ஹேப்பி பர்த்டே கூகுள்!! அறிவின் ஆண்டவருக்கு இன்று 21-வது பிறந்த நாள்!

நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக வலம் வரும் ஒன்று கூகுள் என்றால் மிகையாகாது. குறிப்பாக இந்த கூகுள் என்னும் சொல்லை அறியாதோர் யாவரும் இருக்க முடியாது.

 
ஹேப்பி பர்த்டே கூகுள்!! அறிவின் ஆண்டவருக்கு இன்று 21-வது பிறந்த நாள்!

அறிவின் ஆண்டவராகவே வலம் வரும் கூகுள் இன்று தனது 21-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. நம் சந்தேகங்களை அனைத்தையும் தீர்த்து வைக்கும் கூகுள் குறித்த சில பிரமிக்கவைக்கும் அம்சங்களை இங்கே பார்க்கலாம் வாங்க.

கூகுளின் பெற்றோர்

கூகுளின் பெற்றோர்

ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் தான் கூகுளின் பெற்றோர்கள். 1998-இல் கூகுள் என்ற தேடுபொறியை அறிமுகம் செய்த போது இந்த அளவு வளர்ச்சியடையும் என நிச்சயம் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

தேடுதலின் குவியல்

தேடுதலின் குவியல்

லேரி பேஜூம், செர்ஜி பிரின்னும் இணையதளத்தில் குவிந்திருக்கும் தகவல்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் உருவாக்கியது தான் கூகுள். இதற்கான முயற்சியை 1996-ஆம் ஆண்டிலேயே அவர்கள் தொடங்கினர். அவ்வாறு உருவாக்கிய தளத்திற்கு அவர்கள் வைத்த முதல் பெயர் BACKRUB-ஆம், BACKRUB என்ற பெயர் தான் பின்னாளில் கூகுள் என்றானது.

நூறு வெறும் பூஜ்யம் தான்
 

நூறு வெறும் பூஜ்யம் தான்

எண் 1-ஐத் தொடர்ந்து 100 பூஜ்யங்கள் வந்தால் அதற்கு பெயர் GOOGOL. இதனை அடிப்படையாகக் கொண்டு தான் கூகுள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1998-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் கூகுள் இணையதளம் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டிற்கு வந்தது.

கூகுளின் புரோகிராமர் யார்?

கூகுளின் புரோகிராமர் யார்?

கூகுள் ஒரு ஆராய்ச்சி திட்டமாக 1996ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது என ஏற்கனவே நாம் பார்த்தோம், அதனை தோற்றுவித்தவர்கள் லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின். ஆனால், அவர்களுடன் இருந்து கூகுளை முழுமையான தேடுதளமாக புரோகிராம் செய்தவர் ஸ்காட் ஹசன். இந்த ஆராய்ச்சி திட்டத்திற்கான உன்மையான முன்னணி புரோகிராமராக ஸ்காட்தான் செயல்பட்டுள்ளார்.

ஸ்காட் பெயருக்கு இடமில்லை

ஸ்காட் பெயருக்கு இடமில்லை

என்னது? கூகுளை உருவாக்கியவரின் பெயருக்கே இடமில்லையா? அட ஆமாங்க, கூகுள் ஒரு நிறுவனமாக 1998இல் தொடங்குவதற்கு முன்னதாகவே ஸ்காட் அந்த திட்டத்திலிருந்து வெளியேறி விட்டார். ரோபாட்டிக்ஸ் துறையில் தொழில் தொடர விரும்பிய ஸ்காட் 2006ல் ஸ்காட் வில்லோ கேரேஜ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதனால்தான் கூகுள் நிறுவர்கள் பெயர்களில் ஸ்காட் பெயர் இடம்பெறவில்லை.

கூகுளின் முதல் பணியாளர்

கூகுளின் முதல் பணியாளர்

கூகுள் டொமைன் பெயர் 1997ம் ஆண்டு செப்டம்பர் 15ல் பதிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து 1998-ஆம் ஆண்டு நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் லேரி பேஜ், செர்ஜ் பிரின் இருவரும் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நண்பரின் இருப்பிடத்தில் கூகுளின் பணிகளைத் தொடங்கினர். அப்போது, ஸ்டான்போர்டில் படித்த சக பிஎச்.டி மாணவரான கிரேக் சில்வர்ஸ்டனை அவர்கள் தங்கள் முதல் பணியாளராக நியமித்தனர்.

இரண்டாம் உலகம் கூகுள்

இரண்டாம் உலகம் கூகுள்

இன்று, உலகம் முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் கூகுள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிரில்லியன் கணக்கான தேடல் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் கூகுள் கனவுகளுக்கும் அப்பாற்பட்டு உலகில் அனைத்தையும் அறிந்து வைத்துள்ள அறிவின் ஆண்டவராக உருவெடுத்துள்ளது.

ஹேப்பி பர்த்டே கூகுள்

ஹேப்பி பர்த்டே கூகுள்

கூகுள் இன்று தனது அதிகாரப்பூர்வமான 21-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது. அதனை அறிவிக்கும் விதமாக கூகுள் ஒரு டூடுலையும் வெளியிட்டுள்ளது. அந்த டூடுல் படத்தில், 90'ஸ் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான கணினி, அதில் கூகுள் என்ற தேடுதளம் இருப்பதைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பிடத்தக்க வேண்டிய விசயம், "98 9 27" என்று அந்த படத்தின் வலது மூலையில் எழுதப்பட்டுள்ளது தான். அந்த எண் இது பயன்பாட்டிற்கு வந்த நாளாகும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Google Birthday: Lord of Knowledge Google Celebrating 21st Birthday Today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X