தல அஜித் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு முக்கியக் காரணம் அவர் தனது தொழில் மீது வைத்திருக்கும் விஸ்வாசம் தான். அவர், தனது சினிமாவில் எந்தளவிற்கு நேர்மையாக இருக்கிறாரோ, அதுபோலவே தன்னை நம்பியுள்ள மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் டிரோன் குறித்து ஆய்வு செய்ய தக்ஷா என்னும் குழுவை உருவாக்கினர். அந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக செயல்பட்டு வந்தது அனைவருக்குமே தெரியும். அரசியல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் தனது மாணவர்களுக்கு மேற்கொண்டு உதவ முடியாமல் போய்விடுமோ என்று நம்ம தல கருதியிருக்கலாம். அவர் தனது அறிக்கையிலும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

Medical Express 2018 UAV Challenge
நடிகர் அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் கைதேர்ந்தவர். மேலும் டிரோனை இயக்குவதிலும் சமீபத்தில் கெத்து காட்டினார் நம்ம தல. அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் டிரோன் குறித்து ஆய்வு செய்ய தக்ஷா என்னும் குழுவை உருவாக்கினர். அந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக செயல்பட்டு ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge' போட்டியில் சர்வதேச அளவில் 2-ம் இடம் பிடித்தது.

ஜெர்மனி
இதனிடையே சமீபத்தில் கோவாவில் இருந்து சென்னைக்கு வந்த வேகத்தில் அஜித் ஜெர்மனிக்கு கிளம்பிச் சென்றார். ரசிகர் ஒருவர் அவருடன் சேர்ந்து ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம் வெளியானது. அஜித் எதற்காக ஜெர்மனி சென்றார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது.

தக்ஷா
தக்ஷா குழுவின் அடுத்த திட்டத்திற்காக ஏரோமாடலிங் குறித்து ஆராய்ச்சி செய்யவே அஜித் ஜெர்மனி சென்றிருப்பது தற்போது நிரூபனம் ஆகியுள்ளது. அங்குள்ள வாரியோ ஹெலிகாப்டர் நிறுவன தலைவர் கிறிஸ்டன் ஜோட்னரை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார் அஜித். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

கெத்து தல
தனக்கு பிடித்த விஷயத்தை செய்வதற்காக மெனக்கெடுபவர் தல அஜித் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அவரின் இந்த குணம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. நடிப்பை மட்டும் தொடராமல் புதுவிதமாக அடுத்தடுத்து சாதனை செய்து வரும் அஜித்தை யாருக்குத்தான் பிடிக்காது.

என்ன செய்கிறார் ?
ஜெர்மனியில் வாரியோ என்ற ஹெலிகாப்டர் நிறுவனத்தினருடன் சிறிய குட்டி விமானம் தொடர்பான பல தொழில்நுட்பங்களை அஜித் கற்று வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நீங்க என்ன செய்ய போறீங்க ?
என்ஜினீயரிங் பிரிவுகளில் குறிப்பிடும் அளவிற்கு புகழ்பெற்ற ஒரு துறை ஏரோநாட்டிகல் என்ஜினியரிங். ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ் படிக்க ஆசைப்படுபவர்கள் மிகவும் கவனமாக கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.

படிப்புகள்
இத்துறையில் பி.இ., பி.டெக்., டிப்ளமோ உள்ளிட்ட முறைகளில் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. ஐஐடி.,யில் இந்தப்பிரிவில் பட்டபடிப்பு, பட்டமேற்படிப்பு பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு வகையான தனியார் நிறுவனங்களும் துறை சார்ந்த படிப்புகளை வழங்குகின்றன.

தகுதிகள் என்ன?
இந்தத் துறையை தேர்ந்தேடுத்து படிக்க 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவை கொண்ட பாடப்பிரிவை எடுத்து இதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வு
இதில் சேர ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐஐடி., ஜேஇஇ., நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இதன் மூலமாக ஐஐடி.,களில் உள்ள ஏரோநாட்டிக்கல் பட்டப்படிப்புகளில் சேர முடியும். மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களும், கல்லூரிகளும் இந்த படிப்பை பயிற்று விக்கின்றன. இதில் சேர அந்தந்த நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று, ஏரோநாடிகல் என்ஜினீயரிங் துறையில் படிக்கலாம்.
இந்தியாவில் பெங்களூரு, சென்னை, கோவை, டோராடூன், குர்கான், இந்தூர், கான்பூர், மும்பை, நாக்பூர், டில்லி, பாட்னா, புனே போன்ற பகுதிகளிலும் ஏரோநாடிகல் இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள் உள்ளன.

வேலைவாய்ப்பு
இந்தத் துறையை தேர்ந்தேடுத்து படிப்பவர்களுக்கு மிகப் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது. விமானங்களின் வேகத்தைக் கூட்டுவது, உதாரணமாக, சென்னையிலிருந்து பெங்களூரு செல்ல 2 மணி நேரம் என்றால் அதை 1 மணி நேரமாக குறைப்பது எப்படி போன்ற பல்வேறு விதமான ஆராய்சிகளை மேற்கொள்ள முடியும். இந்தியாவில் ஏரோநாடிகல் என்ஜினீயரிங் முடித்தவர்கள் விமானதுறை சார்ந்த அரசு அலுவலகங்களில் பணிபுரிய முடியும்.

தல போல !
நம்ம தல அஜித் போலவே நீங்களும் புது புது அம்சங்கள் கொண்ட டிரோன்களையும் உருவாக்கலாம். மேலும், பாதுகாப்பு அமைச்சகம், இஸ்ரோ, சிவில் ஏவியேஷன், நேஷனல் ஏரோநாடிகல் லேபாரட்டரி, அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள், விமான வடிவமைப்பு நிறுவனங்கள், விண்வெளி ஆய்வுத் துறை உள்ளிட்டவற்றிலும் சாதனை படைக்கலாம்.

ஏர் கிராப்ட் மெயின்டெனன்ஸ்
ஏர் கிராப்ட் மெயின்டெனன்ஸ் இன்ஜினிரிங் என்று பெயர் இதைப்படிப்பது மூலம் ஒட்டு மொத்த விமானத்தையும் எப்படி பிரித்து மேய்வது என்று அறிந்து கொள்ளலாம். இந்தப்படிப்பில், சுருக்கமாக சொன்னால், ஆராய்ச்சி, வடிவமைப்பு, தயாரிப்பு, மற்றும் பழுது பார்த்தல் என அத்தனையும் அடங்கிவிடும். ஒவ்வெரு பகுதியையும் தனித்தனியாக எப்படி கையாள்வது என்பது கற்றுக்கொடுக்கப்படுகிறது.

உலகத்தையே சுற்றலாம்!
இந்தவகையான படிப்புகளுக்கு, இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு விமானத்தில் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் யுக்திகளில் இருந்து, தினமும் விமானத்தை சரியான முறையில் இயக்க தேவையான அனைத்து வகையான சோதனைகளும் மேற்கொள்வது இவர்களின் பணிதான்.
என்னங்க, நம் தல அஜித் போல சாதிக்க நீங்களும் ரெடியா ?