எங்கு படிக்கலாம்? ஹாஸ்பிட்டாலிடி அட்மினிஸ்டிரேஷன்!

மருத்துவமனையில் வேலை செய்யணும் ஆனால் இந்த ரத்தம், ஊசி இதையெல்லாம் பாக்கவே கூடாது. அப்படி ஏதாவது வேலை இருக்கா என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்கான துறைதான் ஹாஸ்பிடாலிடி அட்மினிஸ்டிரேஷன்.

By Kani

மருத்துவமனையில் வேலை செய்யணும் ஆனால் இந்த ரத்தம், ஊசி, மயக்கம் இதையெல்லாம் பாக்கவே கூடாது. அப்படி ஏதாவது வேலை இருக்கா என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்கான துறைதான் ஹாஸ்பிட்டாலிடி அட்மினிஸ்டிரேஷன்.

ஆமாங்க சிலருக்கு சேவை செய்யவேண்டும் என்ற மனப்பான்மை இருக்கும். ஆனால் ரத்தம் போன்றவைகளை பார்த்தால் கொஞ்சம் பயமாக இருக்கும் இவர்களை போன்றோர்கள் இந்த வகையான படிப்பை தேர்ந்தேடுத்து படிக்கலாம்.

எங்கு படிக்கலாம்? ஹாஸ்பிட்டாலிடி அட்மினிஸ்டிரேஷன்!

இதில் பணியாற்றுவதின் மூலம் சேவையோடு கூடவே பணமும் சம்பாதிக்கலாம்.

எங்கு பணியாற்றலாம்?

ஹோட்டல்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விமான நிறுவனங்கள் உட்பட பல்வேறு இடங்களில் பணியாற்றலாம்.

இதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் காத்திருக்கின்றன. பல முண்ணனி நிறுவனங்கள் மருத்துவம் சார்ந்த அட்மினிஸ்டிரேஷன் பணிகளுக்கு தற்போது ஆட்களை போட்டிபோட்டு தேர்வு செய்வதில் மும்மரம்காட்டி வருகின்றன.

பயிற்சி மற்றும் பணி அனுபவம் இதற்கான முக்கியத் தகுதியாக பார்க்கப்படுகிறது.

இக்னோ என்றழைக்கப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் இன்டர்நேஷனல் ஹாஸ்பிட்டாலிடி அட்மினிஸ்டிரேஷன் என்னும் தரமான படிப்பை வழங்குகிறது. பி.ஏ. படிப்பான இந்தப் பட்டப்படிப்பு 3 ஆண்டு படிப்பாகும்.

இது தொடர்பான படிப்புகள் வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

மேஹர் யுனிவர்சிட்டி (மீனாட்சி அகாடமி ஆஃப் ஹெயர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச்), மதுரை

திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை

தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி

அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை

சென்னை அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், தியகராயநகர்

எம்பீ இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (EMPEE IHMCT), சென்னை

நேசமணி நினைவு கிரிஸ்டியன் கல்லூரி, கன்னியாகுமரி

ஏப்டேக் ஏவியேஷன் மற்றும் ஹாஸ்பிடாலிடி அகாடமி, மதுரை.

ஜெனிஸ் அகாடமி ஆப் டூரிஸம் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட், திருச்சிராப்பள்ளி

ஆசான் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி , ஜலதாம்பெட்

எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி, கோயம்புத்தூர்

ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (SIHMCT) திருச்சிராப்பள்ளி.

பாரத் இன்ஸ்டிடியூட் ஆப் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட், தஞ்சாவூர்

கேனன் ஸ்கூல் ஆப் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட், சென்னை

சம்பளம்:

இந்த வகையான படிப்புகளில் மாஸ்டர் ஆப் பிஸ்னெஸ் அட்மினிஸ்டிரேஷன் மற்றும் ஹாஸ்பிட்டாலிடி டிகிரிகளை முடிக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.4,50000 முதல் ரூ.1,54,000 வரை பெற முடியும். மும்பை, மகராஷ்டிரா போன்ற இடங்களில் ரூ.806500 வரை பெறலாம். இந்தப்படிப்பில் இளநிலை படிப்பை முடித்தால் குறைந்த பட்சம் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் தமிழகத்திலே பணிபுரிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.

சமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?- உங்களுக்கான படிப்பு இதுதான்!சமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?- உங்களுக்கான படிப்பு இதுதான்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hospitality Administration Careers: Salary Info, Job Options & Requirements
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X