வங்கித் தேர்வில் வெற்றி பெற எளிய வழி இருக்கு.... நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்....

வங்கி வேலைகளில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என்பது இன்றைய கால இளைஞர், இளைஞிகளின் வாழ்நாள் லட்சியமாகவே இருந்து வருகிறது. அதற்காகவே கல்லூரிக் காலம் முதல் வங்கித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் ஏராளம். திட்டமிட்டு படித்தால் வங்கித் தேர்வில் எளிதில் வெற்றி காணலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு வங்கி மாதிரித் தேர்வுகளை அடிக்கடி எழுதிப் பார்த்து வெற்றி பெறுவதும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

வங்கித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு மாதிரித் தேர்வுகளை எழுதுவது ஏன் முக்கியம் தெரியுமா...

நிபுணர்கள் தரும் அட்வைஸ் கீழே உள்ளது. அவற்றைப் படித்துப் பார்க்கும்போது வங்கித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு மாதிரி தேர்வுகளை அடிக்கடி ஏன் எழுதுவது முக்கியம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

வங்கித் தேர்வில் வெற்றி பெற எளிய வழி இருக்கு.... நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்....

1. வங்கி தேர்வுகளில் மாதிரித் தேர்வுகளின் முக்கியத்துவம்

உங்களில் பலர் உங்கள் வங்கித் தேர்வுக்குத் தயாராகும் போது ஆஃப்லைன் மாதிரித் தேர்வுகளை (எழுதும் முறை) முயற்சிக்க விரும்புகிறீர்கள். இருப்பினும், இந்த நடைமுறை நீண்ட காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்காது. இந்த கட்டுரையின் உதவியுடன், வங்கித் தேர்வுத் தயாரிப்பில் மாதிரித் தேர்வுகளின் முக்கியத்துவத்தை நாம் விவாதிப்போம்.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள், இளைஞிகள் வங்கித் தேர்வுகளை எழுத வருகின்றனர். எனவே, வங்கிகளில் வேலை கிடைப்பது என்பது அனைவருக்குமே மிகவும் கடினமாகி வருகிறது. வங்கித் தேர்வுகளில் கேள்விகள் அரிதாகவே திரும்பத் திரும்பக் கேட்கப்படுகின்றன.
மேலும் ஒவ்வொரு முறையும் கேள்வி கேட்கும் பாணியும் படிப்படியாக உருவாகி மாறி வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளின் ஐபிபிஎஸ் (IBPS) அல்லது எஸ்பிஐ (SBI) வங்கித் தேர்வு தேர்வுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு பிரிவிலும் நிறைய மாற்றங்களைக் காண முடிகிறது.

இருப்பினும், முந்தைய ஆண்டு வெளியான வங்கித் தேர்வு வினாத் தாள்களில் இருந்து கேள்விகளை எடுத்து பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது என்று நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் இந்த தாள்களில் இருந்து பயிற்சி செய்வது உங்களுக்கு இருக்கும் சிரமத்தின் அளவை மதிப்பிடுவதற்கும் அதன் அடிப்படையில் சொந்தமாக நாம் தயாரித்த வினா-விடைகளை பகுப்பாய்வு செய்வதற்கும் உதவும்.

பாடங்களில் இருந்து பெறும் அறிவைத் தவிர, நல்ல மதிப்பெண்களைப் பெற உங்களுக்கு ஒரு சிறந்த உத்தியும், உபாயமும் தேவை. ஒவ்வொரு பிரிவுக்கும் நீங்கள் எந்த நேரத்தை ஒதுக்க வேண்டும், எந்த வரிசையில் நீங்கள் கேள்விகளை முயற்சிக்க வேண்டும், எந்த கேள்விகளை உடனடியாக முயற்சி செய்யலாம் மற்றும் எவற்றைத் தவிர்க்கலாம் போன்றவற்றுக்கு நாம் திட்டமிட வேண்டும்.

வங்கித் தேர்வுக்குத் தயாராகும் ஒவ்வொரு ஆர்வலருக்கும் வெவ்வேறு வகையான உத்திகள் இருக்கும். உங்கள் நண்பருக்கு வேலை செய்யும் உத்தி உங்களுக்கு போதுமானதாக இருக்காது. மாதிரித் தேர்வுகள் மூலம், நீங்கள் வெவ்வேறு உத்திகளை முயற்சி செய்து, உங்களுக்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

வங்கித் தேர்வில் வெற்றி பெற எளிய வழி இருக்கு.... நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்....

பின்பற்ற வேண்டிய யோசனைகள்....

தேர்வின்போது கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் சமமான திறன் உள்ளது. நீண்ட மற்றும் சிக்கலான கேள்விகளுக்கு நேரத்தை வீணடிப்பதை விட ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தீர்க்கக்கூடிய கேள்விகளை நீங்கள் முயற்சிப்பது மிகவும் முக்கியம்.

மாதிரித் தேர்வுகளை அடிக்கடி எழுதிமுயற்சிப்பது உங்கள் பலம் மற்றும் உங்கள் மேம்பாடுகளை அடையாளம் காண உதவும்.

மாதிரித் தேர்வுகள் உங்கள் தேர்வுக் தவலையை குறைக்கலாம். உண்மையான தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் வகைக்கு நீங்கள் பழக்கமாகி விடுவீர்கள். இந்த மாதிரித் தேர்வுகள் உங்களுக்கு சிறந்த உத்திகளை உருவாக்க உதவுகின்றன.

உங்களின் தவறுகளை ஆய்வு செய்தல், நீங்கள் சிறப்பாகச் செய்திருக்கக்கூடிய விஷயங்களை சரிபார்த்தல், உத்திகளை உருவாக்குதல் மற்றும் பகுப்பாய்வு செய்வது குறித்து ஆலோசித்தல் நல்லது. மாதிரித் தேர்வுகள் மூலம் நீங்கள் எப்போதும் வெவ்வேறு விஷயங்களை முயற்சி செய்யலாம்.

தேர்வுகள் பொதுவாக கடினமானதாக இருக்கும், ஏனெனில் கிடைக்கக்கூடிய குறுகிய நேரத்திற்குள் கேள்விகளைத் தீர்க்க வேகமும் துல்லியமும் உங்களுக்குத் தேவை.

It is imperative to improve both speed and accuracy if you wish to clear bank exams.
Speed and accuracy play a vital role as each incorrect answer bring down your score by one point which can lead to a large difference in the final result.

In our opinion, work on accuracy first and practice more to improve speed later.
தேர்வுகளின்போது சில கேள்விகள் எளிதாகச் செய்யக்கூடியதாக இருக்கும். சில கேள்விகளுக்கு விடையளிக்க அதிக நேரம் எடுக்கும்.

மாதிரித் தேர்வுகள் உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதை மட்டும் அளவிடுவது மட்டுமல்லாமல் உங்கள் கருத்துகளையும் வலுப்படுத்த உதவுகிறது. மேலும் அதே தகவலை நீங்கள் பின்னர் மீட்டெடுக்க உதவி செய்கிறது.

முழுமையான மாதிரித் தேர்வுகளை முயற்சித்த பிறகு, உங்கள் மதிப்பெண்ணை மட்டுமல்ல, தீர்வுகளையும் பார்ப்பது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

தீர்வின் அணுகுமுறையைப் பார்க்கவும், அது உங்கள் அணுகுமுறையிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்பதையும், இந்த அணுகுமுறை நேரத்தைக் குறைக்க உதவுமா என்பதையும் அலசி ஆராய்ந்து பார்க்கவும்.

கீழ்கண்ட குறிப்புகள் உங்கள் வேகம் மற்றும் துல்லியத்தை மேம்படுத்த உதவும்

நீங்கள் வங்கித் தேர்வுகளில் தேர்ச்சி பெற விரும்பினால், வேகம் மற்றும் துல்லியம் இரண்டையும் மேம்படுத்துவது அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

தேர்வுகளில் நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் உங்கள் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். இதனால் வேகமும் துல்லியமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன, இது இறுதி முடிவில் பெரிய வித்தியாசத்திற்கு வழிவகுக்கும்.

முதலில் துல்லியமாக வேலை செய்யுங்கள், பின்னர் வேகத்தை மேம்படுத்த மேலும் பயிற்சி செய்யுங்கள்.

மாதிரித் தேர்வுகள் மூலம் மட்டுமே இதை நீங்கள் செய்ய முடியும், அங்கு நீங்கள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் உங்கள் முன்னேற்றத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை மாதிரித் தேர்வு எழுதும்போது எடுக்கும் மதிப்பெண்களைப் பார்த்து, அதை மற்ற மாதிரித் தேர்வு மதிப்பெண்களுடன் ஒப்பிடுங்கள்.

தினமும் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் பணிபுரிந்தாலும், பயிற்சி கேள்விகளுக்கு நேரம் ஒதுக்க முயற்சி செய்யவும்.

வங்கி வேலை வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யவேண்டும். இடைவெளி கிடைக்கும்போதெல்லாம் மாதிரித் தேர்வுகளை எழுதுங்கள். உங்களிடம் 3 நிமிடங்கள் மட்டுமே இருந்தால் கூட, ஒரு கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கவும்.

முழு மாதிரித் தேர்வு, பகுதியளவு மாதிரித் தேர்வு அல்லது பிரிவு மாதிரி தேர்வு எல்லா வகையான மாதிரித் தேர்வுகளையும் முயற்சிக்கவும். இது இரண்டு வழிகளில் உதவுகிறது

1. நீங்கள் மாதிரித் தேர்வுகளுக்குப் பழகுவீர்கள்

2. மாதிரித் தேர்வில் நீங்கள் எவ்வளவு அதிகமாக தோல்வியடைகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது.

உங்கள் செயல்திறனைக் கண்காணிக்க மாதிரித் தேர்வுகள் உங்களுக்கு உதவும்

மாதிரித் தேர்வுகள் உங்கள் செயல்திறனைக் கண்காணிக்க உதவும். உங்கள் தவறுகளை சரிபார்க்கவும் உதவும்.
நீங்கள் தவறாக முயற்சித்த சில கேள்விகள் இருக்கலாம் மற்றும் உங்களுக்குத் தெரிந்த ஆனால் முயற்சிக்க முடியாத கேள்விகளும் இதில் கிடைக்கலாம்.

இந்த 2 வகையான கேள்விகள் மட்டுமே உங்கள் மதிப்பெண்ணையும் தரவரிசையையும் தீர்மானிக்கும். இவற்றை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

விடை அளிக்கப்படாத கேள்விகள் இதில் இருக்கலாம், ஏனெனில்
(அ) அதன் அர்த்தம் தெரியவில்லை- இந்த தலைப்புகளில் அதிகம் படிக்க வேண்டும்
(ஆ) அர்த்தத்தை அறிந்து கொள்ளுங்கள், அதுதொடர்பான பயிற்சியில் ஈடுபடவேண்டும்.

2. தவிர்க்கக்கூடிய பிழைகள்

(அ) கணக்கீட்டுப் பிழைகள்: தேர்வுகளின் கணக்கீட்டு பிழைகள் வரக்கூடும். எனவே ஒன்று முதல் 30 வரையிலான வாய்ப்புகளை நன்றாகக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மனதில் சீரற்ற கணக்கீடுகளைச் செய்யுங்கள். உங்களை கூர்மைப்படுத்துங்கள்.

(ஆ) தவறான மற்றும் நீண்ட அணுகுமுறையைப் பயன்படுத்தியதால் வரும் பிழைகள்: இதைத் தவிர்க்க விரைவாகவும் எளிதாகவும் தீர்க்க வழிகளைக் கண்டறிதலாகும்.

(இ) முதலில் நேரத்தைச் செலவழிக்கும் கேள்விகளை முயற்சித்தல்: இந்தத் தவறையும் சிலர் வங்கித் தேர்வுகளில் அடிக்கடி செய்து தோல்வி காண்கின்றனர். ஒவ்வொரு கேள்விக்கும் சமமான மதிப்பெண்கள் உள்ளன. இது உங்களுக்குத் தெரியும், இல்லையா. எனவே, நன்கு தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் அளியுங்கள். மாதிரித் தேர்வுகளில் உங்கள் செயல்திறனைக் கண்காணிக்கவும். உங்கள் துல்லியம் என்ன? உங்கள் வலுவான தலைப்புகள் என்ன? உன்னுடைய பலவீனங்கள் என்ன? என்பதைப் புரிந்துகொண்டு நன்கு விடையளியுங்கள்.

இதன்மூலம் வங்கித் தேர்வுகளை நீங்கள் எளிதில் வெற்றிகரமாக முடிக்கலாம்.
மாதிரித் தேர்வுகளை அடிக்கடி எழுதி வெற்றி காண்பதன் மூலம் எளிதில் நீங்கள் மிகச் சிறந்த வங்கி ஒன்றில் பணியில் அமரலாம் என்பது நிபுணர்களின் அட்வைஸாக உள்ளது.

இணையத்தில் வங்கித் தேர்வுகளுக்காக ஏராளமான மாதிரித் தேர்வுகள் உள்ளன. அவற்றை எழுதி பழகுவது இளைஞர்கள் மிகவும் நல்லது. பின்னர் நீங்களும் சிறந்த வங்கியாளர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Mock tests will help you crack Banking Exams. With lakhs of people appearing for bank exams every year, getting a job in your desired bank is getting much more difficult. Questions are rarely repeated in the bank exam and the pattern and style are gradually evolving. With the help of this post, we will discuss the importance of mock tests in bank exam preparation.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+