வறுமை ஒழிப்பு திட்டங்களும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும்

By Sobana

1951 முதல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அதிகம் முக்கியத்துவம் கொடுத்துச்சு அதனை நாம் அறிய வேண்டியது அவசியம் ஆகும். இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்கள் கல்வி, மருத்துவம், குடும்ப நலதிட்டங்கள், முதலான வறுமை ஒழிப்பு திட்டங்கள் மூலம் மக்கள் வாழ்வையும் நாட்டின் வளர்சி திட்டங்களையும் கொண்டு வந்து கண்காணித்து நாட்டு மக்களின் நலவாழ்வுக்கு வழிவகுக்கின்றது.

கிராம இளைஞர்கள் சுயவேலை வாய்ப்பு பெற பயிற்சி

வறுமை ஒழிப்பு  திட்டங்கள்:
 

வறுமை ஒழிப்பு திட்டங்கள்:

குறைந்த பட்ச வேலை திட்டம்.

வேலைக்கு உணவு திட்டம்.

தேசிய கிராம வேலை வாய்ப்பு திட்டங்கள் அத்துடன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வறுமை ஒழிப்பு திட்டங்களான 20 அம்ச திட்டமும் முக்கிய இடம்பெற்றன.

திட்டங்களின் தொகுப்பு:

திட்டங்களின் தொகுப்பு:

கிராம இளைஞர்கள் சுயவேலை வாய்ப்பு பெற பயிற்சி1979

ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் அக்டோபர் 1980

வேலைக்கு உணவு திட்டம் 1977- 1978

ஊரக நிலமில்லா தொழிலாளர் வேலை வாய்ப்பு திட்டம் 1983

ஊரக மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் 1982

நேரு வேலை வாய்ப்பு திட்டம் 1989 போன்ற திட்டங்கள் அரசினால் அறிவிக்கப்பட்டவையாகும்.

சுய வேலை  வாய்ப்பு திட்டங்கள் :

சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் :

1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த சுயவேலை வாய்ப்பு திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஒருங்கிணைந்த கிராம வளர்சி திட்டம் , கிராம பகுதி மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு திட்டம். சுய வேலை வாய்ப்பு பெற கிராம இளைஞர்களுக்கு பயிற்சி திட்டம். கிராமத் தொழிலுக்கு மேம்படுத்தப்பட்ட கருவிகள் வழங்கும் திட்டம். கங்கா கல்யாண் திட்டம், மில்லியன் கிணறு திட்டம். ஆகியவற்றின் ஒருங்கிணைந்த புத்தாக்க திட்டம் ஆகும் .

ஒருங்கிணைக்கப்பட்ட ஊரக வளர்ச்சி திட்டம்:
 

ஒருங்கிணைக்கப்பட்ட ஊரக வளர்ச்சி திட்டம்:

ஒருங்கிணைப்பட்ட வளர்ச்சி திட்டமானது ஒரு சோதனை திட்டமாக 1979 இல் தொகுக்கப்பட்டது. 6வது ஐந்தாண்டு திட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்டமானது அக்டோபர் 2, 1990 முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்த பட்டது.

இந்தியாவில் வறுமை கோட்டை அளக்க உணவு உட்கொள்ளும் அளவின்படி கணக்கிடப்பட்டது. 2100 கலோரிகள் நகரப்புரத்தார் உட்கொள்ளும் அளவு

உணவு 2400 கலோரிகள் கிராமப்புரத்தினர் உட் கொள்வார்கள்.

உழவர்களின் வறுமை கோட்டை குறிக்கும் நிள அளவு 5 ஏக்கர்கள் ஆகும். அந்தியோதயா திட்டம் ஏழைகளுக்கு உதவும்பொழுது ஏழைகளின் ஏழைக்கே முதலில் உதவும் திட்டம் ஆகும்.

வேலைக்கு கூலி திட்டம் :

வேலைக்கு கூலி திட்டம் :

வேலைக்கு கூலித் திட்டமானது ஒருங்கிணைக்கப்பட்டு மிகபெரிய வேலைக்கு கூலித்திட்டமாக 1989இல் உருமாறின. 1999 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஊரகப் பகுதிகளை மேம்படுத்துதல் அங்கு உள்கட்டமைப்பு வளர்ச்சியை உறுதி செய்தல் இதன் நோக்கம் ஆகும். ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி பொறுப்பை ஊராட்சி மன்றங்களிடம் அரசு ஒப்படைத்தது .

வேலை வாய்ப்பு உறுதி திட்டம் :

வேலை வாய்ப்பு உறுதி திட்டம் :

இது 1993இல் அக்டோபர் 2 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. நாட்டிலுள்ள வறட்சி பாதிக்ககூடிய பழங்குடியினர் வாழக்குடிய பாலைவனப் மணற் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அவைகள் வளர்ச்சி பெற்றவையாக்குவதே முதல் கவனப்பணியாக கொண்டிருந்தது.

1999 முதல் கூலிக்கு வேலை அளிக்கும் ஒரே திட்டமாக புதுப்பிக்கப் பெற்று ஏறக்குறைய நிலையான ஒதுக்கீட்டுடன் கூலிக்கு வேலை அளிக்கும் ஒரே திட்டமாகப் 5448 தொகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கூலிக்கு வேலை திட்டத்தின் கீழ் வருமான ஆதரங்களை உண்டாக்கி தருதல் மேலும் கிராம எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப சமூக பண்பாடு பொருளாதார உடைமைகளை ஏற்படுத்தி வழங்குதல். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாவட்ட அவைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான செலவை மத்திய மாநில அரசுகள் 75:25 என்ற விகிதத்தில் ஏற்று வருகின்றது.

ஜவஹர் ரோஜ்கார்  யோஜ்னா

ஜவஹர் ரோஜ்கார் யோஜ்னா

தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் கிராமப்புற நிலமற்றோர் வேலை உறுதி திட்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு ஜவகர் ரோஜ்கார் யோஜ்னா திட்டமாக 1989 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படுத்தப்பட்டது.

ஜவஹர் ரோஜ்கார் யோஜ்னாவின் விளக்கம் வேலைக்கு உணவு திட்டம். ஜவஹர் ரோஜ்கார் யோஜனாவின் நோக்கம் நிலமற்ற குடுபங்களில் ஒருவருக்கு நிரந்திர வேலை வாய்ப்பு வழங்குவது ஆகும்.

ஜவஹர் ரோஜ்கார் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வேலைக்கு உணவு திட்டத்தின் கீழ் 30 % ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய சமூக உதவித் திட்டம் :

தேசிய சமூக உதவித் திட்டம் :

1995 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் நடத்தப்பட்டு வருகின்றது இது முற்றிலும் அரசால் நடத்தப்பட்டு வருகின்றது . மாநில அரசுகளால் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் சமூக நல உதவிகள் அல்லது எதிர்கால சமூக நல உதவிகள் வழங்குதல் இத்திட்டத்தின் சிறப்பு நோக்கமாகும்.

  கேள்விகளின் தொகுப்பு:

கேள்விகளின் தொகுப்பு:

நாட்டின் முக்கிய வறுமை ஒழிப்பு திட்டங்கள் நாம் அறிய வேண்டியது அவசியமாகும் இதனை நன்றாக படியுங்கள் இதனை 10 மதிபெண்களுக்கான விடையாக யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளில் பயன்படுத்தலாம்.

1 வேலை வாய்ப்பு உறுதி திட்டம் எப்பொழுது உருவாக்கப்பட்டது ?

2 ஜவஹர் ரோஜ்கார் திட்டத்தின் நோக்கம் யாது?

3 வேலைக்கு கூலித்திட்டமானது? ஒருங்கிணைக்கப்பட்டு மிக்பெரிய திட்டமாக மாறியது?

4 உழவர்களின் வறுமைக் கோட்டை குறிக்கும் நில அளவு எத்தனை?

5 தேசிய சமூக உதவித்திட்டம் என்றால் என்ன?

6 உண்ணும் காலோரிகள் வைத்து எதனை கணக்கிடப்படுகின்றது?

சார்ந்த பதிவுகள்:

ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு திட்டமும் மக்கள் அடையும் நலனும்

வங்கி சீர்த்திருத்தம் மற்றும் இந்திய வங்கிகள் குறிந்து தெரிஞ்சுக்குவோம்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Article tells about Plans For Poverty eradication
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more