ஆபீசுல கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும், உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும் இருந்தா இப்படித்தான்!

ஒரு வேலை தனித் தன்மையாக செயல்பட தொழில்நுட்பம் மட்டும் போதுமா என்றால் நிச்சயமாக இல்லை எஎன்பதே வல்லுநர்களின் கருத்தாகும்.

ஆபீசுல கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும், உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும் இருந்தா இப்படித்தான்!

ஒரு வேலை தனித் தன்மையாக செயல்பட தொழில்நுட்பம் மட்டும் போதுமா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே வல்லுநர்களின் கருத்தாகும். அலுவலகத்தில் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு உயர் பதவி படிக்கட்டுகளில் சரசரவென ஏறி முதலிடம் பிடிக்க என்னென்ன மென்திறமைகள் தேவை எனத் தெரியுமா ?

விதிகளை பின்பற்றுதல்

விதிகளை பின்பற்றுதல்


நமக்கு நிர்வாகத்தின் மூலம் என்ன பொறுப்புகள் வேண்டுமானலும் கொடுக்கப்பட்டிருக்கலாம். நாம் உயர் அதிகாரி என்பதற்காக 5 நிமிடம் தாமதமாக போனால் பரவாயில்லை என்ற எண்ணம் கொண்டிருப்பது மிகத் தவறானது. பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உங்களுக்கும் பொருந்தும். அதைச் சரியாக பின்பற்றுவது உங்களது கடமை. இது நாம் எப்போதும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

நமக்கான இடத்தை நிரப்புதல்

நமக்கான இடத்தை நிரப்புதல்


நம்மை என்ன நோக்கத்திற்காக இந்த நிறுவனம் பணியமர்த்தி உள்தோ அதை சிறந்த முறையில் செய்து முடிப்பது சிறந்தது. சிறு துளிதான் பெரு வெள்ளமாகும். ஒவ்வெருவரும் தனக்கான வேலையை சரியாக செய்யும் பட்சத்தில் நிர்வாகம் சரியான முறையில் முன்னேற்றப் பாதையில் இயங்கும். மேலும், உங்களுக்கு என ஒதுக்கப்பட்ட வேலையை உங்களால் மட்டுமே செய்து முடிக்க முடியும் என்ற நிலையை கொண்டு வர வேண்டியது நீங்கள் தான்.

ஆவணப்படுத்தும் திறமை

ஆவணப்படுத்தும் திறமை


வேலை குறித்து ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தால், அதைப்பற்றி முழுமையாக உள்வாங்குவதோடு, அதை சரியான முறையில் பின்பற்றுவதும், ஆவணப்படுத்துவதும் போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது இங்கு அல்ல வேறு எங்கு பணியாற்றினாலும் உங்களுக்குப் பயன்படும்.

அளவீடு செய்யும் திறமை

அளவீடு செய்யும் திறமை


அது எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். 100 பேர் கலந்து கொள்ளும் கூட்டமாக இருந்தால் அதற்கான தயாரிப்பு என்ன? என்பதில் தொடங்கி இதே வேகத்தில் நகர்ந்தால் நிர்வாகம் இந்தாண்டு இவ்வளவு லாபம் ஈட்டும் என்பது வரை தெளிவாக அளவீடு செய்யும் திறமையினை நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.

சூழ்நிலைகளை கையாளும் திறன்

சூழ்நிலைகளை கையாளும் திறன்


நிர்வாகம் எப்போதுமே சரியான பாதையில் தான் பயணிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாத ஒன்று. எனவே, எப்போதும் எதையும், எதிர்கொள்ள தயாராக இருப்பதோடு, அதை யாருக்கும் பாதகமில்லாமல் எடுத்து கூறும் திறமையனையும் பெற்றிருக்க வேண்டும்.

ஒத்துப்போகும் திறன்

ஒத்துப்போகும் திறன்


எப்போதும் தனியாக தெரிய வேண்டும் என ஆசைப்படுவது தவறில்லை அதற்காக காலரை தூக்கிவிட்டுக்கொண்டே சுற்றக்கூடாது. எல்லா விஷயங்களில் இல்லாவிட்டாலும் கூட நிர்வாகத்தின் நலன் கருதி எடுக்கும் முடிவுகளில் மட்டுமாவது ஒத்துப்போகும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும்.

மாற்றங்களை ஏற்படுத்துபவராகத் திகழுதல்

மாற்றங்களை ஏற்படுத்துபவராகத் திகழுதல்


வீடு எப்படியோ அப்படித்தான் நாடும் என்பது போல் மாற்றங்களை நம்மில் இருந்து கொண்டுவர வேண்டும். இதுதான் ஒரு சரியான முன் மாதிரிக்கான அடையாளம் ஆகும். குறிப்பிட்ட வேலைகளை திட்டமிட்டு சரியாக முடிக்கும் பட்சத்தில் எவ்வித பிரச்சனைகளும் வர வாய்ப்பில்லை. மாற்றத்திற்கான அடையாளமாக திகழ செயல்படுங்கள்.

வளைந்து கொடுக்கும் தன்மை

வளைந்து கொடுக்கும் தன்மை


ஒரு சில நேரங்களில் நம்மை அறியாமல் வேலையில் தாமதம் ஏற்படவும் அல்லது தொய்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் எங்கு நம் தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்வதை விட்டுவிட்டு, ஊழியர்களிடம் கரராக இருந்து ஒரு பயனும் இல்லை. நெழிவுசுழிவாக பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும்.

அலசி ஆராய்ந்து சிந்திக்கும் திறன்

அலசி ஆராய்ந்து சிந்திக்கும் திறன்


உங்களுக்கு என ஒரு வேலை ஒப்படைக்கப்பட்டிருந்தால் அது எதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது ? அதன் முக்கியத்துவம் என்ன ? உள்ளிட்ட காரணிகளை அலசி ஆராய்ந்து அதற்கேற்றது போல் செயல்பட வேண்டும். நிர்வாகத்தின் சிக்கல் என்ன, ஊழியர்களின் சிக்கல் என்ன போன்ற விஷயங்களை ஆராய்ந்து செயல்படும் போது வெற்றிக்கான காற்று நம் பக்கம் மட்டுமே வீசும்.

குழு நிர்வாகத் திறன்

குழு நிர்வாகத் திறன்


இன்று உங்கள் டீம் லீடர் விடுமுறை உங்களது அணியை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு கட்டாயம் வந்தால், அதை செயல்படுத்தும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும். எப்போதும் தலைமைப் பண்பிற்காக தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். எதையும் அணுகும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும்.

காலங்கடந்து #MeToo போடுறதுக்கு பதிலா அலுவலகத்துல பெண்கள் இப்படியும் நடந்துக்கலாமே!காலங்கடந்து #MeToo போடுறதுக்கு பதிலா அலுவலகத்துல பெண்கள் இப்படியும் நடந்துக்கலாமே!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10 Easy Steps to Solving Every Problem in the Workplace
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X