டிஎன்பிஎஸ்சி தேர்வில் பாதிகிணறு மொழியறிவு பாடத்தில் இருக்கிறது எளிதாக தாண்டலாம்

Posted By:

டிஎன்பிஎஸ்சி என்ற கனவுவாரியம் வென்றுவிடலாம் எளிதாக அதற்கான எளிய வழிகள் இதோ உங்களுக்காக படியுங்கள் வெற்றி பெறுங்கள். டிஎன்பிஎஸ்சி என்ற கனவுவாரியம் வென்றுவிட எளிதான வழி மொழியறிவாகும் அதனை வெல்லும் யுக்தியை அறிந்து கொள்ளல் அவசியம் ஆகும் . டிஎன்பிஎஸ்சிக்கு பாதி கிணறு தாண்ட மொழிப்பகுதியில் நூறு மதிபெண்கள் பெறவேண்டும் . அதனை வெல்ல இலக்கணப்பகுதியோடு செய்யுள் பகுதிகளான நாலடியார், நான்மணிகடிகை, இன்னா நாற்பது மற்றும் பக்தி இலக்கியங்களான திருப்பாவை, , இரட்சணிய யாத்திரகம், கம்ப இராமாயணம் மற்றும் சீறாபுராணம் பக்தி இலக்கியங்களில் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் .

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தமிழில் வெல்ல செய்யுள் மற்றும் உரைநடையோடு , குறிப்புவார்த்தைகள்


தனி இலக்கியங்களான பள்ளு, திருவள்ளுவமாலை, சிற்றிலக்கியங்கள், தூது, பிள்ளைத்தமிழ் ,குறவஞ்சி ஆகிய இலக்கியங்களை பிரிக்க வேண்டும் . எட்டுதொகை நூலகள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சமச்சீர் புத்தகங்களின் வாரியாக பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் இலக்கண குறிப்பு , ஆசிரியர் பெயர்கள் , ஆசிரியர் கூற்று ,சிறப்பு வரிகளை தேர்ந்தெடுத்து தனியாக குறிப்பு எடுத்து வைக்கவும் .

உரை நடை :

உரை நடைப்பாடங்களை வரிவிடாமல் படிக்கவும் திரும்ப திரும்ப படிக்கவும் படித்தவற்றை வார இறுதியில் சொல்லி பார்க்கவும் அல்லது டெஸ்ட் எழுதிப்பார்க்கவும் அதன் அடிப்படையில் உங்கள் ஞாபகத்திறன் அதிகரிக்கும் .
அத்துடன் உரைநடை ஆசிரியர்கள் பெயர் மற்றும் பாடத்தின் முடிவில் உள்ள ஒரு வரி கேள்விக்கு விடையளிக்கவும் . மேலும் கவிதைகள் , கவிஞர்கள் பெயர்கள் அவர்கள் எழுதும் கவிதை எதை சார்ந்தது , கவிஞர்களின் புகழ் , கவிஞர்களின் புகழ்மிக்க வரிகள் , முழக்கங்கள் , அனைத்தும் தனியாக பிரித்து படித்து குறிபெடுத்து சேகரியுங்கள் . நீங்கள் சேகரித்துவற்றை படியுங்கள் தொடர்ந்து படிக்கவும் அப்பொழுது மறக்காது . அத்துடன் கீ என்ற குறிப்பு வார்த்தைகள் முக்கியம் புதுகவிதையின் முன்னோடி பாரதியார் , கத்தியின்றி இரத்தமின்றி முழக்கம் என்றால் அது நாமக்கல் கவிஞர் என்ற சிறப்பு வரிகளில் நினைவில் வைத்து சொல்லிப் பாருங்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தமிழில் வெல்ல செய்யுள் மற்றும் உரைநடையோடு , குறிப்புவார்த்தைகள்

 

தகவல்களைத்தரும் சிறுகதைகள் மற்றும் உரைநடைகளை குறிப்பெடுங்கள். கவிஞர்கள் பிறந்த தினம் மற்றும் புள்ளிவிவரங்களை சரியாக பிரித்து குறிப்புகளால் நினைவுப்படுத்துங்கள். கலை, ஒவியக் கலை, பேச்சுக்கலை சங்கிலி இணைப்புகள் கொடுத்து படிக்கவும். பெண் ஆட்சியாளர்கள் , புரட்சியாளர்கள் , அவர்கள் பெயரில் அமைந்த இடங்களை நன்கு நினைவு படுத்தவும். இவ்வளவுதான் தமிழ் இது ஒரு பெரிய மலையா , தாய்மொழி அறிந்த தகவல்களை ஒருங்கிணைத்து மீண்டும் படிக்க போகிறிர்கள் அவ்வளவுதான் . இனி தமிழில் நூற்றுக்கு நூறு சுலபம்தான் , ஆனால் அதையும் மீறி என்ன குழப்பம் வரும் அதனை எப்படி கலைய வேண்டும் என அடுத்த பதிவில் கூறுகிறேன்.

சார்ந்த தகவல்கள் :

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொழிபாடத்தில் இலக்கணத்தை வென்று நூறு மதிப்பெண் பெறுவது அறிவோம்

 

 

English summary
here article tell about to over cross tamil part in tnpsc exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia