ராமர் தீபாவளியை எங்கு முதலில் கொண்டாடினார் ?

ஐஏஎஸ், யுபிஎஸ்சி உள்ளிட்ட பொதுத் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்போர் தங்களுக்கு அளித்த வாய்ப்பினை தவறவிடுவதே தேர்வின் போது கேட்கப்படும் அசாத்தியமான சில கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் தான். போட்டியில் வெற்றி பெற்றவர்கள், தற்போது அத்துறையில் சீனியர் பதவியில் இருப்போர் உள்ளிட்டவர்கள் கூறும் மிகப் பெரிய அறிவுரையே, பொதுவான கேள்விகளுக்கும் விடை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்பதாகும்.

ராமர் தீபாவளியை எங்கு முதலில் கொண்டாடினார் ?

 

அவர்கள் கூறுவதைப் போல நகைச்சுவையும், அதே சமயம் சற்று சிந்திக்கும் திறனும் அதிகமாக இருப்பதே தேர்வுக்கான முழுத் தகுதியாகும். வாருங்கள், ஐஏஎஸ், யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளின் போது தலையைச் சுற்ற வைத்த சில வியப்பூட்டும் கேள்வி, பதில்கள் குறித்தும் அறிந்து கொள்வோம்.

கேள்வி 1

கேள்வி 1

நண்பர்கள் 3 பேர் கடையில் காப்பி குடித்துவிட்டு 15 ரூபாய் பேரரிடம் தருகின்றனர். கடைக்காரர் ரூ.10 மட்டும் எடுத்துக் கொண்டு மீதி ரூ.5 திருப்பிக் கொடுக்கச் சொன்னார். ஆனால், பணியால் ரூ.2 எடுத்துக் கொண்டு ரூ.3 மட்டும் திருப்பிக் கொடுக்கிறார்.

இப்போது ஒவ்வொருவரும் ஒரு காப்பிக்கு ரூ.12 கொடுத்துள்ளனர். பணியாள் எடுத்த ரூ.2 சேர்த்தால் ரூ.14 தான் வருகிறது. இப்போது மீதி ஒரு ரூபாய் எங்கே ?

விடை :

ஒவ்வொரு நபரும் காபி மற்றும் பணியாளுக்கு சேர்த்தியே ரூ. 12 கொடுத்துள்ளனர். பணியாள் திருப்பிக் கொடுத்த ரூ.3 சேர்த்தால் 15 ரூபாய் வந்துவிடும்.

கேள்வி 2

கேள்வி 2

2+2/2 இரண்டு கூட்டல் இரண்டு வகுத்தல் இரண்டின் விடை என்ன?

இந்த கேள்வியை கேட்ட உடனேயே நம்மில் பலர் இரண்டு கூட்டல் இரண்டின் விடை நான்கு. நான்கு வகுத்தல் இரண்டின் விடை இரண்டு. ஆக மொத்தம் இந்த கணக்கின் விடை இரண்டு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் உண்மையில் விடை 3.

கணக்கு விதிப்படி, முதலில் வகுத்தலை செய்துவிட்டுதான் பின் கூட்டலை செய்யவேண்டும். அதன்படி, முதலில் இரண்டை இரண்டால் வகுத்தால் கிடைப்பது ஒன்று. பின் அந்த ஒன்றுடன் இரண்டைக் கூட்ட கிடைப்பது 3.

விடை :

2+2/2 = 3 அதாவது (2+2)/2 என்று கணக்கிடுவது தவறு. 2+(2/2) என்று கணக்கிடவேண்டும்.

கேள்வி 3
 

கேள்வி 3

நீங்கள் தெற்குப் பக்கம் பார்த்து நிற்கிறீர்கள். உங்களது காதலி வடக்கு பக்கம் பார்த்து நிற்கிறார். இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க முடியவில்லை. கண்ணாடி உபயோகிக்காமலும், இருவரும் முகத்தைத் திருப்பாமலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க என்ன செய்வீர்கள் ?

விடை :

இருவரும் முகம் திருப்பாமல் பின்னோக்கி நகர்ந்த வருவோம்.

கேள்வி 4

கேள்வி 4

100 ரூபாயில் இருந்து 10 ரூபாயை எத்தனை முறை கழிக்க முடியும் ?

விடை :

ஒரு முறை மட்டுமே கழிக்க முடியும். ஏனென்றால் முதன்முறையிலேயே 100 ரூபாய் 90 ரூபாயாகிவிடும்.

கேள்வி 5

கேள்வி 5

நீங்கள் வழிதவறி ஒரு தீவிற்கு சென்றுவிட்டீர்கள். அங்கே உங்களை கொலை செய்யும்படி ராஜா உத்தரவிட்டதால் ஒரு பெண் உங்களை கொலை செய்ய வருகிறார். எப்படி தப்பிப்பீர்கள் ?

விடை :

என்ன பாஸ், இன்டர்வியூல போய் கொலை, பலின்னு பேசிட்டு இருக்கீங்க-ன்னு யோசிக்கிறீர்களா ? ஆமாங்க, ஒரு பிரச்சனையை எப்படி நீங்க கையாலுறிங்கன்னு தெரிந்துகொள்ளவே இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்கான சிம்பில் விடை, "ஒரு அழகற்ற பெண்ணின் கையால் சாக வேண்டும் என்பேன்." இதுபோதாதா நீங்க தப்பிக்க!

கேள்வி 6

கேள்வி 6

உங்களது தாயை பிராஸ்டியூட் என்று அழைத்தால் என்ன செய்வீர்கள் ?

இந்தக் கேள்வி கொஞ்சமும் தாமதமின்றி உங்களுக்கு கோபத்தை வரவழைக்கும். ஆனால், உங்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவர் கோபத்தை எதிர்பார்க்கவில்லை. சரியான பதிலையே எதிர்பார்க்கிறார். மேலும், இக்கேள்வி உங்களது மனநிலை எவ்வாறு செயல்படுகின்றது என்பதையே தீர்மானிக்கும்.

விடை :

இதுபோன்ற ஒரு கேள்வி ஒரு நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், "என் தாய் பிராஸ்டியூட், ஆனால் அவருக்கு என் தந்தை மட்டும்தான் கஷ்டமர்" என விடை கொடுத்தார். வேலையையும் பெற்றார். இன்று தன்னிடம் கேள்வி கேட்டவருக்கே மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கேள்வி 7

கேள்வி 7

ராமர் தீபாவளியை எங்கு முதலில் கொண்டாடினார் ?

இராமாயணத்தில் நீங்க வீக்காக இருந்தால் நிச்சயம் இந்தக் கேள்வியும் உங்களை திணறடித்து விடும். ராமர் ஒருவேலை தீபாவளியை அயோத்தியில் கொண்டாடியிருப்பாரோ என்று குழம்பிக்கொள்ள வேண்டாம். பொறுமையாக சில நிகழ்வுகளை ஆராய்ந்து பாருங்கள்.

விடை :

தீபாவளி நரகாசுரனை வதம் செய்ததன் நினைவாக கொண்டாடப்படும் நிகழ்வாகும். நரகாசுரனைக் கொன்றது கிருஷ்ணன். ஆக, கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பு ராம அவதாரம் இருந்தது. எனவே, ராமருடைய காலத்தில் தீபாவளியே இல்லை.

கேள்வி 8

கேள்வி 8

நீங்கள் தொடர் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட பொழுது இரவு நேரத்தில் வனப் பகுதியில் வழி தவறி விடுகிறீர்கள். அங்கே உங்களுக்கு நீர், நெருப்பு மற்றும் ஓய்வெடுக்க அறை கிடைக்கிறது. உங்களது தேர்வு எதுவாக இருக்கும்.

விடை :

இந்தக் கேள்வி பணியில் நீங்கள் காட்டும் ஆர்வத்தை சோதிக்கவே கேட்கப்பட்டுள்ளது என்பதை முதலில் உணர்ந்துவிட்டீர்கள் என்றால் விடையும் கிடைத்து விடும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான பணியாளாக எதிர்பார்ப்பது பணியின் மீது பற்று கொண்டிருப்பவரையே.

அப்படி என்றால் நீங்கள் அளிக்க வேண்டிய பதில் நெருப்பு. இரவில் நெருப்பை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுவேன். எனது இலக்கை அடைந்த பிறகு ஓய்வெடுத்துக் கொள்வேன்.

கேள்வி 9

கேள்வி 9

உதாரணத்திற்கு உங்களுடைய அம்மாவிற்கு மூன்று பிள்ளைகள். ஒருவரது பெயர் ஏ, மற்றொருவரின் பெயர் பி. அப்படியென்றால் மூன்றாவது மகனின் பெயர் எதுவாக இருக்கும்.

விடை :

என்ன இது ஏ, பி-ன்னு வருது. அப்படின்னா அடுத்தது "சி" தான பதில் என சிந்திக்காமல் ஏதோ சாதித்தது போல பதில் அளித்தால் அப்படியே உங்க ஃபைலை எடுத்துக் கொண்டு வெளியேற வேண்டியது தான். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்க, அவரு கேள்வி கேட்டதே உங்களுடைய அம்மா என்று தான். அப்படி என்றால் மூன்றாவது மகன் நீங்கள் தானே. விடை உங்களது பெயர் தான்.

கேள்வி 10

கேள்வி 10

உங்களது நண்பர் வீட்டிற்குச் செல்கிறீர்கள். அங்கே ஆடையின்றி அழகானப் பெண் கதவைத் திறக்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள் ?

உடனே குஜால் மைன்டுக்கு போகாமல் நேர்முகத் தேர்வரிடம் பதில் அளிக்க வேண்டியது கட்டாயம். ஏனென்றால் இக்கேள்வி சக பணியாளர்களுடன் நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தைத் தீர்மானிக்கும்.

விடை :

ஆம், அது என் நண்பனின் குழந்தை. நான் அந்த பெண் குழந்தையை ஏந்திக் கொண்டு விளையாடுவேன் என்ற ஒருவரின் பதில் கேள்வி கேட்டவரையே திகைத்துவிட வைத்தது. வேலையும் கிடைத்தது.

உங்களுக்கு தமிழ் அத்துப்படியா ? அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சத்திற்கு வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10 Super Tricky Questions asked in IAS Exam and UPSC Interview
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X