எடுடா மேளம்... அடிடா தாளம்... இசை காதலர்களுக்கான தொழில் வாய்ப்புகள்!

எடுடா மேளம்,..அடிடா தாளம்.. இனி தான் கச்சேரி ஆரம்பம் என்று கல்யாண விசேஷம் முதல் கருமாதி வரை இசைக்கு என்று தனி இடம் எப்போதும் உண்டு. இசையின் மீது தீராத காதல் கொண்டவர்களும், இசை திறமையை வளர்த்து கொள்

By Kani

எடுடா மேளம்,..அடிடா தாளம்.. இனி தான் கச்சேரி ஆரம்பம் என்று கல்யாண விசேஷம் முதல் கருமாதி வரை இசைக்கு என்று தனி இடம் எப்போதும் உண்டு. இசையின் மீது தீராத காதல் கொண்டவர்களும், இசை திறமையை வளர்த்து கொள்வதில் உண்மையிலே ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர், இளைஞர், இளம் பெண்களுக்கு இத்துறை ஏற்றது.

இசையை கற்றுக்கொண்டவர்கள் இசையை தவிர, பிற இசை சம்மந்தப்பட்ட பல்வேறு வகையான கலை துறைகளிலும் ஜொலிக்க முடியும். இந்தவகையான படிப்புகளை முறைப்படி படிக்கும் போது இசைத் துறையில் நிச்சயமாக ஜாம்பவான் ஆக வலம் வர முடியும்.

வேலை வாய்ப்புகள்:

வேலை வாய்ப்புகள்:

இந்தப்படிப்புகளை முடிப்பவர்கள் அரசு இசைக் கல்லூரி, பள்ளிகளில் இசை மற்றும் இசை கருவி பயிற்றுனர், விரிவுரையாளர் போன்ற பல்வேறு பணியிடங்கள் காத்திருக்கின்றன.

சில ஹோட்டல்களில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய இசைக்காகவும் தனித்தனி கலைஞர்களை நியமித்து இசை விருந்து படைக்கின்றனர்.

இதோடு, இசை நிகழ்ச்சிகள், சினிமா ஸ்டூடியோக்கள், மாநாடுகள் போன்ற பொதுநிகழ்வுகள், ரேடியோ, டி.வி., தொலைத் தொடர்பு நிறுவனங்கள் என ஏகபோக வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

 

ஆர்ட்டிஸ்ட் மேனேஜர்:

ஆர்ட்டிஸ்ட் மேனேஜர்:

இசைத்துறையில் பலருக்கும் தெரிந்திராத முக்கியப் பணிகளில் ஒன்று ஆர்டிஸ்ட் மேனேஜர்.

இசைக் கலைஞர்கள் பலர், தங்களுக்கான வாய்ப்புகளைத் தேடித் திரிந்து கொண்டிருந்தாலும், இசைத்துறையில் எங்கெங்கு யாருக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது எளிதில் தெரிவதில்லை.

அதை பூர்த்தி செய்யும் விதமாக இவர்கள் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் ஒரு பாலமாக விளங்குகின்றனர். ரசிகர்கள் விரும்பும் சிறந்த கலைஞரை நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்வதற்கேற்ப ஊதியம் அமையும்.

 

பாடல் ஆசிரியர்:

பாடல் ஆசிரியர்:

எழுத்துத் திறமை இருப்பவர்களுக்கும் இசைத் துறையில் பணி வாய்ப்பு உண்டு. இசைத் துறையில் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளும் ஒரு குறுகிய காலப் படிப்பை படித்துக் கொண்டால் போதும் எளிதாக பாடல் ஆசிரியர் ஆகிவிடலாம்.

இசை எழுத்தாளர்:

இசை எழுத்தாளர்:

இசை நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை எழுதுதல், இசைக் கலைஞர்களை நேர்காணல் செய்தல், ஆல்பங்கள் பற்றிய விமர்சனம் எழுதுதல் என இசை சார்ந்த அனைத்து சங்கதிகளையும் ஒன்றுவிடாமல் ஆராய்ந்து, அறிந்து எழுத்தில் பதிக்கலாம். அனேக தினசரிகள், இதழ்கள், யூடியுப் சேனல்கள் இசை சார்ந்த கட்டுரைகள், விடியோக்களை வெளியிடுகின்றன.

மியூசிக் டீச்சர்:

மியூசிக் டீச்சர்:

திறமை வாய்ந்த மியூசிக் டீச்சர்களுக்கு மதிப்பு அதிகம். அதற்கேற்ப வாய்ப்புகளும், வருவாயும் அதிகம். தனிநபருக்கு இசை கற்றுக் கொடுத்தல், இசைப்பள்ளி நடத்துதல், பிரபலங்களுக்கு நேரில் சென்று இசை கற்பிப்பது, இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது என எல்லாப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள் மியூசிக் டீச்சர்.

கல்லூரிகளிலும் வகுப்பெடுக்க முடியும். மியூசிக் டீச்சராக உயர அடிப்படை இசை ஞானம் போதாது. ஆழ்ந்த இசை ஞானம் இருந்தால்தான் சிறந்த மியூசிக் டீச்சராகி எதிர்கால இசை ஜாம்பவான்களை உருவாக்க முடியும்.

 

இசை அமைப்பாளர்:

இசை அமைப்பாளர்:

இசைத் துறையில் உயர்ந்த பணியாக கருதப்படுவது இசை அமைப்பாளர் அல்லது இசை இயக்குநர். இசைத்துறையின் அடிப்படை பணிகள் அனைத்தையும் அறிந்து உயர்ந்தவர்களால் இசை அமைப்பாளர் பணியில் சாதனை படைக்க முடியும்.

இசைத் துறையின் நுண்ணறிவையும், அனுபவத்தையும் பெற்றுக்கொண்டால் அந்த சாதனையை நீங்களும் நிகழ்த்தலாம். சினிமாத் துறையில் இசை அமைப்பாளர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

 

சவுண்ட் என்ஜினீயர்:

சவுண்ட் என்ஜினீயர்:

இசை ஞானம் மிகுதியாக இல்லாவிட்டாலும் ஆடியோ என்ஜினீயரிங் படிப்பை கற்கவும், சாதிக்கவும் முடியும். இசையின் சிதறல்களை சமாளிக்கும் தொழில்நுட்பம் மற்றும் இயந்திர நுட்பங்களை அறிவது ஆடியோ என்ஜினீயர் படிப்பாகும். இதில் உள்ள ஆர்வமும், அறிவுத்திறனும் சிறந்த பணிவாய்ப்பையும், உயர்ந்த அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

 

பின்னணி பாடகர்:

பின்னணி பாடகர்:

மென்மையான குரல் வளமும், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கிறங்க வைக்கும் திறமையும் இருந்தால் நீங்களும் பின்னணி பாடகர்தான். தற்போது பின்னணி பாடகர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளன. ஒருபாடல் அல்லது ஒரு படத்திற்காக பாடும் பாடல்களை பொறுத்து ஆயிரத்தில் இருந்து லட்சங்கள் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.

 

ஜாஸ் இசையமைப்பாளர்:

ஜாஸ் இசையமைப்பாளர்:

அனுபவமும், திறமையும் உள்ள ஜாஸ் இசைக்கலைஞர்கள் கச்சேரி மற்றும் ரெக்காடிங் ஸ்டூடியோவில் பல்வேறு வகையான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நிகழ்ச்சியை பொறுத்து 10 ஆயிரம் முதல் லட்சகணக்கில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

 

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
8 Distinct Careers for Music Lovers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+