பெட்ரோலியம் இன்ஜி., படித்தால்... வெளிநாட்டில் வேலை...

பொறியியல் படிப்பில் ஏகப்பட்ட துறைகள் உள்ளன. எதைத் தேர்வு செய்வது? எந்தப் படிப்புக்கு எதிர்காலம் உண்டு? எனத் தெரியாமல் தவிக்கிறீர்களா? இதோ வேலை வாய்ப்பு மிக்க பெட்ரோலியம் சார்ந்த படிப்புகள் விபரம்...

By Kani

இன்ஜினீரிங் படிப்பில் ஏகப்பட்ட துறைகள் உள்ளன. எதைத் தேர்வு செய்வது? எந்தப் படிப்புக்கு எதிர்காலம் உண்டு? எனத் தெரியாமல் தவிக்கிறீர்களா? இதோ வேலை வாய்ப்பு மிக்க பெட்ரோலியம் இன்ஜினீரிங் சார்ந்த படிப்புகள் விபரம்...

நவீன யுகத்தில் பெட்ரோலியம் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், இதைச் சார்ந்த பொருட்களுக்கான தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

பெட்ரோலியம் இன்ஜி., படித்தால்... வெளிநாட்டில் வேலை...

பெட்ரோலியம் என்பது புவியின் அடியில் கிடைக்கும் இயற்கை வளங்களில் ஒன்றாகும். உங்களுக்கே தெரியும், இன்றைய பெட்ரோல் விலை நிலவரம். இதுபோல்தான் இந்த துறைசார்ந்த படிப்புகளும். வேலை வாய்ப்பும். விலையேற்றத்திற்கு மட்டுமல்ல, ஊதியத்திற்கு பஞ்சமில்லாத துறை என்றால் மிகையாகாது.

இந்த வகையான படிப்புகளை பெட்ரோலிய வளங்களை கண்டறிவது, சுத்திகரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் படிக்க முடியும். இத்துறை சார்ந்த படிப்புக்குச் செலவு சற்று அதிகம் என்றாலும், வேலையில் பெறக்கூடிய ஊதியமும் இதைபோலவே சற்று அதிகம்தான்...

கல்வி நிறுவனங்கள்:

குவாண்டம் குளோபஸ் கேம்பஸ், ரூர்க்கி
மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - புனே.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி), மும்பை.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை.
இந்தியன் ஸ்கூல் அப் மைன்ஸ், தன்பாத் - ஜார்கண்ட்.
பெட்ரோலியம் மற்றும் எனர்ஜி படிப்புகள் பல்கலைக்கழகம் - (UPES), டெஹ்ராடூன்.
பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகம் - காந்திநகர்.
திப்ருகார் பல்கலைக்கழகம். அசாம்.
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்,
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.
ராஜிவ்காந்தி இன்ஜினீரிங் கல்லூரி,சென்னை

படிப்புகள்:

இத்துறையை பொறுத்தமட்டில் பட்டப்படிப்பு, டிப்ளமோ என்று பல்வேறு வகையில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இளநிலை படிப்பில் பி.இ,பி.டெக்., பெட்ரோலியம் இன்ஜினீரிங் பிரிவில் சேர்வதற்கு பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் முடித்திருக்க வேண்டும். ஜே.இ.இ போன்ற குறிப்பிட்ட நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

  • பி.இ. பெட்ரோலியம் இன்ஜினீரிங்.
  • அப்ளைடு பெட்ரோலியம் இன்ஜினீரிங்.
  • பெட்ரோ கெமிக்கல் இன்ஜினீரிங்.
  • பெட்ரோலியம் ரிபைனிங் மற்றும் பெட்ரோ கெமிக்கல் இன்ஜினீரிங்.
  • பெட்ரோலியம் ரிசர்வாயர் மற்றும் புரொட்க்‌ஷன் இன்ஜினீரிங்.

வேலை வாய்ப்பு:

வேலைவாய்ப்புகளை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் துறைகளில் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள், சுத்திகரிப்பு ஆலைகளில் தொழிலாளர் முதல் இன்ஜினியர் வரை பல்வேறு பதவிகள் உள்ளன.

நிறுவனங்கள்:

  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட் (ONGC)
  • இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL)
  • பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்)
  • இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)
  • சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL)
  • கெயில்
  • இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் (HOEC)
  • எஸார் ஆயில்

பணி வகைகள்:

  • பெட்ரோலியம் ஜியாலஜிஸ்ட்.
  • புரொடக்‌ஷன் எஞ்சினியர்.
  • டிரில்லிங் எஞ்சினியர்.
  • ஆப்சோர்ஸ் பெட்ரோலியம் எஞ்சினியர்

சம்பளம்:

தொடக்கத்தில் ஆண்டிற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை ஊதியமாக பெறலாம். எண்ணெய் வளமிக்க வெளிநாடுகளில் இத்துறைக்கான வாய்ப்புகளும், வரவேற்பும் சற்று அதிகம்.

அப்பளை பண்ணியாச்சா?

மத்திய அமைச்சகத்தின் கீழ், விசாகப்பட்டினத்தில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி (ஐஐபிஇ) கல்வி நிறுவனத்தில் பி.டெக் (பெட்ரோலியம் இன்ஜி., கெமிக்கல் இன்ஜி) மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜே.இ.இ., தேர்வு எழுதியிருக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 16

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Career In Petroleum Engineering
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+