இந்த 9 விஷயம் உங்க ரெஸ்யூமில் இருந்தால் உடனே ரிமூவ் பண்ணிருங்க!

வேலை தேடலில் உங்களை அறியாமலே சில விஷயங்கள் உங்களுக்கான வேலைக்கு வேட்டு வைக்க வாய்ப்புள்ளது.

By Kani

வேலை தேடலில் உங்களை அறியாமலே சில விஷயங்கள் உங்களுக்கான வேலைக்கு வேட்டு வைக்க வாய்ப்புள்ளது. இந்த தேவையில்லாத விஷயங்கள் என்னென்ன அவற்றை எவ்வாறு நீக்குவது என்பதை பார்ப்போம்.

இந்த 9 விஷயம் உங்க ரெஸ்யூமில் இருந்தால் உடனே ரிமூவ் பண்ணிருங்க!

பள்ளிப் படிப்பு விபரங்கள்:

நீங்கள் பள்ளிப் படிப்பை முடித்து பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பு என பல்வேறு படிப்புகள் படித்திருக்கும் பட்சத்தில் உங்களது பள்ளிப்படிப்பு விபரங்களை தவிர்ப்பது நலம்.

சதவிகிதம் & ஜிபிஏ:

உங்களது ரெஸ்யூமில் கல்லூரிப் படிப்பை குறிப்பிடும் பட்சத்தில் சதவிகிதம், ஜிபிஏ போன்ற விபரங்களை குறிப்பிடுவதை தவிர்க்கலாம். எனென்றால் குறைவான ஜிபிஏ உங்கள் வேலைக்கு வேட்டுவைப்பதாக கூட அமையலாம்.

லிங்க்:

உங்களுடைய தனித்திறமைகள் வெண்ணெயை கத்தியை கொண்டு வெட்டுவது போல் எளிமையாக புரிய வேண்டும். ஆங்காங்க இது வந்து... அது வந்து... அப்படினு இருந்த, நீங்கள் தொழிலுக்கு புதுசு என்பதை எளிதாக காட்டிக்கொடுத்துவிடும்.

புகைப்படம்:

நீங்கள் நடிப்பதற்கோ அல்லது மாடலிங் துறைக்கு விண்ணப்பிக்காத பட்சத்தில் போட்டோ தேவையில்லை. அதற்காக விண்ணப்பிக்கும் பணிக்கு புகைப்படம் கேட்கும் பட்சத்தில் கண்டிப்பாக அனுப்பலாம். இல்லை என்றால் இது தேவையில்லாத ஒன்று.

பணி அனுபவம்:

உங்களின் பணிஅனுபவத்தை குறிப்பிடும் படியான இடைவெளியில் அடுத்த பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் இதைக்குறிப்பிட மறக்காதீர்கள். நீண்ட இடைவெளி என்றால் இதை தவிர்ப்பது நலம். அதற்கு முன் அந்த நீண்ட இடைவெளிக்கு சரியான காரணத்தை யோசிக்க மறக்காதீர்கள்.

ஆப்ஜெக்ட்டிவ்:

இந்த பகுதியானது வேலை வாய்ப்பை பெற்று தருவதில் பெரும்பங்கு வகிப்பதில்லை. எனவே இந்தப்பகுதியில் தெளிவாக எதையாவது எடுத்துக்காட்ட முடியுமானால் செய்யுங்கள் இல்லை என்றால் இந்த பகுதியை கட் செய்வது நல்லது.

ஸ்கில்ஸ்:

இங்கே உங்களுக்கு எதுவுமே தெரியாதபட்சத்தில் எம்எஸ் வேர்டை குறிப்பிடலாம். இல்லை என்றால் இது போன்ற சில சாதாரண விஷயங்களை குறிப்பிடுவதை தவிர்க்கலாம்.

பெர்சனல் இன்பர்மேஷன்:

இந்தப் பகுதியில் அத்தியவசியமான தகவல்களை கொடுத்தல் மட்டும் போதும். அதைவிடுத்து அரசியல் பின்புலம், மதம், போன்றவைகளை தவிர்ப்பது நலம். குறிப்பிட்ட வேலைக்கு என்ன தேவையே அதைச் சார்ந்த தகவல்களை மட்டும் குறிப்பிடுவது நலம்.

பக்கம்:

அதிகபட்சம் இரண்டு பக்கங்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அனுபவம் கூடுதலாக இருக்கலாம். அதை எவ்வாறு சுருக்கி புரிய வைப்பது என்பதை அறிய முற்படுங்கள்.

உங்க ரெஸ்யூம் ஆல்-இன்-ஒன் டைப்பா? அப்போ இங்கதான் போகும்!உங்க ரெஸ்யூம் ஆல்-இன்-ஒன் டைப்பா? அப்போ இங்கதான் போகும்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
9 Things to Remove From Your Resume Right Now
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X