சென்னை: கர்நாடக மாநிலம் பெளகாவியிலுள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில்(விடியு) பேராசிரியர், உதவிப் பேராசிரியர், துணை பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுதியும், திறமையும் உள்ளவர்கள் ஜனவரி 30-ம் தேதிக்குள் இந்தப் பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பேராசிரியர் பணியிடங்கள் 9-ம், துணைப் பேராசிரியர் பணியிடங்கள் 19-ம், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 32-ம் காலியாகவுள்ளன.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது 40-க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 38-க்கு மிகாமல் இருக்கவேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பங்களை The Registrar, Visvesvarya Technological University, "Jnana Sangama" Campus, Belagavi - 590018 (Karnataka) என்ற முகவரிக்கு ஜனவரி 30-க்குள் அனுப்பவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு விடியு இணையதளமான http://vtu.ac.in-ல் காணலாம்.


Click it and Unblock the Notifications
