முப்பதை அரைவாசியால் பிரித்து பத்தைக் கூட்டினால் வரும் தொகை எவ்வளவு ?

எந்த நேரமும் பொது அறிவு புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தால் மட்டுமே வெற்றிக்கான வழி வகுத்துவிடாது. ஐஏஎஸ் போன்ற தேர்வுகளின் போது தலையைச் சுற்ற வைத்த சில வியப்பூட்டும் கேள்வி, பதில்கள் குறித்தும் அறிந்

ஐஏஎஸ் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்போர் பெரும்பாலும் தங்களுக்கு அளித்த வாய்ப்பினை தவறவிடுவது தேர்வின் போது கேட்கப்படும் சில அசாத்தியமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமலேயே. போட்டியில் வெற்றி பெற்றவர்கள், தற்போது அத்துறையில் சீனியர் பதவியில் இருப்போர் உள்ளிட்டவர்கள் கூறும் மிகப் பெரிய அறிவுரையே, கொஞ்சம் பொதுவான கேள்விகளுக்கும் விடை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்பதே.

முப்பதை அரைவாசியால் பிரித்து பத்தைக் கூட்டினால் வரும் தொகை எவ்வளவு ?

அவர்கள் கூறுவதைப் போல எந்த நேரமும் பொது அறிவு புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தால் மட்டுமே வெற்றிக்கான வழி வகுத்துவிடாது. ஒரு அறையில் ஆடையில்லாத பெண்ணை பார்த்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியாளரின் வியப்பூட்டும் கேள்விக்கு மிக சாதுரியமாக பதில் அளித்து வெற்றிபெற்ற சரித்திரமும் இங்கே உள்ளது. வாருங்கள், அவர் இக்கேள்விக்கு அளித்த பதில் என்ன ? ஐஏஎஸ் போன்ற தேர்வுகளின் போது தலையைச் சுற்ற வைக்கும் இதர கேள்விகள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.

கேள்வி 1 :

கேள்வி 1 :


நீங்கள் ஒரு பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறீகள். முதல் நிறுத்தத்தில் நான்கு பேர் இறங்கி விட்டனர். இரண்டாம் நிறுத்தத்தில் மூன்று பேர். மூன்றாம் நிறுத்தத்தில இரண்டு பேர். இப்போது கேள்வி என்னவென்றால் அந்த பேருந்தின் நடத்துனர் கண் எந்த நிறமாக இருக்கும்.

விடை:

யாரோ ஒருவரது கண்ணை கவணிக்காதது போல் தினறிவிடாமல் கேள்வியை ஆராய்ந்தால் தெரியும். அந்த பேருந்து நடத்துனரே நீங்கள் தானே. அப்படியானால் உங்களது கண் நிறத்திலேயே அந்த நடத்துனரின் கண் நிறமும் இருக்கும்.

 

கேள்வி 2 :

கேள்வி 2 :


ஒருவர் நான்கு எஞ்சிய சிகரெட்டைக் கொண்டு ஒரு சிகரெட்டை உருவாக்கும் வித்தையை அறிந்திருந்தார். அவரிடம் 16 எஞ்சிய சிகரெட்டுகள் இருந்தால் அதனைக் கொண்டு எத்தனை சிகரெட்டை உருவாக்க முடியும் ?

விடை:

உடனே 4 சிகரெட் என பதில் அளித்து விடாதீர்கள். அந்த 4 சிகரெட்டையும் கொண்டு அவற்றின் மூலம் மீண்டும் ஒரு சிகரெட்டை உருவாக்க முடியும் அல்லவா. அப்படியானால் மொத்தம் 5 சிகரெட்டுக்களை அவரால் உருவாக்க முடியும்.

 

கேள்வி 3 :
 

கேள்வி 3 :


உங்களிடம் இரண்டு மணற்கடிகாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று 11 நிமிடங்களைக் கணக்கிடக் கூடியது. மற்றொன்று 13 நிமிடங்களைக் கணக்கிடும். இவை இரண்டையும் கொண்டு எவ்வாறு 15 நிமிடங்களை சரியாகக் கணிக்க முடியும் ?

விடை:

என்னங்க, தலையில் வேர்த்து ஊத்துதா... கவலைய விடுங்க. அதற்கான விடை இதோ. "இரண்டு மணற் கடிகாரங்களையும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும். 11 நிமிடங்களில் முடியும் கடிகாரத்தை உடனே மறு பக்கம் திருப்ப வேண்டும். 13 நிமிடங்களில் முடியும் மணற்கடிகாரம் முடியும் போது 11 நிமிட மணற் கடிகாரம் 2 நிமிடங்களைக் கடந்திருக்கும். எனவே 13 நிமிடங்களில் முடியும் மணற் கடிகாரம் முடியும் போது 11 நிமிட மணற்கடிகாரத்தை முண்டும் மறு பக்கம் திருப்ப 13+2+ = 15 நிமிடங்களை சரியாக கணிக்க முடியும்.

 

கேள்வி 4 :

கேள்வி 4 :


சில மாதங்கள் 31 நாட்களைக் கொண்டுள்ளன. சில மாதங்கள் 30 நாட்களைக் கொண்டுள்ளது. ஒரு வருடத்தில் எத்தனை 28 நாட்களைக் கொண்ட மாதங்கள் உள்ளன ?

விடை:

பெரும்பாலும் இந்த கேள்விக்கு சட்டென நீங்கள் அளிக்கும் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். அதுவும் பிப்ரவரி மாதம் மட்டுமே என அடுத்த பதிலையும் சேர்த்துக் கூறுவீர்கள். ஆனால் அது தவறு. அனைத்து மாதங்களிலுமே 28 நாட்கள் உள்ளது.

 

கேள்வி 5 :

கேள்வி 5 :


முப்பதை அரைவாசியால் பிரித்து பத்தைக் கூட்டினால் வரும் தொகை எவ்வளவு ?

விடை:

சற்று குழப்பமான கேள்வி தான். ஆனால், மீண்டும், மீண்டும் கேள்வியை படிப்பதன் மூலம் ஓர் தெளிவு ஏற்படும். இங்குதான் உங்களுடைய அறிவையும், கற்றுத் தேர்ந்த கணிதத்தையும் ஒருசேர பயண்படுத்த வேண்டும். இதற்கான விடை 70 ஆகும். எவ்வாறெனில், கேள்வியில் உள்ள அரைவாசியால் என்பது 1/2 அல்லது 0.5 என்பதைக் குறிக்கிறது. எனவே (30/0.5) + 10 = 70.

 

கேள்வி 6 :

கேள்வி 6 :


சிவப்பு மாளிகை வலது பக்கத்தில் உள்ளது. பச்சை மாளிகை இடது பக்கத்தில் உள்ளது. கருப்பு மாளிகை உங்கள் முன்னால் உள்ளது. அப்படியானால் வெள்ளை மாளிகை எங்குள்ளது ?

விடை:

கிழக்கு, மேற்கு, வடக்கு என குழப்பமடையாமல் பதில் கூறுங்கள். வெள்ளை மாளிகை அமெரிக்காவில் உள்ளது என்று.

 

கேள்வி 7 :

கேள்வி 7 :


குளிரான நேரத்தில் வீட்டிற்குள் நுழைகிறீர்கள். உங்களிடம் ஒரே ஒரு தீக்குச்சி மட்டுமே உள்ளது. வீட்டினுள் ஒரு மெழுகுவர்த்தி, ஒரு விளக்கு உள்ளது. இதில் முதலில் எதனை பற்றவைப்பீர்கள் ?

விடை:

பெரும்பாலாளோர் சிறுவயதிலேயே இதற்கான விடையை அறிந்திருப்பீர்கள். இதற்கான விடை முதலில் தீக்குச்சியைத் தான் பற்ற வைப்பேன் ஆகும்.

 

கேள்வி 8 :

கேள்வி 8 :


ஒரு தாய்க்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவற்றில் அரைவாசி ஆண்கள். இது எவ்வாறு சாத்தியமாகும் ?

விடை:

சாத்தியமாகும்ங்க... அத்தாயின் உடைய குழந்தைகள் அனைவருமே ஆண் குழந்தைகள் தான். இதில் அரைவாசி என பிரித்தாலும் ஆண் குழந்தைகள் தானே.

 

கேள்வி 9 :

கேள்வி 9 :


ஒருவர் தன் மகனை காரில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை உயிரிழந்தார். மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அச்சிறுவனைக் கண்ட மருத்துவர் இது என் மகன் எனக் கூறினார். யார் இந்த மருத்துவர் ?

விடை:

ஒரு சிறுவனுக்கு இரு தந்தை என சில்லியான பதில் அளிக்காமல் புத்திசாலித் தனமாக செயல்பட வேண்டிய நேரம் இது. அந்த மருத்துவர் காயமடைந்த சிறுவனின் தாய். அவருக்கும் அது மகன் தானே.

 

கேள்வி 10 :

கேள்வி 10 :


கேள்வி : ஒரு அறையில் ஆடையில்லாத பெண்ணை பார்த்தால் என்ன செய்வீர்கள்?

பதில் : நான் அந்த பெண்ணை எடுத்து மடியில் வைத்து விளையாட ஆரம்பித்துவிடுவேன்

கேள்வியாளர் : என்ன? ஏன் அப்படி?

பதிலாளர் : நீங்கள் பெண் என்று சொல்பவருக்கு வயது குறிப்பிடவில்லை. அதனால் அவரை நான் பெண் குழந்தை என நினைத்தேன். பெண் குழந்தையை மடியில் வைத்து கொஞ்சுவதில் என்ன தவறு?

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10 Most Amassing Questions Asked In The Indian Civil Service Examinations
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X