தற்போதைய காலக்கட்டத்தில் பள்ளி இறுதியாண்டு படித்த மாணவர்கள் அதிகம் படிக்க விரும்புவது இன்ஜினீயரிங் மற்றும் மருத்துவப் படிப்புகள் தான். இதற்கு அடுத்தபடியாக கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் மீடியா போன்ற படிப்புகளை அதிகம் படிக்க விரும்புகிறார்கள். தாய்நாட்டில் இன்ஜினீயரிங் படிக்க எவ்வளவு விருப்பம் காட்டுகிறார்களோ அதைப் போலவே வெளிநாடுகளில் குறைந்த கட்டணத்தில் இன்ஜினீயரிங் படிக்கவும் மாணவ, மாணவிகள் விருப்பம் காட்டி வருகின்றனர்.
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் 70% பேர் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளில் சேர விரும்புகின்றனர். சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி, அதிக சம்பளம், கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு வீட்டிலிருந்தபடியே வேலை செய்வது உள்ளிட்ட வசதிகளால் பெற்றோர்களும், மாணவர்களும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிய விரும்புகின்றனர். இந்தப் படிப்புகளுக்கு பி.இ. எனப்படும் பட்டப்படிப்பு முக்கியம். தற்போது பி.இ. பட்டப்படிப்பிலும் ஏஐ பிரிவுகள் வந்துவிட்டன.
அதே நேரத்தில் உள்நாட்டை விட வெளிநாடுகளுக்கு சென்று பொறியியல் படிப்பு படிக்க அதிக மாணவர்கள் விரும்புகின்றனர்.

புதுமையான தீர்வுகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்க, உலகெங்கிலும் உள்ள நாடுகள் எதிர்கால பொறியாளர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் கல்வி அளிக்க விரும்புகின்றன. இன்ஜினீயரிங் படிப்பு என்பது இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகவும் விரும்பப்படும் திட்டங்களில் ஒன்றாக உள்ளது என்பதை வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் அறிந்துள்ளன.
நமது நாட்டில் உள்ள ஒரு மதிப்புமிக்க உயர்கல்வி நிறுவனத்தில் சேருவது எவ்வளவு கடினம் என்பதை கருத்தில் கொண்டு, பல மாணவர்கள் தங்கள் பொறியியல் படிப்புகளை படிக்க வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களைத் தேடுகிறார்கள்.
இன்ஜினீயரிங் படிப்புகளைப் படிக்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா பிரிட்டன் நாடுகளை இந்திய மாணவர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர். அதேபோல் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மனி நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களையும் அவர்கள் தேர்வு செய்கின்றனர்.
குறைந்த கட்டணத்தில் இன்ஜினீயரிங் படிப்புகளைப் படிக்க இந்திய மாணவர்கள் தேர்வு செய்யும் 5 நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அதற்கடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், சிங்கப்பூர், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.
1. அமெரிக்கா
பொறியியல் பட்டப்படிப்புகளை மாணவர்கள் படிக்க அமெரிக்காவை விரும்பத்தக்க இடமாக மாற்றுவது எது? என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளனர். அமெரிக்கா அதன் செழிப்பான இந்திய சமூகம், பல உயர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அமைத்துள்ளது மற்றும் ஆங்கிலத்தை முதன்மை பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதால் இந்தியர்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது. இதனால் அங்கு சென்று பயில மாணவர்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். உலகளவில் உள்ள 500 க்கும் மேற்பட்ட பொறியியல் பல்கலைக்கழகங்களில் 70-க்கும் மேற்பட்டவை அமெரிக்காவில் அமைந்துள்ளன.
மேலும், தொழில்நுட்ப கல்விக்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா ஏற்கனவே கருதப்படுகிறது. உறுதியான வேலைவாய்ப்பு, நல்ல உயர்கல்வி போன்றவற்றால் இந்திய மாணவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அமெரிக்காவில், 2011ல் உயர்கல்வியில் ஏறத்தாழ 1,03,260 இந்திய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 8,697 மாணவர்கள் சேர்ந்திருந்தனர். அமெரிக்காவில் உயர்நிலை எம்என்சி நிறுவனத்தில் பொறியாளரான சௌரி ரஞ்சன் சம்பத், அங்கு பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பிறகு, வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார்.
மேலும் அமெரிக்காவை தனது நிரந்தர வசிப்பிடமாக மாற்றுவது கடினம் அல்ல என்றும் கூறுகிறார். வளாகத்தில் பல இந்திய மாணவர்களும் ஆசிரியர்களும் இருப்பது இந்திய மாணவர்களுக்கு நன்மை பயக்கும். உயர்கல்வி பயிலும் பல்கலைக்கழக வளாகத்தில் பல இந்திய மாணவர்களும் ஆசிரியர்களும் இருப்பது இந்திய மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என்று தெரியவந்துள்ளது. பல கல்லூரிகளில் ஓரளவுக்குக் குறைந்த கட்டணத்தில் கல்வி கிடைப்பதால் இந்திய மாணவர்கள் அங்கு செல்ல விரும்புகின்றனர்.
இன்ஜினியரிங் படிப்பதற்கான சிறந்த நாடுகளில் ஒன்று அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்காவில், இளங்கலை பொறியியல் திட்டங்கள் நான்கு ஆண்டுகள் கொண்ட படிப்புகளாக உள்ளன. நீங்கள் இளங்கலை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், பெரும்பாலான பொறியியல் பல்கலைக்கழகங்கள் எஸ்ஏடி (SAT) தேர்வு மதிப்பெண்ணைக் கேட்கின்றன. பொறியியல், கணிதம் அல்லது அறிவியலில் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றிருப்பதுடன், பட்டதாரி பொறியியல் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜிஆர்இ (GRE) மதிப்பெண்ணையும் பெற்றிருக்க வேண்டும். சர்வதேச மாணவர்களுக்கும் டோபெல் (TOEFL) தேர்வு தேவைப்படுகிறது.
பல்கலைக்கழகங்களுக்கிடையில் பாடத் தேவைகள் மற்றும் தரநிலைகளில் நிலைத்தன்மைக்காக, அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான இளங்கலை பொறியியல் திட்டங்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அங்கீகார வாரியத்தால் (ABET) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில், பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் தங்களது தனிப்பட்ட சேர்க்கை நடைமுறைகளைக் கையாளுகின்றன. வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு சேர்க்கை (அட்மிஷன்) தேவைகள் இருப்பதால், நீங்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

2. ஆஸ்திரேலியா
இன்ஜினியரிங் படிப்பு பயில மாணவ, மாணவிகளுக்கு நன்கு பிடித்த மற்றொரு நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. அனுபவமிக்க கற்றல் முறையின் காரணமாக, ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் தனித்து நிற்கின்றன. ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்கள் உயர்தர ஆராய்ச்சியை மேற்கொண்டு மாணவர்களைக் கவர்ந்து இழுக்கின்றன, மேலும் அவர்களின் பட்டங்கள் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு இந்தியர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
உயர்கல்விக்காக அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் இங்கு வருகிறார்கள். மனப்பாடம் செய்வதற்கும் மேலாக அனுபவக் கற்றலுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சிறந்த கல்வி முறையை ஆஸ்திரேலியா கொண்டுள்ளதால் உயர்கல்வியில் அந்த நாடு புகழ் பெற்று விளங்குகிறது. அவர்களின் பட்டங்கள் பொருத்தமானவை மற்றும் அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
அங்கு பொறியியல் இளங்கலைப் படிப்பில் சேர, ஆஸ்திரேலியாவின் மூத்த இடைநிலைக் கல்விச் சான்றிதழுக்கு சமமான 12-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழை நீங்கள் வைத்திருக்க வேண்டும். ஏறக்குறைய அனைத்து கல்வி நிறுவனங்களும் (IELTS) மதிப்பெண்ணைக் கோருகின்றன, இது விண்ணப்ப காலக்கெடுவுக்கு 24 மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருக்கக் கூடாது, மேலும் அது சமீபத்தில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் குறைந்தபட்ச IELTS தேர்வு மதிப்பெண் 6 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வு மதிப்பெண் 60% மதிப்பெண்களை பெற்று இருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் பொதுவாக வருடத்துக்கு இரண்டு முறை பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களில் சேர்க்கை நிகழ்கிறது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கணிதத்தைத் தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். இந்திய மாணவர்கள் உதவித்தொகை பெறவும் இங்குள்ள பல்கலைக்கழகங்கள் உதவுகின்றன.
3. பிரிட்டன்
வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான தொடக்கப் புள்ளியாக பிரிட்டன் நாடு உள்ளது, ஏனெனில் இது உலகின் பழமையான கல்வி நிறுவனங்களில் சிலவற்றின் தாயகமாக அமைந்து உ லகப் புகழ் பெற்றுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகங்கள் பொறியியல் பட்டப்படிப்புகளைப் படிக்கும் போது பட்டதாரிகளை தரமான தொழிற்துறை இன்ஜினியர்களாக மாற்றுகின்றன.
பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 1000-த்துக்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன, மேலும் ஒரு பாடத்தை எவ்வாறு படிக்கலாம் என்பதில் நிறைய நெகிழ்வுத்தன்மையும் இங்கு உள்ளது. இளங்கலை அறிவியல் (BSc), இளங்கலை அறிவியல் பொறியியல் (BSc.Eng), இளங்கலை பொறியியல் (B.Eng), அல்லது இளங்கலை தொழில்நுட்பப்படிப்பு (B.Tech) ஆகியவற்றை 4 அல்லது 5 ஆண்டுகளில் பிரிட்டனில் பெறலாம்.
கெமிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு சிறப்புப் படிப்புகளும் இங்கு உள்ளன. இது இங்கிலாந்து பல்கலைக்கழகங்களை பொறியியல் கல்விக்கு மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. இங்கிலாந்தில் பொறியியல் இளங்கலைப் படிப்புகளில் பெரும்பாலானவை, முதுநிலைப் படிப்புகள் மிகவும் மதிப்புமிக்கவையாக அமைந்துள்ளன. இந்த அனைத்து காரணங்களுக்காகவும் அணுகல் கடினமாக இருக்கலாம் என்பதால், சேர்க்கை எப்போதும் குறிப்பிட்ட அளவிலேயே இருக்கும்.

4. சிங்கப்பூர்
குறைந்த செலவில் பொறியியல் படிக்கும் வசதி படைத்த நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாக உள்ளது. இந்திய மாணவர்கள் இந்த நாட்டுக்கும் அதிக அளவில் சென்று உயர்கல்வியைப் பெறுகின்றனர். சிங்கப்பூரின் பொறியியல் படிப்புகள் உயர்தர வசதிகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டுள்ளன. குறைந்த கல்விச் செலவு மற்றும் ஏராளமான வேலை வாய்ப்புகள் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கு சிங்கப்பூர் ஒரு பிரபலமான இடமாக அமைந்து உள்ளது.
சிங்கப்பூரில் படிக்க விரும்பும் இந்தியர்களுக்கு, இந்தியா அதன் அருகில் இருப்பது ஒரு பெரிய நன்மையாக அமைந்துள்ளது. வெளிநாட்டு பொறியியல் கல்வியைத் தேடும் இந்திய மாணவர்களுக்கு, புகழ்பெற்ற கல்லூரிகள், உலகளாவிய வெளிப்பாடு மற்றும் நிர்வகிக்கக்கூடிய வாழ்க்கைச் செலவுகள் ஆகியவற்றின் காரணமாக இந்த இடம் ஒப்பீட்டளவில் மலிவாக உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு பெரிய அளவிலான உதவித்தொகையை வழங்கும் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும், எந்த மேற்கத்திய நாட்டுடனும் ஒப்பிடுகையில், சிங்கப்பூரில் படிப்பில் சேரும் செயல்முறை எளிதானது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்கள் மூன்று பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS), நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU) மற்றும் சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் (SMU) ஆகியவற்றில் பொறியியல் படிப்பை மாணவர்கள் தொடர முடியும்.
5. ஜெர்மனி
வெளிநாடு சென்று பொறியியல் பயிலும் இந்திய மாணவர்கள் செல்லும் அடுத்த நாடாக ஜெர்மனி அமைந்துள்ளது.
ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஜெர்மனி உலக அளவில் முன்னிலையில் உள்ளது. 300 க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் காரணமாக, நாடு உலகின் சிறந்த பொறியாளர்களை உருவாக்கி உலகுக்குத் தந்துள்ளது. பெரும்பான்மையான ஜெர்மனி கல்வி நிறுவனங்கள் அரசு நிதியுதவியைப் பெறுவதால், சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த மற்றும் மிகவும் குறைந்த கட்டணத்தில் படிப்புகளை ஜெர்மனி வழங்குகிறது.
பெரும்பான்மையான கல்வித் திட்டங்கள் ஜெர்மனியில் ஆங்கிலத்தில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன, எனவே ஜெர்மன் மொழியில் புலமை தேவையில்லை. நீங்கள் மொழியைப் படிக்க விரும்பினால், பல்கலைக்கழகத்தின் இலவச ஜெர்மன் மொழி வகுப்புகளில் சேரலாம். ஜெர்மனி அதன் தொழில்துறை மற்றும் கார் உற்பத்தித் தொழில்களுக்கு பிரபலமானது. கூடுதலாக, வெளிநாட்டில் பொறியியல் படிக்க இது மிகவும் பிரபலமான இடமாக அமைந்துள்ளது.
வெளிநாடுகளில் பொறியியல் படிப்பு படிக்க தகுதி, தேவை என்ன....
வெளிநாட்டில் பொறியியல் படிக்க மாணவர்கள் சில தகுதிகளை அடைய வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான நிபந்தனைகள், விதிகள் உண்டு. அதேநேரத்தில், வெவ்வேறு பல்கலைக்கழகங்களுக்கு இந்த விதிகள் மாறுபடும்:
* கணிதம், கால்குலஸ் மற்றும் திசையன்கள், வேதியியல், ஆங்கிலம் மற்றும் இயற்பியல் (பல்கலைக்கழகத்துக்கு மாறுபடும்) ஆகியவற்றுடன் 12 ஆம் வகுப்பு தேர்வுகள்.
* SAT அல்லது ACT மதிப்பெண்கள், பல்கலைக்கழகத்தைப் பொறுத்து வேறுபடலாம்.
* GMAT அல்லது GRE மதிப்பெண்கள், பல்கலைக்கழகத்தைப் பொறுத்து மாறுபடலாம்.
* ஆங்கில மொழித் திறன் சோதனைகளுக்காக IELTS, TOEFL, PTE, or Duolingo தேர்வு மதிப்பெண்கள்.


Click it and Unblock the Notifications












