மாணவர்கள், பெற்றார்கள் மத்தியில் மருத்துவம் மீதான மோகம் இன்று வரை குறைந்தபாடில்லை. மருத்துவத்துறையை பொருத்தமட்டில் ஜெனரல் மெடிசின் மட்டுமே பலர் அறிந்திருப்போம். இதைத்தவிற பல்வேறு வகையான படிப்புகள் மாணவர்களுக்காக காத்திருக்கின்றன.

அந்த வகையில் "டெர்மடாலஜி " எனும் தோல் மற்றும் அழகை மேம்படுத்தும் சிறப்பு மருத்துவ படிப்பு குறித்து பார்க்கலாம்.
ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் மட்டுமே ஒலித்து வந்த "டெர்மடலாஜி" எனும் வார்த்தை தற்போது தமிழகத்திலும் பரவலாக பேசப்பட்டுவருகிறது. உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்குவது, வறண்ட சருமத்தை போக்குவது என பலவகைகள் இந்தப்படிப்பில் கற்றுத்தரப்படுகின்றன.
வயதான தோற்றத்திலிருந்து இளமையான தோற்றத்திற்கு மாற்றச்செய்யும் ஒரு அதிநவீன மருத்துவமுறைதான் இந்த "டெர்மடலாஜி".
உதாரணத்திற்கு நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை "போடக்ஸ்" எனும் ஊசியின் மூலம் விரைவில் சரி செய்து சுருக்கங்கள் அற்ற பொலிவான முக அழகை பெறலாம்.
படிப்பு: 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம், பட்டப்படிப்பு முதல் டிப்ளமோ வரை பயிற்றுவிக்கப்படுகின்றன. எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு இதில் முதுநிலைப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
- டெர்மட்டாலஜி டிப்ளமோ - 2 ஆண்டுகள்
- பேச்லர் ஆப் சயின்ஸ் இன் டெர்மட்டாலஜி - 3 ஆண்டுகள்
- போஸ்ட் கிராஜிவேட் டிப்ளமோ இன் டெர்மட்டாலஜி, வென்னீராலஜி & லெப்ரோஸி - 2 ஆண்டுகள்
- மாஸ்டர் ஆப் சயின்ஸ் இன் டெர்மட்டாலஜி, வென்னீராலஜி மற்றும் லேப்ராலஜி - 2 ஆண்டுகள்
- டாக்டர் ஆப் மெடிசின் இன் டெர்மட்டாலஜி & வென்னீராலஜி - 3 ஆண்டுகள்
- டாக்டர் ஆப் பிலாஷாபி இன் டெர்மட்டாலஜி மற்றும் வென்னீராலஜி - 3 ஆண்டுகள்
- நுழைவுத்தேர்வு: இந்த படிப்புகளை படிக்க எய்ம்ஸ், நீட், ஜிப்மர் போன்ற நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
கல்வி நிறுவனங்கள்:
கிரிஸ்டியன் மெடிக்கல் காலேஜ், வேலூர்
ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம், சென்னை
சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை, சென்னை
ஸ்டான்லி மெடிக்கல் கல்லூரி, சென்னை
கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி - [CMC], கோயம்புத்தூர்
பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் & ரிசர்ச், கோயம்புத்தூர்
அரசு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம்
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் காத்தான்குளத்தூர் கேம்பஸ் - [எஸ்ஆர்எம்], காஞ்சிபுரம்.
அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
விநாயகா மிஷன் யுனிவர்சிட்டி - [விஎம்யு], சேலம்
முகாம்பிகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கன்னியாகுமரி
வேலை வாய்ப்பு:
இந்த வகையான படிப்பை முடிப்பதின் மூலம் அரசு மருத்துவமனைகள் முதல் திரைத்துறை வரை பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆரம்பகட்டத்தில் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை திறமைக்கேற்ப சம்பளத்தை நமக்கு நாமே நிர்ணயம் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications












