ஈஸியா சம்பாதிக்கலாம்... ஈவென்ட் மேனேஜ்மென்ட்!

எந்த வேலையாக இருந்தாலும் எடுத்த வேலையை திறம்பட நிர்வாகித்து சரியான திட்டமிடலுடன் எந்தவித குழப்பமும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்திக் காட்டுபவர்கள்தான் ஈவென்ட் மேனேஜர்.

By Kani

இன்றைய அவசர உலகில் யாரும் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளை இழுத்து போட்டு செய்ய தயராக இல்லை. இதற்கு அவரவர் சார்ந்த பணியும் ஒரு காரணமாக கூறலாம். முன்போல கூட்டுக்குடும்பங்கள் குறைவே இதற்கான முழு முதற்காரணமாக அறியப்படுகிறது.

அடடே இந்த வேலையை மறந்துட்டமே, அந்த வேலையை மறந்துட்டமே என்ற பதட்டத்தையெல்லாம் ஓரம் கட்ட உருவெடுத்துள்ள படிப்புதான் இந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட்.

ஈஸியா சம்பாதிக்கலாம்... ஈவென்ட் மேனேஜ்மென்ட்!

எந்த வேலையாக இருந்தாலும் எடுத்த வேலையை திறம்பட நிர்வாகித்து சரியான திட்டமிடலுடன் எந்தவித குழப்பமும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்திக் காட்டி கைத்தட்டோடு, பணமுடிச்சுகளையும் பெற்றுச்செல்வதுதான் இவர்களின் வேலை.

கையில் எடுக்கும் நிகழ்ச்சிகளின் அடிப்படைகளை ஆழமாக அறிந்து கொண்டு கல்யாணமாக இருந்தாலும் சரி, காதுகுத்தாக இருந்தாலும் சரி கச்சேரிகள் முதல் மொய் எழுதுவது வரை நிகழ்வை வெற்றிகரமாக முடித்து காட்டும் வித்தவான்கள்தான் இவர்கள்.

இந்தப் படிப்பை படிக்க என்னென்ன திறமைகள் தேவை:

  • சிறப்பான தலைமை தாங்கும் பண்பு
  • பேச்சுத் திறமை.
  • தகவல் தொடர்புத் திறன்.
  • ஒருங்கிணைக்கும் திறமை.
  • மார்க்கெட்டிங் யுக்தி.
  • ரிஸ்க்குகளை எதிர்கொள்ளும் திறன்.

ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பு:

இத் துறையில் டிப்ளமோ படிப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை பல்வேறு வகையான படிப்புகள் உள்ளன. சான்றிதழ் படிப்புகளும் உண்டு.

வேலை வாய்ப்புகள்:

இதை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் விஷ்வலைசிங் கான்செப்ட், பிளானிங், பட்ஜெட்டிங், ஆர்கனைசிங், கோ ஆர்டினேட்டிங், எக்சிகியூடிங் என இத் துறையில் பல்வேறு பிரிவுகளில் வேலைகள் உள்ளன.

மேலும் புராடக்ட் லாஞ்சிங், கார்ப்பரேட் மீட்டிங், செமினார், திருமணங்கள், பொருட்காட்சிகள் போன்றவற்றிலும் வேலை வாய்ப்புகளை பெறலாம்.

ஈவென்ட் மேனேஜ்மென்ட் சான்றிதழ் படிப்புகளை நடத்தும் நிறுவனங்கள்:

அமிதி இன்ஸ்டிடியூட் ஆப் ஈவென்ட் மேனேஜ்மென்ட், புது தில்லி

இன்ஸ்டிடியூட் ஆப் டூரிஸம் மற்றும் ப்யூச்சர் மேனேஜ்மென்ட் ட்ரெண்ட் (ITFT), சண்டிகர்

இன்டெர்நேஷனல் சென்டர் ஃபார் ஈவென்ட் மார்க்கெட்டிங் & மேனேஜ்மென்ட் (ICEM), புது தில்லி

டிப்ளமோ படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

நேஷனல் அகாடமி ஆஃப் ஈவென்ட் மேனேஜ்மென்ட் அண்ட் டெவலப்மெண்ட் (NAEMD), மும்பை

காலேஜ் ஆஃப் ஈவென்ட் மேனேஜ்மென்ட் (COEM), புணே.

ஈவென்ட் மேனேஜ்மென்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் (EMDI) மும்பை.

இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஈவென்ட் மேனேஜ்மென்ட் (IEM) மும்பை.

நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் மீடியா ஸ்டடிஸ், அகமதாபாத்

பி.ஜி., டிப்ளமோ படிப்பை வழங்கும் நிறுவனங்கள்:

அபேஜே இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன், புது தில்லி
ஈவென்ட் மேனேஜ்மென்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் (EMDI) மும்பை.

ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்பது கடந்த சில ஆண்டுகளாக அறியப்பட்டாலும் கூட எதிர்காலத்தில் இது மிகப்பெரிய வாய்ப்புகளை தன்னகத்தே கொண்ட துறை.

சம்பளம்: ஆண்டுக்கு 3.5 லட்சம் வரை ஊதியமாக பெறலாம். தனியார் நிறுவனங்களில் மாதம் 15,000 முதல் 20,000 வரை ஊதியமாக பெறலாம். தனியாக நிறுவனம் வைத்து நடத்தும் போது நிறுவனத்தின் பெயருக்கு ஏற்றார் போல் ஏகபோகமாக வருமானம் பெறலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Scope Of Event Management As A Career In India
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+