்னை.

பொறியியல் கல்லூரி, சென்னை.

லெதர் தொழில்நுட்ப கல்லூரி, கெல்கத்தா.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ரீஜினல் பொறியியல் கல்லூரி, ஜலந்தர்.

ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப நிறுவனம், கான்பூர்.

இன்ஸ்டிடியூட் ஆப் கவர்ன்மென்ட் லெதர் வெர்கிங் ஸ்கூல்

முசாபார்பூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, முசாபார்பூர்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி (என்ஐஎஃப்டி) புது தில்லி

தேசிய சிறு தொழில்கள் கழகம், சென்னை.

பிரியதர்சினி பொறியியல் கல்லூரி, வணியம்பாடி.

வேலை வாய்ப்பு:

தோல் தொழில்நுட்பம், காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரித்தல், அவற்றுக்கான வடிவமைப்பு, சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் இன்றைக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

சம்பளம்:

ஆரம்பகட்டத்தில் ரூ.15,000 ஆயிரம் முதல் சம்பாதிக்க முடியும் இதுவே போகப்போக மாறுபடும். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இந்த வகையான படிப்பிற்கு தனிமதிப்பு உள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Scope of footwear designing in India
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+