ரஷ்யா, ஜார்ஜியாவில் குறைந்த கல்விக் கட்டணத்தில் எம்பிபிஎஸ் படிக்க விருப்பமா...!

ரஷ்யா, ஜார்ஜியா போன்ற நாடுகளில் மிகவும் குறைந்த கல்விக் கட்டணத்தில் எம்பிபிஎஸ் பயில வாய்ப்புகள் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் அதுதான் உண்மை. குறைந்த கல்விக் கட்டணத்தில் மிகச் சிறந்த உயர்தரமான எம்பிபிஎஸ் படிப்பை இங்கு பயில முடிகிறது என்பதால் ஏராளமான இந்திய மாணவர்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர்.

நமது நாட்டில் தற்போது மருத்துவர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உள்ளன. அதிக ஊதியம் ஈட்டும் தொழிலாகவும், உயிரைக் காப்பாற்றும் தொழிலாகவும் இது பார்க்கப்படுவதால் டாக்டர் படிப்புகளுக்கும், அது சார்ந்த தொழிலுக்கும் அதிக தேவை இருக்கிறது.

இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஹோமியோபதி, யோகா, ஆயுர்வேத, யுனானி பிரிவில் மருத்துவப் படிப்புகள் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகிறது. அதேபோல வெளிநாடுகளுக்குச் சென்று எம்பிபிஎஸ் படிக்க வேண்டுமானாலும் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டியது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யா, ஜார்ஜியாவில் குறைந்த கல்விக் கட்டணத்தில் எம்பிபிஎஸ் படிக்க விருப்பமா...!

அப்படி வெளிநாடு சென்று மருத்துவப் படிப்புகளைப் படிக்க நல்ல நாடுகள், நல்ல பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்வது அவசியமாகும். முக்கியமாக மருத்துவப் படிப்புகளைப் படிக்க பொருத்தமான பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுப்பது மாணவர்களுக்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.

செலவு குறைவாகவும், அதே நேரத்தில் சிறந்த மருத்துவப் பல்கலைக்கழகமாகவும் இருக்கவேண்டும் என்று முக்கியம். குறைந்தக் கல்விக் கட்டணத்தில் மருத்துவப் படிப்புகள் வழங்கும் கல்லூரி, பல்கலைக்கழகத்தைப் பார்த்து மாணவர்கள் தேர்வு செய்வது அவசியமாகும்.
சரியான பல்கலைக்கழகத்தை மாணவர்கள் தேர்வு செய்வதற்காக பல்வேறு காரணிகள் உள்ளன ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிப்பு

எம்பிபிஎஸ் படிப்பு படிப்பதற்கு மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ரஷ்யாவாகும்.
ரஷ்யாவில் எம்பிபிஎஸ் (MBBS) கல்வி பயில்வது மிகச் சிறப்பான தேர்வாகும். எம்பிபிஎஸ் கல்விப் பயிற்சி அடிப்படையில் உலகின் மிகவும் புகழ்பெற்ற நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் ரஷ்யாவில் வழங்கப்படும் மருத்துவக் கல்வி உலகம் முழுவதும் புகழ்பெற்றது. குறிப்பாக மருத்துவ பட்டங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக ரஷ்யாக உள்ளது.

இங்குள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பெற்ற பட்டம் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதனால், எம்பிபிஎஸ் பட்டதாரிகளுக்கு அவர்களின் வேலை வாய்ப்புகள் மற்றும் மேலும் தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகளை உலகம் முழுவதும் திறக்கிறது.

உயர்கல்வி, படிப்புகளை வழங்குவதற்கு ரஷ்யாவில் ஏராளமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதே நேரத்தில் ரஷ்யாவில் மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, ரஷ்யாவானது எம்பிபிஎஸ்(MBBS) கல்விக்கான சரியான இடமாகக் கருதப்படுகிறது. மேலும் மாணவர்கள் பெரும்பாலும் ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிப்புக்கு மிகச் சரியான இடம் என்ற நேர்மறையான கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பி உள்ளனர். அது உண்மையும் கூட. இதுவே எம்பிபிஎஸ் (MBBS) படிப்புக்கு ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களை மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுப்பதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள சில மிகச் சிறந்த மற்றும் குறைவான மருத்துவக் கல்வி கட்டணம் கொண்ட மருத்துவ பல்கலைக்கழகங்களை இங்கு காணலாம்.

1. நார்த்தன் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி (Northern State Medical University): ரஷ்யாவில் உள்ள நார்த்தன் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டியானது 1932-ல் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் ரஷ்யாவின் மிகவும் கட்டணம் குறைந்த மற்றும் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக போற்றப்பட்டு வருகிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், கிட்டத்தட்ட 1,000 பணியாளர்கள் உள்ளனர். இது உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் தேசிய மருத்துவக் கவுன்சில் (NMC) ஆகிய 2 அமைப்புகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு பயிலும் மாணவர்களுக்கு முதுகலை படிப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

ரஷ்யாவில் உள்ள நார்த்தன் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் ஆண்டுக் கல்விக் கட்டணமாக அமெரிக்க டாலர் 6 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால்தான் இந்தப் பல்கலைக்கழகமானது ரஷ்யாவின் மிகவும் கட்டணம் குறைந்த மற்றும் சிறந்த மருத்துவப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்த அருமையான பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் சிறந்த மருத்துவ நிபுணர்களை உருவாக்கித் தருகிறது. மாணவர்கள் அனைத்து சான்றிதழ்கள், நீட் உள்ளிட்டவற்றில் தகுதி பெற்று, ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறலாம்.

ரஷ்யா, ஜார்ஜியாவில் குறைந்த கல்விக் கட்டணத்தில் எம்பிபிஎஸ் படிக்க விருப்பமா...!

2. பாஷ்கிர் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி:

பாஷ்கிர் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி என்று அழைக்கப்படும் பாஷ்கிர் ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகம், 1932-ல் நிறுவப்பட்டதாகும். இது ரஷ்யாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்ந்து மருத்துவ நிபுணர்களை ஆண்டுதோறும் உருவாக்கித் தருகிறது.

இது பாஷ்கார்தோஸ்தானில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாஷ்கிர் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டியானது, ரஷ்ய கூட்டமைப்பின் மத்திய மருத்துவ அறிவியல் மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகமானது, அதன் மாணவர்களுக்கு, குறிப்பாக வெளிநாட்டிலிருந்து மருத்துவம் பயில வரும் மாணவர்களுக்கு பல வசதிகளை வழங்குகிறது.

பாஷ்கிர் ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகமானது, விரிவான திட்டங்களை வழங்கும் உயர் தகுதி வாய்ந்த நிபுணர்கள், டாக்டர்கள், வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டுள்ளது. இது உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் தேசிய மருத்துவக் கவுன்சில் (NMC) ஆகிய 2 அமைப்புகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாஷ்கிர் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் (MBBS) பட்டப்படிப்பு பயில்வதற்கான ஆண்டுக் கல்விக் கட்டணம் சுமார் 3500 அமெரிக்க டாலர்களை கட்டணமாக பெறுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் ஆண்டுக் கல்விக் கட்டணம் செலுத்தவேண்டும்.

3. கிரிமியா ஃபெடரல் பல்கலைக்கழகம்:

ரஷ்யாவிலுள்ள கிரிமியா ஃபெடரல் பல்கலைக்கழகம் மிகவும் பெற்றதாகும். இந்த கிரிமியா ஃபெடரல் பல்கலைக்கழகமானது ரஷ்யாவின் சிம்ஃபெரோபோலில் மிகவும் அழகுறவும், அனைத்து வசதிகளையும் பெற்று அமைந்துள்ளது. ரஷ்யாவிலுள்ள மிகச் சிறந்த 10 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்த பல்கலைக்கழகமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கிரிமியா ஃபெடரல் பல்கலைக்கழகமானது, உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்காக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகமானது 6 ஆண்டுகள் பயிலக்கூடிய வகையிலான எம்பிபிஎஸ்(MBBS) படிப்புகளை வழங்குகிறது.

சர்வதேச மாணவர்களுக்கான ஆங்கில வழி எம்பிபிஎஸ் படிப்பை வழங்குவதில் இந்த கிரிமியா ஃபெடரல் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகம் கவனம் செலுத்துகிறது. இதனால் அதிக அளவு வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து பயில்கின்றனர். கிரிமியா ஃபெடரல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ்(MBBS) படிப்புக்கான ஆண்டு கல்விக் கட்டணம் 3 ஆயிரம் அமெரிக்க டாலர்களாகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.5 லட்சமாகும்.

மேலும், கிரிமியா ஃபெடரல் பல்கலைக்கழகம் சர்வதேச மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பான விடுதி வசதிகளையும், உணவையும் வழங்குகிறது. தங்குமிடம், குறைந்த கல்விக் கட்டணம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த கல்வித் திட்டங்கள் ஆகியவற்ரை கிரிமியா ஃபெடரல் பல்கலைக்கழகம் வழங்குவதால் அதிக அளவில் மாணவர்கள் இங்கு பயில்கின்றனர்.

கிரிமியா ஃபெடரல் பல்கலைக்கழகம் மிகக் குறைந்த கல்விக் கட்டணம் மற்றும் சிறந்த மருத்துவ பல்கலைக்கழகமாக விளங்குவதால் இந்த பல்கலைக்கழகத்தை மாணவர்கள் தேர்வு செய்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

ஜார்ஜியா நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பு (MBBS):

ரஷ்யாவைத் தவிர, குறைந்த கல்விக் கட்டணத்தில் சிறந்த மருத்துவக் கல்விக்காகப் புகழ்பெற்ற நாடுகளில் ஜார்ஜியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜியாவிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வியை வழங்குகின்றன. மேலும் இங்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வி வழங்கப்படுவதால் உலகின் பல்வேறு நாடுகள் ஜார்ஜியா பல்கலைக்கழகங்கள் வழங்கும் எம்பிபிஎஸ் பட்டப்படிப்புகளை பரவலாக அங்கீகரித்துள்ளன.

மேலும், இங்குள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்களும் சர்வதேச தரத்தில் மருத்துவக் கல்வியை போதிக்கின்றனர்.

ஜார்ஜியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் ஆலோசகர்கள் மூலம் மாணவர்களை அழைத்து வருகின்றனர். ஜார்ஜியாவில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு பயில நீட் தேர்வு (NEET) மதிப்பெண் அவசியமாகும்.

கட்டணம் குறைவாக உள்ள ஜார்ஜியாவின் மருத்துவப் பல்கலைக்கழகங்கள்
மிகவும் குறைந்த கல்விக் கட்டணத்தில் எம்பிபிஎஸ் படிப்பு படிக்க விரும்புபவர்களின் தேர்வாக ஜார்ஜியாவிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இங்குள்ள ஜியோமெடி ஸ்டேட் யுனிவர்சிட்டியில் எம்பிபிஎஸ் சேர்க்கை பெற்று மாணவர்கள் குறைந்த கல்விக் கட்டணத்தில் பயிலலாம். ஏனெனில் இது ஜார்ஜியாவில் உள்ள மலிவான மருத்துவ பல்கலைக்கழகமாகும். இங்கு ஆண்டு கல்விக் கட்டணமாக சுமார் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.4.8 லட்சம்) கட்டணத்தில் இங்கு பயில முடியும்.

ஜார்ஜியாவில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உலகின் முதல் 100 சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் உள்ளன.

ஜார்ஜியாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் ரஷ்யாவில் உள்ளதை விட மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

ஜார்ஜியாவில் உள்ள மிகச் சிறந்த 2 பல்கலைக்கழங்களின் விவரங்களை கீழே காணலாம்:

ரஷ்யா, ஜார்ஜியாவில் குறைந்த கல்விக் கட்டணத்தில் எம்பிபிஎஸ் படிக்க விருப்பமா...!

1. திபிலிசி ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி (SEU):

ஜார்ஜியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றான திபிலிசி ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜார்ஜியாவின் தலைநகரில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம் சர்வதேச தரத்தில் கல்வித் திட்டங்களை வழங்குகிறது. இது உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் தேசிய மருத்துவக் கவுன்சில் (NMC) ஆகிய 2 அமைப்புகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

6 ஆண்டு பயிலும் வகையில் எம்பிபிஎஸ் படிப்புகளை வழங்குகிறது.
திபிலிசி ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டியானது மிகவும் குறைந்த கல்விக் கட்டணத்தில் எம்பிபிஎஸ் படிப்பை வழங்குகிறது. அதாவது ஆண்டுக்கு சுமார் 8 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6.5 லட்சம்) கட்டணத்தில் எம்பிபிஎஸ் படிக்கலாம்.

2. ஜார்ஜியன் நேஷனல் யுனிவர்சிட்டி (SEU):

ஜார்ஜியன் நேஷனல் யுனிவர்சிட்டியானது ஜார்ஜியாவில் 2001-ம் ஆண்டு நிறுவப்பட்டது. மிகவும் குறைந்த கல்வி கட்டணத்தில் மிகச் சிறந்த எம்பிபிஎஸ் படிப்புகளை இந்த பல்கலைக்கழகம் போதிக்கிறது.

இங்கு கல்வியின் சிறந்த தரம் உறுதி செய்யப்படுகிறது. அனைத்து அத்தியாவசிய அங்கீகாரங்களுடனும், ஜார்ஜியாவின் சிறந்த 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இந்த பல்கலைக்கழகம் கருதப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு சுமார் 5000 அமெரிக்க டாலர்கள் கட்டணத்தில் (இந்திய மதிப்பில் ரூ.4 லட்சம்) எம்பிபிஎஸ் படிக்கலாம்.

இது உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் தேசிய மருத்துவக் கவுன்சில் (NMC) ஆகிய 2 அமைப்புகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு 6 வருடம் எம்பிபிஎஸ் படிக்கவேண்டும்.
ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக ஜார்ஜியாவில் இந்திய மாணவர்கள் அதிகம் பேர் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர். ஜார்ஜியாவில் எம்பிபிஎஸ் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் கணிசமான பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Russia is one of the most renowned countries in the World in terms of education, and the education granted in Russia is of great importance across the globe, especially medical degrees. It is because the degree obtained from the Universities here Is recognized all over the World that opens the door to graduates for their job prospects and further careers. Apart from Russia, some other destinations are renowned for the best medical education with a lower tuition fee, and Georgia is one of them. Georgian Universities are recognized widely for providing world-class and affordable medical education.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+