நீங்க ஆபீஸ்ல கிசு கிசு பேசுவீங்களா? அப்ப இதக் கொஞ்சம் மனசுல வெச்சுக்கங்க...

கிசுகிசுத்தல் உடநலனுக்கு நன்மை விளைவிப்பதாகும்

By Gowtham Dhavaman

நம்மளுக்கு சின்ன வயசுல சொன்னது, ஒருத்தங்க இல்லாதப்போ, அவங்களப்பத்தி பேசறது அதாவது கிசுகிசுக்கறது தப்புனு. அவுங்க மனச புண்படுத்தறது மட்டுமில்லாம, நம்ம பேரையும் கெடுக்கக்கூடிய விஷயம். ஆனாலும் அத யாரும் செய்யாம இல்ல. கிசு கிசு இல்லாத அலுவலகத்த பாக்கறது அபூர்வம். அப்பிடிப்பட்ட சூழல்ல நீங்க என்ன செய்யணும்?

நீங்க ஆபீஸ்ல கிசு கிசு பேசுவீங்களா? அப்ப இதக் கொஞ்சம் மனசுல வெச்சுக்கங்க...

கிசுகிசுக்கறது வாழ்க்கையோட முக்கியமான ஒரு பகுதி, வேலை செய்யற இடத்தையும் தாண்டி அது பரவி நிக்குது. நாம யாருங்கறத, நம்ம கிட்ட சொல்றத வெச்சு, நம்ம பத்தி சொல்றத வெச்சு நாம தெரிஞ்சுக்கறோம். நாம ஒரு சமூக கட்டமைப்புல இருக்கறதால கண்டிப்பா நாம மத்தவங்க கூட பழகியாகணும். அதுக்கு கிசுகிசு சரியான வழி.

வல்லுநர்கள் கருத்து :

வல்லுநர்கள் கருத்து :

அலுவலகம் மாதிரியான இடத்துல கிசு கிசு பேச்சை தடுக்கறது ரொம்ப சிரமமான விஷயம். எல்லா நேரமும் கிசுகிசு இருக்கத்தான் போகுது. நீங்க அத கேட்டு பழகிக்கங்கறது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துல மேலாண்மைத்துறை பேராசிரியை வாலஸ் பிரட் டன்ஹம் சொல்றது. சில நேரங்கள்ல அதிகமான கிசுகிசு வலம் வரும். சிலது நல்லதா இருக்கும். சிலது கெட்டதா இருக்கும். இன்னும் சிலது சம்மந்தமே இல்லாம இருக்கும். அந்த மாதிரி தருணங்கள்ள நாம என்ன செய்யணும்? எப்போ நாமளும் அதுல இணைந்து இருக்கணும், எப்போ ஒதுங்கி இருக்கணும்?

பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் :
 

பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் :

கிசுகிசு பக்கமே நாம தலவெச்சு படுக்க கூடாதுன்னு முடிவு நீங்க எடுத்துருந்தா, சில விஷயங்களை நீங்க தவறவிடுவிங்க. உங்களுக்கு உபயோகமா இருக்க கூடிய பலவிஷயங்களை, உங்க வேலை சமந்தமா, உங்க பதவி உயர்வு சமந்தமா பலவிஷயங்கள் உங்களுக்கு தெரியாம போகலாம். கிசுகிசு கேக்கறது மூலமா நம்ம அலுவலகத்துல என்ன நடக்குதுன்னு சுலபமா தெரிஞ்சுக்க முடியும். நமக்கு வந்துருக்கற புது ஆர்டர் என்ன? ஏன் மேலதிகாரி ஒரு வாரமா அலுவலகம் வரல? அடுத்து வரப்போற புது விஷயங்கள் என்ன? இப்பிடி பலவிஷயங்கள் தெரியவரும். இந்த மாதிரி முறையா வராத தகவல் சில நேரங்கள்ல, முறையா நமக்கு தெரியவர தகவலை விட உபயோகமா இருக்கும். முக்கியமா மக்கள் உங்கள நம்புவாங்க. ஏன்னா நம்பிக்கை இருந்ததா முக்கியமான விஷயங்களை பகிர்ந்துப்பாங்க. அவுங்க கூட இணக்கமா இருக்க இது சரியான வழி. "தகவல் தான் எப்போமே உண்மையான சக்தி"

அன்னப்பறவையாக இருப்பது அவசியம் :

அன்னப்பறவையாக இருப்பது அவசியம் :

அன்னப்பறவை பால்ல இருந்து தண்ணிய பிரிக்கும்னு கேள்விபட்டுருப்பீங்க. அந்த மாதிரி நீங்க நல்ல கிசுகிசுல இருந்து கெட்டதா பிரிச்சு பாக்க தெரிஞ்சுக்கணும். மத்தவங்க வாழ்க்கைய பத்தியோ, இல்ல அவுங்க குடும்பத்த பத்தியோ நீங்க காதுல வாங்க ஆரம்பிச்சா தவறான பகுதில நீங்க பயணிக்கறிங்கன்னு தெரிஞ்சுக்கலாம். ஆனா அப்படி பட்ட கிசுகிசு ரொம்ப அரிதாதான் நடக்கும். அதனால பயப்படத் தேவையில்லைன்னு லாபியான்க்கா சொல்றாங்க. இவங்க கென்டக்கி சமூகவலைத்தல ஆராய்ச்சி மையத்துல ஆசிரியையா இருக்காங்க.

 

 

கிசுகிசு கண்ணாடி மாதிரி :

கிசுகிசு கண்ணாடி மாதிரி :

நீங்க எப்பிடிப்பட்ட விஷயங்களை பேசறீங்களோ அப்பிடிப்பட்ட விஷயங்கள் தான் உங்கள பத்தியும் நிர்ணயம் செய்ய கூடியதா இருக்கும்.கிசுகிசு கேக்கறவங்க அவுங்க விஷயங்களை உங்கள நம்பி சொல்லலாமா வேணாமான்னு யோசிக்கற மாதிரி நிலைமையை உருவாக்கிடும். முக்கியமா நீங்க யாரப்பத்தியாவது தவறா பேசுனா கண்டிப்பா இந்த நிலைமை வரும்.

முக்கியமான சிக்கல் :

முக்கியமான சிக்கல் :

கிசுகிசு பேசிட்டு நீங்க போய்டலாம். ஆனா யாரைபத்தி பேசுனமோ அவுங்க காதுக்கே அந்த விஷயம் நீங்க சொன்னிங்கன்னு போய் சேர வாய்ப்பு இருக்கு. அதனால உங்களுக்கும் அவுங்களுக்கு எப்போமே ஒரு சலசலப்பு உருவாக வாய்ப்பு இருக்கு. அதனால கூடியவரைக்கும் நம்பிக்கையான மக்கள் கிட்ட கிசுகிசுக்களை சொல்றது சரியா இருக்கும். நம்பிக்கை வரவரைக்கும் சின்ன சின்ன விஷயங்களை சொல்லிப்பாக்கலாம்.

இடமறிந்து பேசுவது நலம் :

இடமறிந்து பேசுவது நலம் :

கிசுகிசு நீங்க பகிர்ந்துக்கும்போது மத்தவங்க உங்களப்பத்தி ஒரு யூகத்தை மனசுல உருவாக்கி வெச்சுருவாங்க. முக்கியமா உங்க மேலதிகாரி முன்னாடி இல்ல முதலாளி முன்னாடி அப்பிடிப்பட்ட விஷயங்களை செய்யாம இருக்கறது நல்லது. "கிசுகிசு மூலமா நீங்க ஒரு பெரியஆள் மாதிரி உங்க சகாக்களுக்கு தெரியலாம். ஆனா அதுவே பல முறை பல நபர்களுக்கு அவுங்க வேலைல தேவை இல்லாத இடையூற உண்டாக்கி இருக்கு. அதனால கிசுகிசு பகிர்ந்துக்க போறீங்கன்னா, யாரும் இல்லாத அறைல பகிர்ந்துக்குங்க. முக்கியமா இ-மெயில் மூலமாவோ இல்ல வாட்ஸப் மூலமாவோ வேண்டவே வேண்டாம். நீங்க இருக்கற எடத்துல ஒரு கிசுகிசு பகிர்ந்துக்க படுதுன்னா, அப்படியான்னு நீங்களும் கேட்டுக்கறது நலம். நம்ம பங்குக்கு நாமளும் ஏதாவது சொல்லணும்னு அவசியம் இல்ல.

தப்புன்னு தோணுனா தைரியமா தடுத்து பேசுங்க :

தப்புன்னு தோணுனா தைரியமா தடுத்து பேசுங்க :

ஒருத்தர பத்தின தவறான கிசுகிசு உங்க காதுல விழுது. கண்டிப்பா அவருக்கு இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்னு உங்களுக்கு தெரிஞ்சா, அத தடுக்க முயற்சிக்கலாம். உங்களுக்கு தெரிஞ்ச தகவலை அங்க சொல்லி அந்த கிசுகிசுவ தவிர்க்க பாக்கலாம். ஆனா அப்பிடி செய்ய நெறைய தைரியம் தேவை. அதுக்கு அடுத்து வர விளைவுகளை சந்திக்கிற பக்குவம் தேவை.

நினைவில் கொள்ள வேண்டியவை :

நினைவில் கொள்ள வேண்டியவை :

செய் :

1. கிசுகிசுக்கள அலுவலகத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க பயன்படுத்துங்க.
2. எப்பிடி நீங்க கிசுகிசு பகிர்ந்துக்கறீங்க - அந்த வழி ரொம்ப ரொம்ப முக்கியம்.
3. உங்க வார்த்தைகள் உங்கள எடைபோட்டு பாக்க உதவும். இதை மனசுல பதிச்சு வெச்சுக்குங்க.

செய்யாதே :

1. கிசுகிசு தப்புப்பான்னு ஒரே அடியா ஒதுங்கிட வேண்டாம். சில நேரங்கள்ள உங்களுக்கு அது உதவும்.
2. மேலதிகாரி முன்னாடி கிசுகிசு வேண்டவே வேண்டாம்.
3.தவறான ஒரு கிசுகிசு வந்தா முடிஞ்ச அளவுக்கு அதுல இருந்து விலகி நிக்க பாருங்க.

 

வழக்காய்வு #1: என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க உதவும் கிசுகிசு :

வழக்காய்வு #1: என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க உதவும் கிசுகிசு :

மிகப்பெரிய மருந்து நிறுவனத்துல அதிகாரியா இருக்கற கார்ல் கரீகன் அலுவலக கிசுகிசுவ நல்ல ஒரு விஷயமா பாக்கறாரு. சில நேரங்கள்ள கிசுகிசுக்கள குடுத்து வாங்கவும் செஞ்சுருக்காரு. ஒரு முறை தங்களோட தேவைக்காக அந்த கிசுகிசு வழிகளை நிறுவனம் பயன் படுத்திக்கிட்டத சொன்னாரு.

"நிறுவனத்த இப்போ இருக்கற எடத்துல இருந்து வேற இடத்துக்கு மாத்தவேண்டிய சூழ்நிலை. அத அரசல் புரசலா சில தெரிஞ்ச கிசுகிசு பேசற ஆட்கள் கிட்ட சொல்லி வெச்சேன். அவுங்க நிறுவனம் பூரா முறையா இல்லாம அந்த தகவல் பரவ வெச்சாங்க. அதே சமயம் அப்பிடி போனா என்ன நன்மைன்னும் சொல்லிவெச்சேன். தொழிலாளர்கள் கிட்ட நல்ல விதமான ஒரு எண்ணம் இருக்கறத பாக்க முடிஞ்சுது. கடைசில அதே தகவல முறையா சொல்ல வேண்டிய நேரம் வந்தப்போ, எந்த சிக்கலும் எங்களுக்கு இல்லாம இடத்த மாத்திட்டோம். இல்லாட்டி மிகப்பெரிய சிக்கல சந்திச்சுருக்கும் இந்த நிறுவனம்னு" சொல்லி முடிச்சாரு.

 

வழக்காய்வு #2 : சக்தி, சரண்யா மற்றும் சஞ்சனா :

வழக்காய்வு #2 : சக்தி, சரண்யா மற்றும் சஞ்சனா :

மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில், பேராசிரியையாக உள்ள சஞ்சனாவுக்கு அவுங்க நண்பி சரண்யா ஒருநாள் தொலைபேசில கூப்பிட்டாங்க. "நீங்க போன வருஷம், சக்தி கூட வேலை செஞ்சதா கேள்விப்பட்டேன். இந்த வருஷம் அவுரு எந்த துறைல இருக்காரு. ஆனா அவரால அவளோ நல்லா செயல் பட முடியல. உங்க கூட வேலை செஞ்சப்போ அவரு எப்பிடின்னு தெரிஞ்சுக்க கூப்பிட்டேன்னு சொல்லி இருக்காங்க.
இங்க பேராசிரியை சஞ்சனாவுக்கு குழப்பம். அவுங்க சக்திய பத்தி பேசுனா அது கிசுகிசுவா மாறிடும். அவுரு பேரு கெட்டுப்போய்டும். ஆனா சரண்யாகிட்ட சொல்லமையும் இருக்க முடியல, அதனால " என்கூட வேலை செய்யும் போது எனக்கு எந்த வித சிக்கலும் இல்ல, ஆனா மத்தவங்க சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கேன்னு சில விஷயங்களை பகிர்ந்துக்கிட்டு முடிச்சுக்கிட்டேன். இதுக்கு மேல சக்திக்கு சிபாரிசு பண்றத நிப்பாட்டிடுவேன். ஏன்னா அவர் வேலை எப்பிடின்னு கடைசில கிசுகிசு மூலமா என் காதுக்கே வந்துருச்சு"னு முடிச்சாங்க சஞ்சனா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Is Gossiping in Office Healthy? What Experts Says, Read here.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X