யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்

குடிமைப் பணிகளில் சேர உதவு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) முடிவுகள் இன்று ரிலீஸாகியுள்ளன. இதில் லக்னோவைச் சேர்ந்த இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம் பிடித்துள்ளார். யுபிஎஸ்சி தேர்வு எழுதிய தேர்வர்வர்கள் https://upsc.gov.in/FR-CSM-23-engl-160424.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து, முடிவுகளை அறியலாம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் எனப்படும் குடிமைப் பணிகளுக்கான சிறப்புத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வுகள் யுபிஎஸ்சி சார்பில் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்தத் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டன. இந்தப் பணிகளுக்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எழுத்துத் தேர்வும், பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன.

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்

இதைத் தொடர்ந்து தேர்வு முடிவகுள் இன்று வெளியாகியுள்ளன. அதன்படி, மொத்தம் 1,016 பேர் மத்திய அரசு குடிமைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில் லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவத்ஸாவா அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

அனிமேஷ் பிரதான் 2-வது இடத்தையும், டோனூரு அனன்யா ரெட்டி 3வது இடத்தையும் பெற்று உள்ளனர்.
இந்தத் தேர்வில் மொத்தம் ஆயிரத்து 16 பேர் தேர்ச்சி பெற்று உள்ள நிலையில் அதில் 664 பேர் ஆண்களாவர். மேலும் இதில் 352 பெண்கள் இருக்கின்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு அரசுப் பணிகளுக்கு நியமனம் செய்ய தேர்வு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்களில் மூன்று பேர் ஆண்கள் மற்றும் 2 பெண்கள் ஆவர்.

யுபிஎஸ்சி தேர்வுகள் முதல் நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் மூன்று கட்டங்களிலும் தேர்ச்சி பெறும் போட்டியாளர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் மத்திய அரசு பணிகள் வழங்கப்படுகின்றன.

தேர்வானவர்களின் மதிப்பெண் பட்டியல் அடுத்த 15 நாட்களுக்குள் வெளியிடப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர் இளைஞர், இளைஞிகள் மாநிலங்கள் வாரியாக ஒதுக்கப்பட்டு, ஆட்சியர்கள், மாவட்ட வன அலுவலர்கள், பாஸ்போர்ட் அதிகாரி, வருமான வரி, ஜிஎஸ்டி வரி அதிகாரிகள், வெளியுறவுத்துறை ஆணையர்கள் உள்ளிட்ட பயிற்சி பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்.

யுபிஎஸ்சி தேர்வு எழுதிய தேர்வர்வர்கள் https://upsc.gov.in/FR-CSM-23-engl-160424.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து, முடிவுகளை அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Union Public Service Commission has declared UPSC Civil Services Final result 2024 on April 16, 2024. Aditya Srivastava has topped the UPSC CSE 2023 examination. The results of the UPSC Civil Services examination can be checked by all candidates who appeared on the official website of UPSC at upsc.gov.in and also on upsconline.nic.in.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+