உங்க "லிங்கிடு இன்"ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி!

ஃபேஸ்புக் முதல் லிங்கிடு இன் வரை புரபைல் வைந்திருந்தால் மட்டும் வேலை வீடு தேடிவராது. அதில் என்னென்ன அம்சங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது தெரிந்திருப்பது அவசியம்.

By Kani

வேலைக்கு என்ன பஞ்சம் என்பது போல தற்போது, பல நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் இருக்கும் காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றன.

இது தவிற பல்வேறு வகையான இணையதளங்கள் குறிப்பாக லிங்கிடு இன், நௌக்ரி, சைன், டைம்ஸ் ஜாப் போன்ற பல்வேறு தளங்கள் வாயிலாகவும், இளைஞர்கள் இணையத்தில் இருந்தபடியே வேலை தேடுவதற்காக உதவி புரிந்து வருகின்றன.

உங்க

வேலை தேடுவோர், வேலைக்கு ஆள் தேடுவோர் என இருவரையும் இணைக்கும் முயற்சியில் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு போட்டி போட்டு பணியாற்றி வருகின்றன.

வேலை வழங்கும் நிறுவனமும், வேலைவாய்ப்பு தகவல்களை வழங்க குறிப்பிட்ட இணையதளங்களும் நமக்கு உதவினாலும் கூட பல்வேறு வாய்ப்புகள் நம் கை நழுவி போய்விடுகின்றன.

பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பனுக்கு வேலை கிடைத்தது, அம்மா மூலமாக அறிந்து கொண்டு ரெண்டு பேரும் ஒரே கம்யூட்டர் சென்டர்லதான் அப்ளை பண்ணோம். பின்ன ஏன்? என்னை மட்டும் இன்டெர்வியூக்கு அழைக்கவில்லை என வருந்துவதற்கு இந்த விஷயங்கள் கூட காரணமாக இருக்கலாம்.

ஃபேஸ்புக் முதல் லிங்கிடு இன் வரை புரபைல் வைந்திருந்தால் மட்டும் வேலை வீடு தேடி வந்துவிடாது. அதில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும் என்பது தெரிந்து வைத்திருப்பது அவசியம். அந்த வகையில் லிங்கிடு இன்-ல இருப்பவர்களுக்கான செக் லிஸ்ட்...

1. தொடர்பு :

1. தொடர்பு :


முதலில் நாம் எத்தனை நபர்களுடன் லிங்கிடு இன் தொடர்பில் இருக்கிறோம் என்பது முக்கியம். குறைந்தது 100 பேருடனாவது இணைப்பில் இருக்கிறோமா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்.

2. புகைப்படம் :

2. புகைப்படம் :


லிங்கிடு இன் மூலமாக வேலை பெற வேண்டுமென்றால் ஃபேஸ்புக்கில் வைத்திருக்கும் புகைப்படம் போல் அல்லாமல் நல்ல நேர்த்தியான புகைப்படத்தை முகப்பு படமாக வைத்துள்ளீர்களா என்பதை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

3. தலைப்பு :

3. தலைப்பு :


நமது வேலை தொடர்பான ஹெட்லைன் புரபைல், பார்பவர்களை சுண்டி இழுப்பது போல் இருக்க வேண்டும். அதை விட கூகுள் தேடு பொரியில் தேடப்படும் வார்த்தைகளை ஹெட்லைனில் பயன்படுத்துவது கூடுதல் பலம் சேர்க்கும் என்பதை மறவாதீர்கள்.

4. நீங்கள் யார் :

4. நீங்கள் யார் :


உங்களுடைய சம்மரி என்று சொல்லக்கூடிய பணி விபரங்களில், உங்களுக்கு என்ன தெரியும், உங்களால் நிர்வாகத்திற்கு என்ன பயன், நீங்கள் முன்பு பணியாற்றிய நிர்வாகத்தில் உங்களுடைய பணி என்ன போன்ற விபரங்களை தெளிவாக குறிப்பிட மறக்காதீர்கள்.

5. பணி அனுபவம் :

5. பணி அனுபவம் :


இந்தப்பகுதியில் நீங்கள் அனுபவத்தை இரண்டு விதமான முறையில் விடியோ பைலாகவே, இமேஜ் பைலாகவே கொடுக்கலாம். மற்றொன்று கட்டுரை வடிவமாக கொடுக்கலாம். இதில் முந்தைய நிர்வாகத்தில் நீங்கள் எதிர்நோக்கிய சேலஞ்சான விஷயம் என்ன என்பதையும் குறிப்பிட மறக்காதீர்கள்.

6. ரெக்கமெண்ட் :

6. ரெக்கமெண்ட் :


குறைந்தது 3 நபர்களையாவது ரெக்கமெண்ட் வழங்க தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 15 முறையாவது யாராவது உங்களுக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நாம் ஒரு ஆரோக்கியமான குழுவுடன் பயணிக்கிறோம் என்ற ஒரு நிலையை பதிவு செய்யலாம்.

7. நெட்வெர்க் :

7. நெட்வெர்க் :


நீங்கள் குறைந்தது 25 குழுவிலாவது இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அந்தக்குழுவில் கண்டிப்பாக வாரம் ஒரு முறையாவது உங்களுடைய கட்டுரை இடம்பெறும் வகையில் பார்த்து கொள்வது அவசியம்.

8. பின் தொடர்தல் :

8. பின் தொடர்தல் :


குறைந்தபட்சமாக நம் பணிபுரியும் துறை சார்ந்த ஒரு 5 நிறுவனங்களையாவது பின்தொடர மறக்கவேண்டாம்.

9. குறுஞ்செய்தி :

9. குறுஞ்செய்தி :


ஒரு வாரத்திற்கு தெரிந்த ஒரு சிலருக்கும், தெரியாத ஒருவருக்கும் அது சிறு விளக்கம் கேட்பதாகவே, அல்லது உதவி வேண்டுவதாக என எது வேண்டுமானலும் இருக்கலாம். குறுஞ்செய்திகளை அனுப்ப மறக்காதீர்கள்.

10. கமெண்ட் :

10. கமெண்ட் :


நீங்கள் பங்குபெற்றுள்ள குழுக்களில் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது மற்றவர்களின் பதிவுகளுக்கு கமெண்ட் செய்ய மறக்காதீர்கள்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10-Step Checklist to Refresh Your LinkedIn Profile
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+