சென்னை: வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவில் (டபிள்யூஐஐ) பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 27-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

வைல்ட்லைப் பயாலஜிஸ்ட், கன்சர்வேஷன் ஜெனிசிஸ்ட், கன்சர்வேஷன் எக்காலஜிஸ்ட், ஜிஐஎஸ் ஸ்பெஷலிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.
விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் The Nodal Officer, Tiger Cell, Wildlife Institute of India, Chandrabani, Dehradun (Uttarakhand) என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும்.
வயதுச் சலுகை, கல்வித் தகுதி, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு www.wii.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
டெஹ்ராடூனைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா அமைந்துள்ளது. நாட்டிலுள்ள வனவிலங்குகள் ஆராய்ச்சி, அழிந்து வரும் இனங்கள் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஈடுபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications

