நேர்முகத் தேர்வில் உங்களைப் பற்றி தெரிவிக்கச் சொல்லும்போது எப்படி

வேலை, புதிய படிப்பில் சேருதல் என பலவற்றுக்கு நேர்காணல் வைக்கப்படுகிறது. அந்த நேர்காணலின்போது கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி என்பது தொடர்பான அலசலைக் காண்போம்.

ஒரு நேர்காணலில் "உங்களைப் பற்றி என்னிடம் சொல்லுங்கள்" என்ற கேள்வி எழும்போது, உங்கள் சமீபத்திய அனுபவங்கள் மற்றும் உங்கள் தற்போதைய நிலைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பதைப் பற்றி விளக்குவது முக்கியம். மேலும், உங்கள் தகுதியை நீங்கள் நேர்காணலுக்கான பதவியுடன் இணைத்து பேசுதல் நலம். நேர்காணலின்போது பணியில் இணைந்தால் எதிர்காலத்தில் செய்யப்படும் பணிகள், குறித்தும் பேசுவது அவசியம்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்ற கேள்வியானது, வேலைக்கான நேர்காணலில் கேட்கப்படும் என்பதை நாம் உறுதியுடன் கூற முடியும்.

இந்த ஆரம்ப கேள்விக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்பது ஒரு நல்ல தோற்றத்தை உங்களுக்காக உருவாக்க உதவுகிறது. மீதமுள்ள நேர்காணலுக்கும் ஒரு பாதையை அமைத்துத் தருகிறது.

நேர்முகத் தேர்வில் உங்களைப் பற்றி தெரிவிக்கச் சொல்லும்போது எப்படி

முக்கியமானவை

இந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கும் போது உங்களது சமீபத்திய அனுபவங்களை விவாதிக்கலாம். மேலும், தற்போது நீங்கள் வகித்து வரும் பணி குறித்தும் விவாதிக்கலாம்.

உங்கள் பின்னணி மற்றும் தகுதிகளை புதிய வேலையுடன் இணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நேர்காணலில் நீங்கள் பதில் தரும்போது அரசியல் அல்லது மதத்தைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், அவை பெரும்பாலும் உணர்ச்சிகரமான தலைப்புகளாக இருக்கின்றன.

உங்களைப் பற்றி என்னிடம் சொல்லுங்கள்" என்று கூறும்போது பதிலளிப்பது எப்படி

உங்களைப் பற்றி என்னிடம் சொல்லுங்கள் என்று கூறும்போது பதிலளிப்பது எப்படி என்று பார்ப்போம். முதலில், உங்கள் சமீபத்திய அனுபவத்தைப் பற்றி விவாதிப்பதன் மூலம் தொடங்க வேண்டும். இதைத் தொடர்ந்து நீங்கள் சமீபத்தில் பார்த்த வேலையிலிருந்து கிடைத்த அனுபவத்தைக் கூறலாம். நீங்கள் விண்ணப்பிக்கும் வேலையுடன் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் குறித்து பேசலாம். இதில் ஒவ்வொரு படிநிலையையும் இன்னும் விரிவாகப் பார்க்கலாம்:

சமீபத்திய அனுபவம் குறித்து விவாதிக்கலாம்: நேர்காணலில் உங்களுடைய தற்போதைய நிலை குறித்து சுருக்கமாக பதில் கூறுவதன் மூலம் சிறந்த தொடக்கமாக இருக்கும். நீங்கள் தற்போது வேலையில் இருந்தால், உங்களுடைய வேலையின் பெயர், பணி செய்யும் நிறுவனம், நீங்கள் செய்யும் பணியின் விவரம் குறித்து சுருக்கமாகச் சொல்லலாம்.

நீங்கள் தற்போது வேலையில் இல்லையென்றால், சமீபத்தில் நீங்கள் வேலை பார்த்த பணியின்போது கிடைத்த அனுபவங்களைச் சொல்லலாம். நீங்களாகவே ஆர்வத்துடன் பங்கேற்று வேலை செய்த விவரங்களையும் கூறலாம்.

பணிப் பயணம் குறித்த விளக்கம்

அடுத்ததாக நீங்கள் தற்போது வந்துள்ள நிலை குறித்து சுருக்கமாக எடுத்துக் கூறவேண்டும். நேர்காணலின்போது உங்களைப் பற்றிய விவரங்களைக் கூற வேண்டிய நிலைக்கு வந்துள்ளீர்கள். எனவே, இப்போது நீங்கள் வேலை பார்த்த அனுபவத்தின்போது கிடைத்த மிகவும் ஈர்க்கக் கூடிய சாதனைகளில் ஒன்று அல்லது இரண்டு சம்பவங்களைக் கூறலாம்.

வேலையுடன் உங்களது பின்னணியை இணைத்துக் கூறலாம். நீங்கள் விண்ணப்பிக்கும் வேலையுடன் உங்கள் அனுபவத்தை இணைத்து சிறிய தொகுப்பாகக் கூறலாம்.

உங்களது தகுதிகள் மற்றும் சாதனைகள் வேலை விளக்கத்துடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடலாம் அல்லது உங்கள் ஆர்வத்துடன் வேலை எவ்வாறு சரியாக அமைகிறது என்பதையும் கூறலாம்.

எதிர்காலத் திட்டம் குறித்து பேசலாம்(விருப்பமாக இருந்தால்): ஒரு பரந்த தொழில் இலக்கு குறித்து சுருக்கமாக பேசுவது உங்கள் ஆளுமை மற்றும் லட்சியத்தைக் காட்டுவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும், ஆனால் அது அவசியமில்லை. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் உங்கள் தொழில் இலக்குகள் மற்றும் திட்டங்கள் குறித்து உங்களிடம் கேட்கக்கூடிய பல கேள்விகள் எழலாம்.

கேள்விக்கு மாதிரி பதில்கள்

உங்களைப்பற்றி என்னிடம் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு இதோ சில மாதிரி விடைகள் எங்களிடம் உள்ளன. மேலும் மேலும் சிலமாற்று முறைகளையும் இங்கு கூறுகிறோம்.

கல்லூரி நேர்காணலுக்கான மாதிரிவிடை

நான்ஒரு சிறிய நகரத்திலிருந்து வருகிறேன். நான் அடிக்கடி வேடிக்கையான சில விஷயங்களைச் செய்வேன்.இதன்மூலம் புதுமையாக எழுதப் பழகிக் கொண்டேன். பொழுதுபோக்காகத் தொடங்கியஇந்த விஷயம் நாளடைவில் முழு நேர ஆர்வமாக மாறியது. மேல்நிலைப் பள்ளியில் நான் பயிலும்போது எனக்கு மிகச்சிறந்த ஆசிரியர்கள் கிடைத்தது எனது அதிர்ஷ்டம். அவர்கள் மூலம் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றேன். போட்டிகளில் வெற்றி பெற்றது எனது ஆர்வத்துக்கு மிகவும் ஊக்கமாக அமைந்தது.
எழுதுவதைத் தவிர, மற்ற நேரங்களில் இசையைக் கேட்பதும், இசைப்பதும் எனது வழக்கமாக உள்ளது. என்னுடைய பிடித்தமான பாடல்களை பயின்றதன் மூலம் கோடை முகாம்களில் அதை வைத்து உற்சாகமாக இருக்க முடிந்தது.கடந்த 2 கோடை கால முகாம்களில் நான் இசை நடத்துனராக இருந்தேன்.

ஆராய்ச்சி உதவியாளர் நேர்காணலுக்கு மாதிரி விடை

புரத ஆய்வுகள் தொடர்பான சிறிய ஆய்வகம் ஒன்றில் நான் தற்போது ஆராய்ச்சி உதவியாளராக இருக்கிறேன். அண்மையில் நாங்கள் உருவாக்கி, செயல்வடிவம் கொடுத்த ஆய்வு குறித்து அமெரிக்க பத்திரிகையில் கட்டுரை வெளியாகியிருந்தது.

நியூரோ அறிவியலில் எனக்கு அதிக ஆர்வம்உள்ளது. பட்டப்படிப்பு படிக்கும்போதுஅறிவியல் தொடர்பாக அறிவைப் பெருக்கிக் கொண்டேன். ஏபிசி நிறுவனத்தில் வேலை இருப்பதை அறிந்து உற்சாகம் கொண்டு விண்ணப்பித்துள்ளேன். ஆய்வகப் பணிகள் என்னுடைய அனுபவத்துக்கு சரியாகப் பொருந்தும் என்பதால் இந்தப்பணிக்கு விண்ணப்பித்தேன்.

அலுவல் பணிக்கான நேர்காணலுக்கு மாதிரிவிடை

அண்மையில் நான் சிறிய அளவிலான விநியோக நிறுவனத்தில் அலுவலக மேலாளராக பணியாற்றினேன். அங்கு விற்பனைக் குழுவுக்கு தேவையான உத்தரவுகளை வழங்குவது, உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிகளைக் கூறுவது, மார்க்கெட்டிங்,உற்பத்தி,விற்பனைப் பிரிவுக்கு அறிக்கையைத் தயார் செய்வது, தொடர்ச்சியான திட்டமிடல் மற்றும் கண்டுபிடிப்புகளை உறுதி செய்வது போன்றபணிகளைச் செய்து வந்தேன்.

வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் வரவேற்பாளராக பணியில் சேர்ந்து தற்போது இந்தப் பணிக்கு உயர்ந்துள்ளேன். என்னுடைய பல்துறை பின்னணியின் காரணமாக இந்தவேலை என்னைக் கவர்ந்தது.மேலும் பல்வேறு நிறுவனங்களில் என்னுடைய நீண்டகால அனுபவம் மூலம் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவ முடியும்.

கிராபிக் டிசைனர்பணிக்கான மாதிரி விடைகள்

பணி நிமித்தமாக நான் கிராபிக் டிசைனராகவும், ஆரம்பம் முதலே ஆர்ட்டிஸ்ட்டாகவும் உள்ளேன்.டிஜிட்டல் திட்டங்களில் நான் பணிபுரியவில்லை என்றாலும், களிமண் சிற்பங்களை உருவாக்குவேன். வாட்டர் கலர் ஓவியங்கள், மெட்டலார்ஜிக்கல் கலைகளில் பணிபுரிந்துள்ளேன்.

காட்சி அழகின் தொடுதிறன் மீது எனக்கு உண்மையான அன்பு உள்ளது. மேலும் அதை எனது டிஜிட்டல் வேலையிலும் கொண்டு வர முயற்சிக்கிறேன்.

என்னுடைய படிகஉருண்டை டிசைன் வேலையைப் பார்த்த என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவர், அதைப் பிடித்து கைகளால் உருட்ட முயல்வதாக வேடிக்கையாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற கருத்துகளை நான் மிகவும் விரும்புகிறேன்.

ஆசிரியர் நேர்காணலுக்கு மாதிரி விடைகள்

கடந்த 12 ஆண்டுகளாக நான் ஆசிரியப் பணியில் இருக்கிறேன். கல்வியானது, வேலையை விட முக்கியம் என எண்ணுபவன் நான். கோடை காலத்தில் நான் ஒரு புதிய நாட்டுக்குச் சென்று அங்கு கலாசார மாணவனாக மாற விரும்புகிறேன். ஒரு சமூக அறிவியல் ஆசிரியராக, ஒரு தலைப்பைக் கற்பிக்கும்போது ஒரு தனிப்பட்ட நிகழ்வைக் கொண்டு வருவதில் ஏதோ ஒரு சிறப்பு இருப்பதாக உணர்கிறேன்.

புத்தகத்தில்இருப்பதைப் படிப்பதில் பெரும்பாலும் மாணவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. அவர்கள் தற்போதைய விஷயங்களைப் பயில்வதில் ஆர்வமாக உள்ளனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு நான் கதை சொல்வேன். ஹாகியா சோபியாவுக்கு வெளியே 2 பூனைகள் சண்டையிடும் கதையை நான் சொன்னால், அது இஸ்தான்புல்லில் இருப்பதை மாணவர்கள் நினைவில் கொள்வார்கள்.இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கேள்விக்குப் பதில் அளிப்பதில் உள்ள மாற்று வழிகள்

சில வேலைகளுக்காக விண்ணப்பிக்கும்போது நேர்காணலில் கேள்விக்குப் பதில் அளிப்பதில் உள்ள சில மாற்று வழிகளை இங்கு தருகிறோம்.

உங்கள் ஆக்கப்பூர்வமான பக்கத்தைக் காட்டும் பொழுதுபோக்கு விஷயங்கள் குறித்து விவாதித்தல்
சுகாதாரம், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் குறித்து விளக்குதல்
சுற்றுப்பயணம், கலை, இசை போன்ற கலாச்சார அனுபவங்களை நினைவுகூர்தல்.
மனது சொல்வது போல சமூக செயல்பாடு மற்றும் தன்னார்வ பணி குறித்து விளக்குதல்.
தன்னிச்சையான ஆய்வு, புதிர் விளையாட்டு, வாசிப்பு திறன் போன்ற அறிவுசார் நோக்கங்கள் குறித்து விளக்குதல்.

பறவைகளைப் பார்த்தல், மலையேற்றம், சாகசப் படகுப் பயணம் போன்ற இயற்கையின் மீதான பொழுதுபோக்குகள் குறித்து விளக்குதல்.
நீங்கள் நேர்காணலுக்குச் செல்லும் நிறுவனம் கலாச்சாரம், மதிப்புகள், திட்ட அறிக்கையுடன் பொருந்தும் என நீங்கள் கண்டறிந்தால், இதுபோன்ற பதில்களை கூறுவது பொருத்தமாக இருக்கும்.

நேர்காணலை நடத்துபவர்கள் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள்...

நேர்காணலுக்கு வரும் நபர் தங்களைப் பற்றிய சிறிய அறிமுகம் செய்துகொள்வதற்கு வசதியாக உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்ற கேள்வியை நேர்காணல் நடத்துபவர்கள் கேட்கின்றனர். நீங்கள் விண்ணப்பித்திருக்கும் பணிக்கு நீங்கள் எவ்வாறு தொடர்புடையவர்கள் என்பதை அறிவதற்கும், உங்கள் பின்னணியை அறிவதற்கும் நேர்காணல் நடத்துபவர் இதைக் கேட்கிறார்.

பதில் அளிக்கும் ஏற்படும் தவறுகளை தவிர்ப்பது எப்படி

நேர்காணலின்போது பதில் தருபவர்கள் செய்யும் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி என்பதை இங்கு காணலாம்:

விண்ணப்பித்த வேலைக்கு சம்பந்தம் இல்லாத தனிப்பட்ட தகவல்களைத் தர வேண்டாம்.
பதில் அளிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
உங்கள் மதிப்பை குறைக்கும் வகையில் தேவையில்லாத தகவல்களையோ, உங்களது குழந்தைப் பருவக் கதைகளையோ கூற வேண்டாம்.
அரசியல், போர், போலீஸ், சிறை போன்ற அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை பேச வேண்டாம்.

நேர்காணலுக்கு சம்பந்தமில்லாத தலைப்புகள் குறித்து பேசவேண்டாம். உங்களால் பேச முடிந்ததை மட்டும் பேசுங்கள்.

கேள்விக்குப் பதில் அளிக்க சில டிப்ஸ்கள்

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்க சில டிப்ஸ்களை இங்கு தருகிறோம்.
தொழில்முறை மற்றும் தனிப்பட்ட தகவல்களை கலந்து உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். "உங்களைப் பற்றி என்னிடம் சொல்லுங்கள்" என்ற கேள்விக்கு உங்கள் பதிலைத் தர 2 வழிகளை நாங்கள் தருகிறோம். ஆனால் மிகவும் வலுவான பதில் இரண்டையும் தடையின்றி ஒருங்கிணைக்கும். உங்கள் தொழில்முறை சாதனைகளைப் பற்றி விவாதிக்கும்போது, அவற்றை நிறைவேற்ற உங்களுக்கு என்ன தனிப்பட்ட குணங்கள் உதவியது என்பதையும் குறிப்பிடுதல் அவசியமாகும்.

உங்கள் தனிப்பட்ட ஆர்வங்கள் குறித்து விவாதிக்கும்போது, பொருத்தமான தொழில்முறை திறன்களுடன் அவற்றை இணைத்து விளக்கலாம். இந்த வழியில், ஒரு உங்கள் திறமையான பதிலின் மூலம் நேர்காணல் செய்பவர் உங்கள் ஆளுமை மற்றும் பின்னணியை பற்றி அறிந்து கொள்ள முடியும்.
உங்கள் பதில்களை சுருக்கமாகச் சொல்ல வேண்டும். நேர்முகத் தேர்வின் முதல் கேள்வி இது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கூற வந்த விஷயத்தை வேகமாகவும், தெளிவாகவும் சொல்லுதல் அவசியம். மேலும், நீங்கள் நேர்காணல் செய்பவரை அதிக தகவல்களால் மூழ்கடித்தால், அவர்கள் நீங்கள் கூறும் மிகவும் முக்கியமான விஷயங்களை உள்வாங்குவது குறைவாக இருக்கும்.

உண்மையைப் பேசுங்கள். நேர்காணல் செய்பவரிடம் 100 சதவீதம் உண்மையாக இருப்பது கடினம்தான். இருந்தபோதும் முடிந்தவரை நேர்மையாகவும், உண்மையாகவும் பேசவும்.

நாளின் முடிவில், நீங்கள் உண்மையில் யார் என்று பணியமர்த்தப்பட வேண்டும். இல்லையெனில், உங்கள் புதிய வேலையில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள். முடிவில் நீங்கள் என்னவாக இருக்க விரும்பினீர்களோ அதுவாக நீங்கள் பணியமர்த்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் சேரும் வேலையில் மகிழ்ச்சி இருக்காது.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் நேர்காணல் கேள்வியில், அதிகம் எழுப்பப்படும் கேள்விகள்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு எது சிறந்த பதிலாக இருக்க முடியும்?

உங்கள் தற்போதைய நிலை, ஏற்கெனவே வேலைபார்த்த நிறுவனங்கள், வகித்த பதவிகள், உங்களின் கல்வித் தகுதி, எதற்காக இந்த நேர்காணலுக்கு வந்தீர்கள் என்று சொல்வதே சிறந்த பதிலாக இருக்கும். இந்தப் பதவிக்கு நீங்கள் எவ்வாறு சிறந்ததாக இருப்பீர்கள் என்பதற்கான காரணங்கை விளக்குவதும் சரியான பதிலாக இருக்கும்.

நேர்காணல் செய்பவர் உங்களைப் பற்றி என்னிடம் சொல்லுங்கள்? என்று கேட்கும்போது நீங்கள் எதைத் தவிர்க்க வேண்டும்?

பொய் சொல்லுவதைத் தவிர்க்கவேண்டும். புனைவுக் கதைகளையும் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். எப்போதும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பது அவசியம். நீங்கள் கூறுவது பொய் என்று நேர்காணல் செய்பவர் இறுதியில் கண்டறிந்துவிடுவார். எனவே, நேர்மையாக பேசுவது முக்கியம்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்று நேர்காணல் செய்பவர் கேட்பது ஏன்?

நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள். உங்களைப் பற்றி எப்படி தகவல்களை வெளிப்படுத்துகிறீர்கள். பதவிக்கு நீங்கள் பொருத்தமானவரா என்பதைக் கண்டறிய இந்த கேள்வி கேட்கப்படுகிறது.

இறுதியான சிந்தனைகள்

உங்களைப் பற்றி நேர்காணல் செய்பவரிடம் கூறும்போது நினைவில் கொள்ள வேண்டிய மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், நீங்கள் கூறும் விஷயத்தை முழுமையாக சொல்வது என்பதுதான்.

அந்த விஷயத்துக்கு ஒரு ஆரம்பம், ஒரு நடுப்பகுதி மற்றும் இறுதிப்பகுதி அதாவது முடிவு இருக்க வேண்டும்.

உங்களைப் பற்றி நீங்கள் எதை சொல்ல முடிவு செய்தாலும், அதை திறம்பட சொல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் கூறும் தகவல்களை புரிந்துகொள்வது அவசியம் என மனதில் கொண்டு பேசி முடிக்கவேண்டும்.

நீங்கள் உங்களைப் பற்றி பேசும்போது நீங்கள் முடிக்க விரும்பும் முக்கிய விஷயத்தைப் பற்றி சிந்தித்து சரியாகப் பேசுதல் நல்லது.

நேர்காணல் செய்பவர் கேட்கும் கேள்விக்கு பதிலைத் தயார் செய்யும் மனநிலையில் இருக்கவேண்டும். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பல பதில்களை வைத்திருப்பது நல்லது. பதில்களுக்கு நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும் வரை உங்கள் பதிலைப் பயிற்சி செய்து வைத்துக் கொள்ளுதல் நலம்.
----

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Interviews are held for jobs, admissions to new courses, etc. Let's analyze how to answer the interview questions. We can say with certainty that the Tell us about yourself question will be asked in a job interview. Here is the tips to follow.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+