எழுதுவதில் அலாதியான ஆர்வமா? இப்படியும் சம்பாதிக்கலாம்...

ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு ஏமாற்று வேலை என பெரும்பாலானேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அது முற்றிலும் தவறு. பிளாக் எழுதுவதின் மூலம் நிச்சயமாக வருமானம் ஈட்டலாம்.

By Kani

ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு ஏமாற்று வேலை என பெரும்பாலானேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் சம்பாதிப்பதற்கு முன்பு வரையில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதெல்லாம் சும்மா என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பலவிதமான தொழில்களில் பிளாக் எழுதுவதும் ஒன்று. ஆனால் இதற்கு தனியாத கற்றல் ஆர்வம் வேண்டும். அந்த வகையில் பிளாக் எழுதுவதின் மூலம் எவ்வாறு வருமானம் ஈட்டுவது என்பதை இங்கு பார்க்கலாம்.

எழுதுவதில் அலாதியான ஆர்வமா? இப்படியும் சம்பாதிக்கலாம்...

1.நேரடி விளம்பரம்:

பிளாக் எழுதுவதில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான எளிய முறைகளில் இதுவும் ஒன்றாகும். நேரடி விளம்பரம் பொதுவாக அதிக பார்வையாளர்களை கொண்ட வலைப்பதிவுகளுக்காக மட்டுமே ஒதுக்கப்படுகின்றன.

பொதுவாக விளம்பரங்களில் இரண்டு வழிகளில் வருமானம் ஈட்டலாம் (CPC) காஸ்ட்-பெர்-கிளிக் / பே-பெர்-கிளிக் (PPC) விளம்பரங்கள். நமது பார்வையாளர்களை அதிகப்படுத்தும் பட்சத்தில் நேரடி விளம்பரங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

2. ஸ்பான்சர்ஷர்ஸ் ஷிப்:

உங்கள் வலைப்பதிவில் அதிகப்படியான ட்ராஃபிக் இருக்கும்போது, நமது பிளாக்கில் ஸ்பான்சர்ஷ் செய்ய வாய்ப்புள்ளது.

வணிக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளையோ, சேவைகளையோ பற்றி விளம்பரப்படுத்தி பதிவுகள் எழுதுவதற்கு பணம் செலுத்தும். ஒரு கட்டத்திற்கு மேல் விளம்பர தொகையை நீங்களே தீர்மானிக்கலாம். இந்க முறையில் சமூக ஊடகவியலாளர்கள் பலரும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

3. அப்பிளியேடட் புரோகிராம்:

பிளாக்கிங் மூலம் வருவாய் ஈட்ட மற்றொரு பொதுவான முறை அப்பிளியேடட் புரோகிராம். இதைப் பயன்படுத்தி நமது வலைப்பதிவு, மின்னஞ்சல், சமூக வலைதளங்களின் இடையே லிங்குகளை உருவாக்குவதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.

பல வலைப்பதிவாளர்கள் இந்த திட்டங்களைப் பயன்படுத்தி வெற்றிகரமாக தங்களது வலைப்பதிவைப் பணமாக்குகின்றனர்.

4. ஈவண்ட்:

வலைப்பதிவு மூலமாக நிகழ்சிகளை ஒருங்கிணைப்பதின் வாயிலாக வருமானத்தை பெற முடியும். பல முண்ணனி வலைப்பதிவாளர்கள் இதனை வெற்றிகரமாக நடத்தி பெருவாரியான வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

மாநாடுகள் முதல் கல்லூரி நிகழ்சிகள் வரை பெரிய அல்லது சிறிய என எந்த நிகழ்வாக இருந்தாலும் வாசகர்களை ஈர்ப்பதின் மூலம் ஸ்பான்சர்ஷிப்களின் மூலம் பணம் பெறலாம்.

5. மெம்பர்ஷிப் புரோகிராம்:

மெம்பர்ஷிப் புரோகிராம், உறுப்பினர் சந்தாக்கள் (மாதாந்திர அல்லது வருடாந்திர பிரீமியம்) குறிப்பிட்ட நீண்ட நாள் வாசகர்களுக்கு சலுகைகள் மூலம் வருமானம் ஈட்டலாம்.

சலுகைகளை பொறுத்து, இதில் குறிப்பிடத்தக்க வருமானத்தை பெற முடியும். நம் வாசகர்களுக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து கொடுக்கும் பட்சத்தில், இது வேறு எங்கும் கிடைக்காது என்பது உறுதி செய்யப்படும் போது இதன் மூலம் நினைத்த வருமானத்தை பெறலாம்.

6. பிஸ்னெஸ் புரோமோஷன்:

பல நிறுவனங்கள் தங்கள் விற்பனையை அதிகப்படுத்த நேரடியாகவே, மறைமுகமாகவே தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்ய வழிவகுக்கின்றன. அதில் ஒரு வகைதான் பிளாக்கிங். இதில் கண்டென்ட் மார்க்கெட்டிங் துறையும் அடக்கம்.

உதாரணத்திற்கு கார் தயாரிப்பு நிறுவனம் நடத்துகிறோம் என்றால், கார்கள் குறித்த விமர்சனங்கள், பராமரிப்பு, பழுதுபார்ப்பு தகவல் போன்றவற்றை உள்ளடக்கிய வலைப்பதிவுகளை எழுதி அதன் மூலம் மறைமுகமாக ஒரு காரை எளிதாக விற்பனை செய்யலாம். ஆன்லைனில் வாடிக்கையாளர்களின் வருகையை அதிகப்படுத்த இது ஒரு மிகச் சிறந்த முறை.

7. சர்வீஸ்:

பல பிளாக்கர்கள் தங்கள் வாசகர்களுக்கு தனிப்பட்ட சேவைகளை வழங்குவதின் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். எடுத்துக்காட்டாக மார்க்கெட்டிங் குறித்த வலைப்பதிவை எழுதிவருகிறோம் என்றால் அதில் ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்களுக்கு, கிராஃபிக் டிசைனர், ஆன்லைன் பினான்ஸ் அட்வைசர் போன்ற வல்லுனர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும்.

இதன் மூலம் வாசகர்களுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்துவதோடு, வருமானம் ஈட்ட வாய்ப்பு கொடுக்கலாம். இது போன்ற சேவைகள் மூலமாக வருமானம் பெறலாம்.

8. தயாரிப்புகள்:

பல வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவுகள் மூலம் இ-புக், வெர்சுவல் கோர்ஸ், படங்கள், வீடியோ, மியூசிக், மென்பொருள் போன்ற டிஜிட்டல் தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருமானம் ஈட்டி வருகின்றனர்.

சில வலைப்பதிவாளர்கள் கலைப்பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றையும் விற்கிறார்கள். இதில் ஆரம்பத்தில் அதிக லாபம் சாத்தியமில்லை என்றலும் கூட காலப்போக்கில் குறிப்பிடத்தக்க வருமானம் பெற முடியும்.

9. வேலை வாய்ப்புகள்:

பிளாக்கிங் மூலம் வேலை வாய்ப்பு தகவல்களை வழங்கலாம். இதில் வருமானமாக வேலை வழங்குபவரிடம் இருந்து ஒரு தொகையை பெற முடியும். இது நமது வாசகர்களின் வருகையை அதிகப்படுத்துவதோடு, பயனுள்ளதாக அமையும்.

10. பிளாக் விற்பனைக்கு:

குறிப்பிடத்தக்க வாசகர்களை கொண்ட பிளாக்கை விற்பனை செய்யும் போது 4-7 இலக்கம் வரை வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டு. இது பெரும்பாலும் அதிகம் பயன்பாட்டில் இல்லை என்றாலும், தனித்துவமான எழுத்துக்களுடன் உண்மையை பிரதிபலிப்பதாக இருக்கும் பட்சத்தில் இது சாத்தியம்.

பெரும்பாலானேர் பிளாக் தொடங்குவதற்கு ஒரு சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு எனது அறிவுரை இதுதான்: இப்போதே தொடங்குங்கள். தொடங்கி விட்டால் போதும் பிறகு இயங்கிக் கொண்டே இருப்பதோடு, வருமானத்திற்கான புதிய வழிகளை கற்றுக்கொண்டே இருப்பீர்கள்.

உடனே பிளாக் தொடங்க விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10 Proven Ways to Make Money Blogging
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+