ப்ளீஸ் பாருங்க ... உங்க ஊர்ல போலி பல்கலைக்கழகம் இருக்கு?

'போலி' என்ற வார்த்தையை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள்; ஆனா இதிலும் போலி? என நினைக்க தோன்றும் அளவுக்கு போலி வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது.

தலை முதல் பாதம் வரை, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில், போலிகள் கோலோச்சு இருக்கிறது.
அந்தவரிசையில், நமக்கு கல்வி கற்று தரும் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களும் போலி என்றால் உங்களால் ஜீரணித்து கொள்ள முடியும்? நம்பி தான் ஆகனும்.

நாடு முழுவதும் 21 யூனிவர்சிட்டி போலி

அசலை விட, போலிகளை கண்டறிய ஒரு அசாத்திய திறமை வேண்டும். அந்தளவுக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் போலியின் தாக்கம் வேரூன்றி ஊடுருவியுள்ளது.

அந்த வரிசையில், நாடு முழுவதும் செயல்பட்டு வந்த போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டு, பல்கலைக்கழக மானியக்குழு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எது பல்கலைக்கழகம்

கடந்த 1956ஆம் ஆண்டு, பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் 22ம் பிரிவின் கீழ், மத்திய அரசின் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகமும்; மாநில மற்றும் பிராந்திய அரசின் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகமும்; தன்னாட்சி வழங்கப்பட்ட உயர்கல்வி நிறுவனமும், நாடாளுமன்ற சட்டத்தால் பட்டம் வழங்குவதற்கு அதிகாரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனமும் தான் 'பல்கலைக்கழகம்' என்று பொருள்படும்.

அதிர்ச்சி அறிவிப்பு

அதற்கு மாறாகவும், மேற்கூறிய சட்டத்திற்குப் புறம்பாகவும், பல்கலைக்கழகம் என்ற பெயரில் பட்டம் வழங்கிய 21 போலி நிறுவனங்களின் பெயர் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

அந்த 21 அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள், போலி என்றும், எந்தப் பட்டத்தையும் வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு உரிமை இல்லை என்றும், யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

இதுதாங்க போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்

தில்லி

• வர்த்தகப் பல்கலைக்கழகம் லிமிடெட், தரியாகன்ஜ், தில்லி.

• ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், தில்லி.

• தொழிற் பல்கலைக்கழகம், தில்லி.

• மாற்றுமுறை தீர்வுக்கான மத்தியச் சட்டப் பல்கலைக்கழகம், எடிஆர் ஹவுஸ், 8ஜே, கோபாலா டவர், 25 ராஜேந்திர ப்ளேஸ், புது தில்லி - 110 008.

• இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், புது தில்லி.

• சுய வேலைவாய்ப்பிற்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம், ரோஜ்கார் சேவாசதன், 672, சஞ்சய் என்கிலேவ், ஜி.டி.கே. டிப்போ எதிரில், தில்லி -110 033

• ஆத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மிகப் பல்கலைக்கழகம்), 351-352, பேஸ் - I, பிளாக் - ஏ, விஜய் விஹார், ரித்தலா, ரோஹிணி, தில்லி -11085

• அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், அலிபூர், டெல்லி

கர்நாடகா

பதகன்வி சர்க்கார் உலகத் திறந்தநிலை பல்கலைக்கழகக் கல்விக்கழகம், கோகக், பெல்காம், கர்நாடகா.

கேரளா

செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷநட்டம், கேரளா

மகாராஷ்டிரா

• ராஜா அரபிக் பல்கலைக்கழகம், நாக்பூர், மகாராஷ்டிரா.
மேற்கு வங்காளம்

• இந்திய மாற்றுமுறை மருத்துவ நிறுவனம், கொல்கத்தா

• மாற்றுமுறை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,8-ஏ, டைமண்ட் ஹார்பர் தெரு, பில்டெக் இன், இரண்டாவது மாடி, தாகூர்புர்குர், கொல்கத்தா - 700 063

நாடு முழுவதும் 21 யூனிவர்சிட்டி போலி

உத்தரப் பிரதேசம்

• காந்தி ஹிந்தி வித்யாபீடம், பிரயாக், அலகாபாத், உத்தரப் பிரதேசம்

• தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர், உத்தரப் பிரதேசம்.

• நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம் (திறந்தநிலை), அச்சல்தல், அலிகர், உத்தரப் பிரதேசம்

• பாரதிய சிக்ஷா பரிஷத், பாரத் பவன், பைசாபாத்சாலை, லக்னோ, உத்தரப் பிரதேசம்

ஒடிஸா

• நபபாரத் சிக்ஷா பரிஷத், அனுபூர்ணா பவன், பிளாட் எண்: 242, பானி தங்கி சாலை, சக்தி நகர், ரூர்கேலா - 769 014

• வட ஒரிஸா வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஒடிஸா.

எப்பா புதுச்சேரிஸ்டூடன்ஸ்கவனம்

புதுச்சேரி

• ஸ்ரீ போதி உயர் கல்வி கல்விக்கழகம், எண்: 186, திலாஸ்பேட், வழுதாவூர் சாலை, புதுச்சேரி - 605 009

• கிறிஸ்து புதிய ஏற்பாடு நிகர்நிலைப் பல்கலைக்கழகம். குண்டூர், ஆந்திரா

யு.ஜி.சி., அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ட்விட்டர் வாயிலான அறிவிப்பு காண கீழே சொடுக்கவும்...

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The University Grants Commission, also known as UGC, has created a shock by publishing a list of fake universities operating across the country, including the Union Territory of Puducherry.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+