நியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா?

உணவை திட்டமிடுபவர் தான் டயட்டீசியன். எந்த உணவில் எந்த வகையான சத்து அடங்கியுள்ளது. உணவை எப்படி சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்வது என்பது குறித்த படிப்பதுதான் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.

By Kani

உணவை திட்டமிடுபவர் தான் டயட்டீசியன். எந்த உணவில் எந்த வகையான சத்து அடங்கியுள்ளது. உணவுகளை எப்படி சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்வது என்பது குறித்த படிப்பதுதான் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.

"நொறுங்கத் தின்றால் நூறு வயது"

என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள் இதன் காரணம் தெரியுமா? வாயில் உணவை நன்றாக மென்று சாப்பிடும்போது உணவு முழுக்க உமிழ் நீர் கலக்கிறது. உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும். ஆனால் இன்றைய அவசரகால கட்டத்தில் நிற்பதற்கே நேரம் இல்லை. இதில் எங்கே மென்று சாப்பிடுவது.

நியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா?

இதை இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று சொல்ல வீட்டில் பெரியவர்களும் கிடையாது. எல்லாம் தனிக்குடும்பாக வாழ ஆரம்பித்தாகிவிட்டது. இந்த குறைகளை களைய வந்த படிப்புதான் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.

தற்போது அதிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளுள் இதுவும் ஒன்று. இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துவதோடு, எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொண்டால் நீண்ட நாள் வாழமுடியும் என்று ஆலோசனை வழங்குவதும் இந்த படிப்பை முடித்தவர்கள்தான்.

இந்தத் துறையில் படிக்க நல்ல ஆர்வமிருந்தால் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தைப் பெற முடியும்.

படிப்புகள்:

இந்த வகையான படிப்புகள் சான்றிதழ், டிப்ளமோ, டிகிரி என பல்வேறு வகையில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

டிப்ளமோ படிப்புகள்:

  • டிப்ளமோ இன் நியூட்ரிஷியன் அண்ட் ஹெல்த் எஜிகேஷன்.
  • டிப்ளமோ இன் டயட்டிக்ஸ்.
  • டிப்ளமோ இன் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.
  • டிப்ளமோ இன் புட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷியன்.
  • டிப்ளமோ இன் டயட்டிக்ஸ் அண்ட் கிளினிக்கல் நியூட்ரிஷியன்
  • டிப்ளமோ இன் நியூட்ரிஷியன் அண்ட் புட் டெக்னாலஜி.

இந்த வகையான படிப்புகள் 6 மாதம் முதல் 3 வருடம் வரை பயிற்றுவிக்கப்படுகிறது நிறுவனத்தை பொறுத்து கால அளவு மாறுபடும். டிப்ளமோ இன் டயட்டிக்ஸ், ஹெல்த் அண்ட் நியூட்ரிஷியன் போன்ற படிப்புகளில் எடை பராமரிப்பு, உணவு பராமரிப்பு போன்றவைகளை தெரிந்து கொள்ள முடியும்.

பட்டப்படிப்பு:

  • பி.எஸ்சி கிளினிக்கல் நியூட்ரிஷியன்.
  • பி.எஸ்சி நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.
  • பி.எஸ்சி புட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷியன்.
  • பி.எஸ்சி அப்ளைடு நியூட்ரிஷியன்.
  • பி.எஸ்சி டயட்டீட்டிக்ஸ்.
  • பி.எஸ்சி ஹோம் சயின்ஸ்.

முதுநிலைப் பட்டப்படிப்பு:

  • கிளினிக்கல் நியூட்ரிஷியன்.
  • பிடீயட்ரிக் நியூட்ரிஷியன்.
  • பப்ளிக் ஹெல்த் நியூட்ரிஷியன்.
  • புட் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி.
  • ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன்,டயட்டீட்டிக்ஸ்
  • ஜெரண்டாலஜிக்கல் நியூட்ரிஷியன்
  • ரெனால் நியூட்ரிஷியன்.

படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்களில் சில:

மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூட்ரிசன், ஐதராபாத்

பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, சென்னை.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை.

எஸ்.என்.டீ.டி., பெண்கள் பல்கலைக்கழகம், மும்பை.

வேலைவாய்ப்பு எப்படி?

  • அரசு மருத்துவமனைகள்
  • சமூக சுகாதார மையங்கள் (ஐசிடிஎஸ், என்.எச்.ஆர்.எம் )
  • அரசு மருத்துவ இல்லங்கள்
  • அரசு நியூட்ரிஷியன் கல்வி நிறுவனங்கள்
  • தனியார் மருத்துவமனைகள்.
  • கார்ப்பரேட் ஹோம்.
  • உடற்பயிற்சி நிலையங்கள்.
  • உணவு ஆய்வகங்கள்.
  • சுற்றுலா நிறுவனங்கள்.
  • தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.
  • உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள்.

ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் நியூட்ரிஷியன் படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன. நவீன மருத்துவமனைகளிலும் நியூட்ரிஷியன் படிப்பை முடித்தவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.

சம்பளம்: ஆரம்பகட்டத்தில் ரூ. 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். அனுபவங்களை பொறுத்து இதன் மடங்கு அதிகரிக்கும். அரசு வேலையை பொறுத்தமட்டில் அரசு ஊதிய விகிதங்களை பொறுத்து சம்பளம் அமையும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Dietician: Scope and Career opportunities
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+