ஒரு வாரத்தில் எந்த நாட்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ?

வேலை தேடிச் செல்லும் பல இளைஞர்கள் பொது அறிவு பிரிவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி கடைசியில் நேர்காணலின் போது கேட்கப்படும் சாதாரண கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பணி இழப்பது தற்போது வாடிக்கையாகி வருகிறது. நாட்டு நடப்பு, சுய நிலை அறியும் பல கேள்விகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது வெற்றியாளர்களின் அறிவுரையாகும்.

ஒரு வாரத்தில் எந்த நாட்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ?

 

இந்த மாதிரியான இன்டர்வியூ ஒன்றில் போட்டியாளரின் மனநிலையை சோதிக்க இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஒரே நேரத்தில் பல நடிகைகள் உங்களை டேட்டிங்க் அழைக்கிறார்கள். நீங்கள் ஒரு நடிகையுடன் டேட்டிங்க் போவீர்களா என்று தேர்வாளர் கேள்வி கேட்டார். இது போன்ற கேள்விகள் பல கேட்கலாம். நீங்கள் தன்நம்பிக்கையுடனும், நேரடியாகவும் பதில் அளிக்கிறீர்களா என்பதே அங்கு முக்கியம்.

இதுபோன்ற கேள்விக்கு பலர், நடிகைகள் எவ்வளவு பெரிய இடம். அவர்கள் நம்மை எங்க கூப்பிடப் போறாங்க. நான் சாதாரணமானவன் என்ற அர்த்தத்தில் பதிலளித்தனர். ஆனால் ஒருவர் மட்டும் தேர்வாளரே பாராட்டும் வகையில் பதிலளித்து வேலையையும் பெற்றார். இதுபோன்ற பத்து கேள்விகளையும் இங்கே காண்போம்.

கேள்வி 1:

கேள்வி 1:

ஒரு வாரத்தில் எந்த நாட்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ?

பதில்:

இதுபோன்ற கேள்வி சாதாரண நாட்களில் கேட்டாலும் கூட நாம் அனைவரும் அளிக்கக் கூடிய பதில் வெள்ளி, சனி, ஞாயிறு தான். ஏனென்றால் அந்நாளில் தான் நமக்கு விடுமுறை கிடைக்கும். ஆனால், நமக்கு வேலை வழங்வோரிடம் இந்த பதில் அளித்தால் அவ்வளவுதான். வேலையின் மீது நீங்கள் கொண்டுள்ள வெறுப்பை வெளிப்படுத்தியது போல் ஆகிவிடும். மாறாக, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் என கூறினால் கேள்விகேட்போருக்கே உங்கள் மீது தனி மரியாதை ஏற்பட்டு விடும்.

கேள்வி 2:

கேள்வி 2:

உங்களது கடைசி நிறுவனத்தில் எந்த தவறை செய்து உயர் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டீர்கள் ?

இது ஒரு பொதுவான கேள்விதான். உங்களுடைய தரத்தையும் சோதிக்கக் கூடிய கேள்வியாகும். இதற்கு நீங்கள் அளிக்கக் கூடிய பதில் உண்மையில் மாறுபட்டதாகவும், அதே சமயம் உண்மைத் தன்மை நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். நீங்கள் செய்ததில் நியாயமான ஒரு தவறு சுட்டிக்காட்டி விடையளியுங்கள்.

கேள்வி 3:
 

கேள்வி 3:

உங்களுக்கு பொய் கூறும் பழக்கம் உண்டா ?

சாதாரணமாக இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாது. ஆனால், நேர்முகத் தேர்வின் போது நீங்கள் நடந்துகொள்ளும், கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தினைக் கொண்டு ஒரு வேலை இக்கேள்வி கேட்கப்படலாம். அதுபோன்ற நேரத்தில் நேர்மையான பதிலை வழங்கி விடுங்கள். சிறுவயதில், அல்லது எப்போதாவது தண்டனையில் இருந்து தப்பிக்க கூறியது உண்டு என கூறிவிடுங்கள்.

கேள்வி 4:

கேள்வி 4:

உங்களுக்கு பிடித்த நடிகை யார் ? அவரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறுங்கள்

இம்மாதிரியான கேள்விக்கு சற்றும் தயங்காமல் பதில் அளியுங்கள். எந்த நடிகை குறித்து முழுமையான தகவல் உங்களுக்குத் தெரியுமோ, அல்லது அந்நடிகை மேற்கொண்டுள்ள ஏதேனும் ஓர் சிறந்த விசயத்தினை முன்வைத்து பதிலை வழங்குங்கள்.

கேள்வி 5:

கேள்வி 5:

ஒரு வேலை நீங்கள் தூங்கி எழும் போது ஆண் பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ மாறியிருந்தால் என்ன செய்வீர்கள் ?

இக்கேள்வி உங்களின் மனநிலையினை பரிசோதிக்கவே கேட்கப்படுகின்றன என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் பதற்றத்துடன் மருத்துவமனை செல்வேன் ?, வாழ்வை வெறுத்து விடுவேன் போன்ற பதில்களைக் கூறுவதை விட இந்த மாற்றத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன். இது எனக்குக் கிடைத்த வரம் என ஏற்றுக் கொள்வேன் என பொறுமையான பதிலை கூறுங்கள். உங்களது குணம் இவற்றின் மூலம் அறிந்துகொள்வர்.

கேள்வி 6:

கேள்வி 6:

இந்த நிறுவனத்தைப் பத்தி என்ன தெரியும்?

யாருமே இந்த கேள்விக்கு குடுக்கற பதில், நிறுவனத்தோடு வலைத்தளத்துல இருக்கற விஷயங்கள். நிறுவனம் எதிர்பாக்கறது அதை இல்ல. உங்களுக்கு அந்த விஷயங்க மேல ஆர்வம் இருக்கான்னு தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பா இத பயன்படுத்திப்பாங்க. இக்கேள்விக்கான பதில் கூறும் போது, உங்களுக்கு நிறுவனத்த பத்தி என்ன தெரியுமோ, முக்கியமா அவுங்க உபயோகிக்கற சில முக்கிய வார்த்தைகள், அத பயன்படுத்துங்க. அடுத்து நிறுவனத்த பத்தி நீங்க ஆய்வு செஞ்சுருந்தா அதுல இருந்து கொஞ்சம் சொல்லுங்க. முடிஞ்சவரைக்கும் உங்க பதில் வித்தியாசமா இருக்கறமாதிரி அதே சமயம் கேள்விய விட்டு நழுவாம இருக்கவும் பாத்துக்குங்க.

கேள்வி 7:

கேள்வி 7:

உங்க கனவு வேலை என்ன?

இந்த கேள்விக்கு உண்மையிலேயே உங்களுக்கு என ஓர் கனவு வேலை இருந்தால் அதை முழுமையாக சொல்லி விடாதீர்கள். ஏனென்றால் பிடித்த வேலையை விட்டு இங்கு என்ன செய்ய போகிறாய் என்ற மனநிலையே கேள்வியாளருக்கு ஏற்பட்டு விடும். அதற்கு மாறாக உங்க கனவும், நீங்க சேரபோற வேலையும் ஒத்துப் போனா இந்த கேள்விக்கு உண்மையான பதில் சொல்றது நல்லது. இல்லைனா வேலைக்கு ஏத்த மாதிரி அத மாத்தி சொல்றது சரியா இருக்கும்.

கேள்வி 8:

கேள்வி 8:

ஒரு சிறந்த தலைவனா எப்போ நீங்க இருந்திங்க?

நிர்வாகத் திறமைக்கும், வழிநடத்தும் திறமைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதை அறிந்தால் மட்டுமே இக்கேள்விக்கு சரியான பதில் வழங்க முடியும். நீங்களா ஒரு திட்டத்துக்கு அடித்தளம் போட்டு, அது எங்க எங்க ஒப்புதல் வாங்கி சரியா வழிநடத்தி, கடைசில முடிச்சு நிறுவனத்துக்கு இத்தனை லாபம் பாத்துச்சு மாதிரியான பதிலையே உங்களது கேள்வியாளர் எதிர்பார்ப்பாங்க. அதற்கு ஏற்றவாறு பதில் கூறுங்கள்.

கேள்வி 9:

கேள்வி 9:

மிருகமா உங்களை மாற்ற ஆசைப்படால் என்ன மிருகமா மாற வேண்டும் ?

இந்த மாதிரி எடக்கு மடக்கான கேள்விகள் கேட்பதே உங்களால் சட்டேன சிந்தித்து முடிவு எடுக்க முடிகிறதா என்று தான். இதுபோன்ற கேள்விகளுக்கு சரியான பதில், தவறான பதில் என்றெல்லாம் இல்லை. அதனால், சற்று சிந்தித்து அவுங்களுக்கு ஏற்ற குணங்களுடன் ஒரு மிருகத்தை சொல்ல முடிஞ்சா அற்புதமா இருக்கும். கேட்ட உடனே பதில் சொல்லாம கொஞ்சம் இழுத்து யோசிச்சு பதில் சொன்னா இன்னும் சரியா இருக்கும்.

கேள்வி 10:

கேள்வி 10:

நடிகைகள் பலர் ஒரே நேரத்தில் டேட்டிங்க் கூப்பிட்டால், நீங்கள் எந்த நடிகையுடன் போவீர்கள்?

நிச்சயமாக இந்த நிலையை நான் யோசித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் எப்படியும் சாதித்து காட்டுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் அந்த நிலையை அடையும்போது நிச்சயம் பிரபலமாகியிருப்பேன். அப்போது நடிகைகள் என்ன யார் கூப்பிட்டாலும், என் வேலைப் பளுவை மனதில் வைத்து அதற்கு தகுந்தார்போல நிச்சயம் டேட்டிங் செல்வேன்.

இந்த பதில் கேள்விக்கான நேரடி பதில் இல்லைதான். என்றாலும், இதன்மூலம் தேர்வாளர், போட்டியாளரின் தன்னம்பிக்கையை புரிந்துகொண்டார்கள். இதனால் அவருக்கு வேலை கிட்டியது.

மேலே ஆரம்பத்தில் கூறியது போல இதில் கேட்கப்படும் கேள்விக்கும் உங்களுக்கும் தனிப்பட்ட தொடர்பு இருக்காமல் போகலாம். ஆனால், அக்கேள்விக்கு நீங்கள் அளிக்கக் கூடிய பதிலும், நேர்த்தியுமே கேள்வியாளருக்கு முக்கியம்.

உங்க ரெசியூம் இந்த மாதிரி இருந்தா ஐடி வேலையெல்லாம் அசால்ட்டா கிடைச்சுடும்..!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10 Tricky Interview Questions and How to Answer Them
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X