பிசினஸ் மேனேஜ்மெண்ட் எனப்படும் வணிக மேலாண்மை துறை என்பது நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறையாக மாறியுள்ளது. இந்தப் படிப்பைப் படிக்க ஏராளமான மாணவர்கள் விரும்புகின்றனர். இதனால் இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு மாணவ, மாணவிகளிடையே அதிக போட்டி நிலவுகிறது. இந்நிலையில்தான் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை துறையில் பிஎச்.டி படிப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு வணிகத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை நிர்வகிக்கும் செயல்முறை வணிக மேலாண்மை என்று அழைக்கப்படுகிறது. இந்த செயல்பாடுகளில் செயல்திறனை மேம்படுத்த மற்றும் வணிக இலக்குகளை அடைய ஒரு நிறுவனத்தின் வளங்களை திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல் மற்றும் இயக்குதல் ஆகியவை அடங்கும். வணிக மேலாண்மை என்பது பல்வேறு வணிகத் துறைகள் மற்றும் செயல்பாடுகளின் நிர்வாகத்தை உள்ளடக்கிய ஒரு சொல்லாக உள்ளது.
இதில் நிதி, மனித வளங்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் நிர்வாகம் ஆகியவை அடங்கும். இது தவிர, திறம்பட வணிக மேலாண்மைக்கு மாறிவரும் வணிகப் போக்குகள் மற்றும் தொழில் தேவைகளுக்கு ஏற்பவும் நாம் மாறிக்கொள்ளவேண்டும்.
வாடிக்கையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் வலுவான உறவுகளை வளர்ப்பது மற்றும் நேர்மறையான பணியிட கலாச்சாரத்தை மேம்படுத்துவது ஆகியவையும் இந்த வணிக மேலாண்மையில் அடங்கும். சுருக்கமாக, வணிக மேலாண்மை என்பது வணிக வளர்ச்சி மற்றும் வருவாயை மேம்படுத்த வணிக நடவடிக்கைகளை புரிந்துகொள்வது மற்றும் நிர்வகிப்பது ஆகும்.

வணிக மேலாண்மை என்றால் என்ன என்பதை இப்போது நாம் புரிந்துகொண்டுள்ளோம். இந்த வணிக மேலாண்மை உத்திகள் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த வணிக மேலாண்மையின் முக்கிய அம்சங்கள்
1. நிதி செயல்திறனை மேம்படுத்துகிறது: செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வருவாயை அதிகரிக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் நிதிக் கொள்கைகளைத் திட்டமிடவும் செயல்படுத்தவும் பயனுள்ள மேலாண்மை நிறுவனத்துக்கு உதவுகிறது.
2. அதிகரித்த உற்பத்தித்திறன்: பயனுள்ள வணிக நிர்வாகத்தில், அனைத்து வணிக செயல்முறைகளும் நெறிப்படுத்தப்பட்டு வெளிப்படையானதாக ஆக்கப்படுகின்றன; இது ஒரு நேர்மறையான பணிச்சூழலை உருவாக்குகிறது. மேலும் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது
3. மேம்பட்ட வாடிக்கையாளர் திருப்தி: வணிக நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்கவும் வாடிக்கையாளர் தக்கவைப்பு விகிதத்தை மேம்படுத்தவும் கொள்கைகளை உருவாக்குகிறது. மேலும் செயல்முறைகளை வடிவமைத்து செயல்படுத்துகிறது.
4. அதிகரித்த பணியாளர் ஈடுபாடு: வணிக நிர்வாகம் பணியிடத் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதிலும், கூட்டுச் சூழலை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதால், நிறுவனங்கள் திறமையைத் தக்கவைக்க உதவுகிறது.
5. சிறந்த இடர் மேலாண்மை : திறமையான வணிக மேலாண்மை சாத்தியமான அபாயங்களைக் கண்டறிந்து குறைக்கும் செயல்முறைகளை செயல்படுத்த உதவுகிறது.
இந்த அதிமுக்கியம் வாய்ந்த வணிக மேலாண்மை படிப்புத்தான் தற்போது நாடு முழுவதும் போற்றப்படுகிறது.
இந்த படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலமும், அருமையான வேலைவாய்ப்பும் கிடைப்பது உத்தரவாதம் செய்யப்படுகிறது.
தற்போது இந்த வணிக மேலாண்மையில் பிஎச்.டி படிப்புகளை வழங்க கல்கத்தா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
அண்மையில் மேற்கு வங்கத்திலுள்ள கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வணிக மேலாண்மை துறை பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.

பிஎச்.டி., படிப்புக்கான கால அளவு:
இந்த பிஎச்.டி. படிப்பானது 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கும் என கல்கத்தா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கடந்த 1976-ம் ஆண்டில் வணிக மேலாண்மை துறை நிறுவப்பட்டது.
2013-ம் ஆண்டு வரை முதுகலை வணிக மேலாண்மை (MBM) பட்டம் என்று வழங்கப்பட்டு வந்தது. பின்னர் இது முதுகலை வணிக நிர்வாகமாக (MBA) மாற்றப்பட்டது.
இங்கு மொத்தம் எம்பிஏ பிரிவில் 33 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர்.
மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் மேலாண்மை, நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, செயல்பாட்டு மேலாண்மை மற்றும் அமைப்புகளின் பகுப்பாய்வு, மனித வளம் மற்றும் நிறுவன மேலாண்மை முதுகலை என பல்வேறு பாடத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
பிஎச்.டி., படிப்புக்கான கல்விதகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை நிறைவு செய்தவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
பிஎச்.டி., படிப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:
www.caluniv.ac.in அல்லது www.bmcaluniv.org இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
பிஎச்.டி., படிப்புக்கான சேர்க்கை முறை:
இந்த பிஎச்.டி., படிப்புக்கு நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியான மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பிஎச்.டி., படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் படிப்புக்கு வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பிஎச்.டி., படிப்புக்கான நுழைவுத்தேர்வு நாள்:
இந்தப் படிப்புக்காந நுழைவுத்தேர்வு வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறவுள்ளது.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு www.caluniv.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம். மேலும் www.bmcaluniv.org என்ற இணையதளத்திலும் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












