தற்போதைய காலக் கட்டத்தில் பெற்றோர், மாணவர்கள் மத்தியில் மருத்துவம், பொறியியல் மட்டுமே வேலைவாய்ப்புள்ள துறை என்ற கண்ணோட்டம் கொஞ்சம், கொஞ்சமாக மாறத் தொடங்கியுள்ளது.
இதைத் தவிர்த்தும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதையும் சிந்திக்க தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் இந்தியாவின் தற்போதைய கேம்ஸ் இன்டஸ்ட்ரியின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாயில் 2,000 ஆயிரம் கோடி. இது வரும் காலங்களில் அதிகரிப்பதோடு, இந்திய வியாபார சந்தையின் முக்கிய துறைகளில் ஒன்றாக வாய்ப்புள்ளதாக துறை சார்ந்து வல்லூநர்கள் தெரிக்கின்றனர்.
வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முதல் வரிசையில் இருப்பதோடு, திரைப்படங்கள், மொபைல் விளையாட்டுகள் மட்டுமின்றி மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பங்கள் கூட 3 டி மயமாகி வருகின்றன.
மொபைலில் விளையாடிய காலம் போய், பல்வேறு தரப்பு மாணவர்களும் இத்துறை சார்ந்த படிப்புகளின் மீது ஆர்வம் செலுத்த தொடங்கி வருகின்றனர். அனிமேஷன் துறையில் சாதிக்க வேண்டுமாயின் நல்ல படைப்பாற்றல் திறனும், அன்றாட விஷயங்களை கூட புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் திறன் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
இதோடு டிஜிட்டல் டூல்ஸான மாயா, மேக்ஸ், போட்டோஷாப், இசட் பிரஸ், சப்ஸ்டான்ஸ் டிசைனர் உள்ளிட்ட சாப்ட்வேர்களை கையாளாக் கூடிய திறமை பெற்றிருக்க வேண்டும்.
இதை படித்தால் எப்படி வேலைவாய்ப்பு சாத்தியம் என்ற கேள்வி எழுகிறதா? பதில் இதோ தற்போது அதிகமாக இளைஞர் பட்டாளம் இருக்கும் நாடு இந்தியாதான், எனவே இந்த வகையான படிப்புகளை சரியான முறையில் முடித்த பின் வேலைதேடி அலைய வேண்டிய தேவை இல்லை. எனவே துணிந்து படிக்கலாம்.
இந்த வகையான படிப்புகள் ஒரு மாத காலத்தில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை, டிகிரி, டிப்ளமோ, சான்றிதழ் போன்ற பல்வேறு வகையில் வழங்கப்படுகிறது.
பணி என்ன?
இந்த துறையில் கேம் ஆர்டிஸ்ட், கேம் டெவலப்பர், கேம் டிகோடர், கேம் டெஸ்டர், ஆடியோ இன்ஜினீயர், 3டி மாடலர், கான்செப்ட் ஆர்டிஸ்ட், கேம் புரோகிராமர், சாப்ட்வேர் டெவலப்பர் உள்ளிட்ட பல்வேறு வகையான வேலைகள் உள்ளன.
அடிப்படை பகுதிகள் & தகுதிகள் என்ன?
கேம் டெவலப்மென்ட் ( லாஜிக் & ரீசனிங்)
கேம் டிசைன் (ஆர்ட் & விஷ்வலைசேஷைன்)
கேம் ஆர்ட் ( ஓவியம், கலர் கான்செப்ட், காட்சிபடுத்தும் திறன்)
கேம் டெஸ்டிங் (லாஜிக் & எபோர்ட்)
வேலை வாய்ப்பு:
படிப்பை முடிக்கும் பட்சத்தில் சாப்ட்வேர், வீடியோ கேம்ஸ் ஏஜென்சி, விளம்பர நிறுவனம், திரைப்பட துறை போன்ற பல்வேறு இடங்களில் பணியாற்ற முடியும்.
படிப்பை வழங்கும் இந்தியாவின் பிரபலமான கல்வி நிறுவனங்கள்:
தேசிய வடிவமைப்பு நிறுவனம் (NID ), அகமதாபாத்.
எம்ஏஇஇஆர்'ஸ் எம்ஐடி இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், புனே.
இந்தியன் ஸ்கூல் ஆப் டிசைன் & இனோவேஷன், மும்பை.
ஹால்டியா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (HIM), ஹால்டியா.
ஆசிய இன்ஸ்டிடியூட் ஆப் கேம் & அனிமேஷன் (AIGM), பெங்களூரு.
தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிஜிட்டல் ஆர்ட் & அனிமேஷன் (ஐஐடிஏஏ), கொல்கத்தா.
கிரியேட்டிவ் மெண்டர்ஸ் அனிமேஷன் கல்லூரி (CMAC), ஹைதராபாத்.
செமேடு ஸ்கூல் ஆஃப் ப்ர-எக்ஸ்பிரஷியனிசம் (SSPE), புனே
இமேஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மல்டிமீடியா அனிமேஷன் & கிராஃபிக் எஃபெக்ட்ஸ் (IIMAGE ), ஹிமாயத் நகர் ஹைதராபாத்.
பேக் ஸ்டேஜ் பாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் கேமிங் அண்ட் டெக்னாலஜி (BPIGT), ஹைதராபாத்.
டோன்ஸ் அகாடமி, திருவனந்தபுரம்.
சம்பளம்:
இந்தத்துறையில் எந்த வகையான படிப்புகளை தேர்ந்தேடுத்து படித்தாலும், நம்மிடம் என்ன திறமை உள்ளதோ அதைப் பொறுத்துதான் சம்பளம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.5-7 லட்சம் வரை சம்பளமாக பெறமுடியும். இதுவே அனுபவத்தின் அடிப்படையில் மாறுபடும்.


Click it and Unblock the Notifications












