ஹைதெராபாத்தில் மத்திய பல்கலைக்கழகமாக இயங்கி வரும் இஎப்எல் இந்திய மொழிகள் மட்டுமல்லாது பல்வேறு வகையான வெளிநாட்டு மொழிகளையும் பயிற்றுவித்து வருகிறது. தெற்காசியாவில் மொழியியல் படிப்புக்கான ஒரே பல்கலைக்கழகம் இஎப்எல் மட்டுமே.
ஹைதெராபாத்தில் 1958 ஆம் ஆண்டு சென்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் இங்கிலிஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் 1972 ஆம் ஆண்டு சென்ரல் இன்ஸ்டியுட் ஆப் இங்கிலிஸ் அண்ட் பாரின் லாங்வேஜ் என பெயர் மாற்றப்பட்டது.

தற்போது தி இங்கிலிஸ் அண்ட் பாரின் லாங்வேஜ் யுனிவர்சிட்டி என்ற பெயரில் மத்திய பல்கலைகழகமாக செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் நிகர்நிலைப் பல்கலைகழகமாக தொடங்கப்பட்ட இஎப்எல் 2006 ஆம் மத்திய பல்கலைகழகமாக தரம் உயர்த்தப்பட்டது.
ஆசிரியர்களுக்கு சிறந்த ஆங்கில பயிற்சி அளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் தற்போது உள்நாட்டில் ஆங்கிலக் கல்வி தொடர்பான பாடத்திட்டங்களை வடிவமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இங்கு ஆங்கிலம் தவிர ஜெர்மன், ரஷ்யன் மற்றும் பிரெஞ்சு மொழிகளும் கற்றுத்தரப்படுகின்றன. இதன் உறுப்பு கல்லூரிகள் ஷில்லாங், லக்னோ ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த பல்கலைகழகத்தில் அரபு, சீனம், ஜெர்மன், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் இளங்கலை, முதுகலை படிப்புகள் உள்ளன. மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
இங்கு பயிலும் மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வசதியாக உலகின் முக்கிய பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பல்கலையில் மொழியியல் சார்ந்த படிப்புகளை டிப்ளமோ மற்றும் தொலைதூர கல்வியாக பயில முடியும். 12 ஆம் வகுப்பில் என்ன பாடப்பிரிவை தேர்தேடுத்தாலும் இங்கு பிஏ ஹனர்ஸ் என்னும் இளங்களைப் படிப்பை தேர்ந்தேடுத்து படிக்கலாம்.
இங்கு நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது. பிஏ ஆங்கிலம் படிப்பதற்கான நுழைவுத்தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற உலக மொழிகளுக்கான நுழைவுத்தேர்வில், கதை, கட்டுரை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய கேள்விகள் கேட்கப்படும்.
தொற்காசியாவில் மொழியியல் கல்விக்கான ஒரே பல்கலைக்கழகமாக இருப்பதால் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவுவது வழக்கம். முன்னதாக சரியான தயாரிப்புகளை மேற்கொள்ளும் பட்சத்தில் எளிதாக இங்கு சேர்ந்து பயில முடியும்.
இப்பல்கலைக்கழகம் குறித்த மேலும் விவரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












