டான்செட் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவது எப்படி என்பது தொடர்பாக நிபுணர்கள் டிப்ஸ்களை அளித்துள்ளனர். இந்த டிப்ஸ்களை பின்பற்றும் மாணவர்கள் இதுபோன்ற டான்செட் தேர்வில் வெற்றி பெறுவது உறுதி என்று நிபுணர்கள் தெரவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை பட்டப்படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்காக தமிழக அரசின் சார்பில் இரண்டு பிரதான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எம்பிஏ, எம்சிஏ. போன்ற படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக டான்செட் எனும் தமிழ்நாடு காமன் என்ட்ரென்ஸ் டெஸ்ட் (நுழைவுத்தேர்வு) நடத்தப்படுகிறது. முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு சிஇஇடிஏ எனும் காமன் இன்ஜினியரிங் என்ட்ரென்ஸ் டெஸ்ட் நடத்தப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இத்தகைய தேர்வுகளில் மாணவ, மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

டான்செட் தேர்வு:
அண்ணா பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல், கலை, அறிவியல் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்களுக்கு டான்செட் தேர்வு நடைபெறும்.
சிஇஇடிஏ தேர்வு:
அண்ணா பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம். அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் இந்த மதிபெண் அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கையை வழங்கலாம்.
டான்செட் தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மிஷின்ஸ்ட்ரேஷன் - எம்.பி.ஏ, மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர முடியும்.
சிஇஇடிஏ - பி.ஜி தேர்வு மூலம் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள், மாஸ்டர் ஆப் இன்ஜினியரிங் - எம்.இ,
மாஸ்டர் ஆப் டெக்னாலஜி - எம்.டெக், மாஸ்டர் ஆப் ஆர்க்கிடெக்சர் - எம்.ஆர்க், மாஸ்டர் ஆப் பிளானிங் - எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர முடியும்.
மாணவர்களுக்கான கல்வித்தகுதிகள்:
எம்.பி.ஏ., படிப்புக்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., ஆகிய பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது என்று தெரியவந்துள்ளது. அதேபோல், இதர படிப்புகளுக்கும் துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பில், இதே மதிப்பெண் சதவீதத்தை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு தேதி விவரம்:
எம்.சி.ஏ படிப்புகளுக்கு மார்ச் 9-ம் தேதி 10:00 முதல் 12:00 மணி வரையும், எம்.பி.ஏ படிப்புகளுக்கு மார்ச் 9-ம் தேதி 02:30 மணி முதல் 04:30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.
எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 10-ம் தேதி 10:00 மணி முதல் 12:00 மணிவரையும் நடைபெறும்.
இந்தத் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 7-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து விவரங்களைப் பெற முடியும்..
இனி எம்பிஏ படிப்புகளில் சேர உதவும் டான்செட் தேர்வுக்குத் தயாராவது எப்படி என்பதைப் பார்ப்போம்.
டான்செட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு திறமையான திட்டமிடுதலும், தொடர்பான புத்தகங்களும், தொடர் முயற்சியும் அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றன.
தேர்வுக்குத் தயாராவது முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
நேர மேலாண்மை
எந்தவொரு தேர்விலும் வெற்றி பெற நேர மேலாண்மை முக்கியமானது. அதாவது, தேர்வுக்குத் தயாராவதற்காக மாணவர்கள் நேரத்தைத் திட்டமிட்டு பிரித்து அதற்கேற்ப படித்து பயன் பெறவேண்டும்.
மாணவர்கள் சரியான திட்டத்தை வகுத்து அனைத்துப் பாடங்களுக்கும் நேரத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
தேர்வுக்குத் தயாராகும் போது, மாணவர்கள் நேர வரம்பைக் கவனித்து கேள்விகளைப் பயிற்சி செய்ய வேண்டும், இது அனைத்து கேள்விகளையும் உள்ளடக்கும் வகையில் தேர்வுக் கூடத்தில் நேரத்தை நிர்வகிக்க மாணவர்களுக்கு நிச்சயமாக உதவுகிறது. கடினமான கேள்விகளுக்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால், மாணவர்கள் எளிதான கேள்விகளுக்கு முதலில் பதில் அளிக்கலாம்.
மாணவர்கள் தேர்வுக் கூடத்தில் நேரத்தை திட்டமிட்டு நிர்வகித்தால் மட்டுமே அனைத்து கேள்விகளுக்கும் விடை காண முடியும். எனவே கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து கேள்விகளையும் தீர்க்க பயிற்சி செய்வது அவசியம். எனவே அதற்காக மாணவர்கல் நல்ல முறையில் தயாராக வேண்டும்.
கருத்துக்களைத் தெளிவுபடுத்துதல்
எந்தவொரு தேர்வுக்கும் சிறப்பாகச் செயல்பட கருத்துத் தெளிவு அவசியம் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். மாணவர்கள் தங்கள் அடிப்படைகள் மற்றும் கருத்துகளை தெளிவுபடுத்த குறிப்பு புத்தகங்களை முதலில் படிக்க வேண்டும்.
கேள்விகளை சரியாக புரிந்துகொள்ளவும், அவற்றுக்கு விடையளிப்பதற்கான அணுகுமுறையையும் மேம்படுத்த சூத்திரங்கள், எண்கள், விதிகள், கோட்பாடுகள், சட்டங்கள், சிறு தந்திரங்கள், சொற்களஞ்சியம் போன்றவற்றைத் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். புரிந்துகொண்டு பதில் அளிக்கும்போது நீங்கள் குறுகிய நேரத்தில் பதில் அளித்து தேர்வில் வெற்றி பெற முடியும்.
பலம் மற்றும் பலவீனத்தை அறிந்துகொள்ளுதல்
தேர்வுக்குத் தயாராகும்போது உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை அனைத்து பிரிவுகளிலும் பகுப்பாய்வு செய்து கொள்வது முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை அடையாளம் காண சிறந்த வழி, முந்தைய ஆண்டு வினாத்தாள்களுக்கு பதில் அளித்தல், மாதிரி தேர்வுகளை எழுத முயற்சித்தல் ஆகியவையாகும். உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை கண்டறிந்த பிறகு, சரியான படிப்புத் திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இதன்மூலம் உங்கள் பலவீனமான பாடங்களுக்குக்கு அதிக நேரத்தையும், பலம் மிகுந்த பாடங்களுக்கு குறைந்தபட்ச நேரத்தையும் ஒதுக்குங்கள். உங்கள் பலவீனமான பகுதிகளை வலுப்படுத்திய பிறகு, உங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க இந்தப் பகுதியின் தொடர்புடைய கேள்விகளைப் பயிற்சி செய்ய வேண்டும்.

மாதிரித் தேர்வு:
உங்கள் தயாரிப்பு நிலையை சரிபார்க்க ஒரே வழி மாதிரித் தேர்வுதான். இது மாணவர்களுக்கு உண்மையான தேர்வு குறித்த புரிதலை அளிக்கிறது. உங்கள் செயல்திறன் மற்றும் மாதிரித் தேர்வுகளில் மதிப்பெண்களை பகுப்பாய்வு செய்து, ஒரு குறிப்பிட்ட பலவீனமான பிரிவில் உங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க சரியான திட்டத்தை உருவாக்கமுடியும்.
ஆனால் மாணவர்கள் தங்களின் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தின்படி தொடர்புடைய மாதிரித் தேர்வுகளை மட்டுமே எழுதி பின்பற்ற வேண்டும். மாதிரித் தேர்வுகளை முயற்சித்த பிறகு உங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். தேர்வில் உங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க மிகவும் பொருத்தமான கேள்விகளைப் பயிற்சி செய்வது நல்லது.
வேகம் மற்றும் துல்லியத்தை பராமரித்தல்
தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேகம் மற்றும் துல்லியத்தை பராமரிப்பது முக்கியம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் துல்லியம் மற்றும் வேகத்தை மேம்படுத்த, அதிக கேள்விகளை அடிக்கடி பயிற்சி செய்வது நலம்.
நெகட்டிவ் மார்க்கிங்கில் கவனம் செலுத்தி, உங்களுக்கு நம்பிக்கை உள்ள கேள்விகளுக்கு மட்டும் விடை அளிக்க வேண்டும். சில நேரங்களில் அதிகமான கேள்விகள் உங்கள் மதிப்பெண்ணையும் தரவரிசையையும் குறைக்கும். உங்கள் வேகத்தையும் துல்லியத்தையும் அதிகரிக்க கணக்கீட்டின்படி பணியாற்றுங்கள். வேகத்தை பராமரிக்க நீங்கள் குறுகிய தந்திரங்களையும் அதற்கான செயல்முறைகளையும் பயன்படுத்தலாம்.
மீண்டும் படித்தல்
அனைத்து பாடங்களையும் சரியாக உள்வாங்குவதற்கு மீண்டும் படிப்பது முக்கியம். நன்றாக மதிப்பெண் பெறுவதற்கு, பார்முலா, கேள்விகள் ஆகியவற்றை தொடர்ந்து மீண்டும் படிப்பது முக்கியம். உங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க கையால் எழுதப்பட்ட சிறு குறிப்புகள் மற்றும் குறிப்பு புத்தகங்களை நீங்கள் மீண்டும் மீண்டும்ப படிக்க வேண்டும். முறையான படிப்பு, பயிற்சி இல்லாமல், அனைத்து பாடங்களையும் மாணவர்களால் சரியாக தயாரிக்க முடியாது.
பொருத்தமற்ற தலைப்புகளைப் படிக்க வேண்டாம்
உங்கள் தேர்வு நிலைக்கு ஏற்ப மட்டுமே உங்களை நீங்கள் தயார் செய்ய வேண்டும். தேர்வில் சிறப்பாக செயல்பட, தொடர்புடைய மற்றும் முக்கியமான தலைப்புகள், பாடங்களை மட்டும் படிக்கவும். பொதுவாக தேர்வில் கேட்கப்படாத பொருத்தமற்ற கேள்விகளுக்கு நேரம் கொடுக்க வேண்டாம். பாடத்திட்டம் மற்றும் முந்தைய ஆண்டு தாள்களை நன்கு ஆராய்ந்து, அதற்கேற்ப படிக்கவும். சில நேரங்களில் மாணவர்கள் தேர்வுக்கு முக்கியமில்லாத கடினமான கேள்விகளை பயிற்சி செய்ய அதிக நேரம் கொடுக்கிறார்கள், அது உங்கள் நேரத்தை வீணாக்கும் என்பதை நினைவில் நாம் கொள்ளவேண்டும். நல்ல மதிப்பெண்களைப் பெற, பொருத்தமான கேள்விகள் மற்றும் மாதிரித் தேர்வு தொடர்களை மட்டுமே நீங்கள் பின்பற்ற வேண்டும்.
தன்னம்பிக்கையுடன் இருங்கள்
தேர்வுக்கான தயாரிப்பின் போது மாணவர்கள் உங்களின் தன்னம்பிக்கை அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவோம் என்ற நினைப்பில் நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள். மன அழுத்தம் இல்லாமல் சிறந்த முறையில் தேர்வுக்கு தயார் செய்ய நம்பிக்கை முக்கியம் என்பதை உணர வேண்டும். நம்பிக்கை இருந்தால், உங்கள் போட்டியாளர்களை எளிதாக விரட்டி அந்த இடத்தில் நீங்கள் அமரலாம். மாணவர்கள் அளவை விட தரமான படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நம்பிக்கையின்மையால் உங்கள் தேர்வு தயாரிப்பு மற்றும் மதிப்பெண் எடுப்பதை பாதிக்கிறது.
நிபுணரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள்
மாணவர்கள் தேர்வுக்கான தயாரிப்பின் போது நிபுணர்களையும் அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பது அவசியமாகும். வல்லுநர்கள் ஆர்வமுள்ளவர்களை மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்ட முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேர்வில் அது அவர்கள் சிறப்பாகச் செயல்பட உதவும். மாணவர்கள் தயாரிப்பின் போது கருத்தரங்கு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
சிறந்த மெட்டீரியல், புத்தகங்களை பின்தொடர்தல்
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் சிறந்த மெட்டீரியல், புத்தகங்களை பின்தொடர்தல் அவசியமாகும்.
சிறந்த புத்தகங்களை மாணவர்கள் தங்களின் விருப்பப்படி தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும். சில மாணவர்கள் ஆன்லைன் கற்றலை விரும்புகிறார்கள், ஆனால் அவர்களில் சிலர் ஆஃப்லைன் வகுப்பறை கற்றலை விரும்புகிறார்கள். இது மாணவர்களைப் பொறுத்ததாகும். தேர்வுக்காக அவர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆதாரங்களைப் பின்பற்றலாம். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற நல்ல புத்தகங்களின் தேர்வும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேர்வுக்கான புத்தகங்கள், வினா-விடை வங்கிகள், மெட்டீரியல்கள், முந்தையத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் ஆலோசனைகள், கைடுகளின் வழிகாட்டல்கள் இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற உங்களுக்கு உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications












